Published:Updated:

ஸ்வீடன் விருது, இந்திய விருது... வினிஷா ஹேப்பி!

 வினிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
வினிஷா

#Utility

``அந்த இஸ்திரி தாத்தாவையும், கரிப்புகையையும், கொட்டப் பட்ட கரியையும் பார்த்தப்போ எனக்குத் தோணின ஐடியாதான், இந்த சர்வதேச விருதை எனக்குக் கிடைக்க வெச்சிருக்கு. இப்போ இந்திய அரசின் விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது ரொம்ப உற்சாகமா இருக்கு''

- மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசுகிறார் வினிஷா உமாசங்கர். பருவநிலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமும் ஆக்கமுமாகச் செயல்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முக்கிய சர்வதேச விருதான ‘குழந்தைகளுக்கான பருவநிலை விருது' பெற்றிருக்கும் இளம் எனர்ஜி. திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா சர்வதேசப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி.

ஸ்வீடன் விருது, இந்திய விருது... வினிஷா ஹேப்பி!

``ஒருநாள் நான் அம்மாகூட போயிட்டிருந்தப்போ, இஸ்திரி போடும் தாத்தா ஒருத்தர் இஸ்திரிப் பெட்டியில் கரியைப் போட்டு ஊதி, புகையால இருமினு ரொம்ப சிரமப் பட்டுட்டு இருந்தார். இவரை பல தடவை பார்த்திருக்கேன். மேலும், பயன்படுத்துற கரியை தினமும் ரோட்டோரமா கொட்டுவார். இப்படி இஸ்திரி வண்டி போடுற எல்லாருமே கரியை ரோட்டுல, சாக்கடைலனு கொட்டுறதை பார்த்திருக்கேன். இந்த மாதிரி எத்தனை கிலோ கரி தினமும் நம்ம நாட்டுல எரிக்கப்படுது, அதுக்காக எத்தனை மரங்கள் வெட்டப்படுது, அது ஏற்படுத்துற சுற்றுச்சூழல் தீங்கு என்னனு யோசிச்சேன். பயன்படுத்துறவங்களையும் சுற்றுச் சூழலையும் பாதிக்காத வகையில, மின்சாரம் இல்லாம சூரிய ஒளியில இயங்கும்வகையில சோலார் இஸ்திரி பெட்டி வண்டியை வடிவமைக்க ஆரம்பிச்சேன். இந்த இஸ்திரிப் பெட்டி உள்ள சைக்கிள் வண்டியின் மேற்புறத்துல சோலார் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கு. 100 ஹெச் திறன்கொண்ட பேட்டரியை இணைச்சிருக்கேன். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேர சூரிய ஒளி தேவைப்படும். அதன் பிறகு 6 மணி நேரம்வரை தொடர்ச்சியா இதை பயன்படுத்த முடியும்'' என்றவர், இந்தக் கண்டுபிடிப்பு தனக்கு பெற்றுத் தந்துள்ள விருதின் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.

``ஸ்வீடனை சேர்ந்தது, `குழந்தைகளுக்கான பருவநிலை அறக்கட்டளை'. இதன் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்புல எதிர்காலத்துக்குக் கைகொடுக்கிற புதுமைகளைக் கொண்டுவர நினைக்கிற பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படுவது, `குழந்தைகளுக்கான பருவநிலை விருது (Children's Climate Prize)'. 12 முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் இதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுறாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களைக் கொண்ட நடுவர் குழு இந்த ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்த வெற்றியாளர்கள்ல, நானும் ஒருத்தி என்பது பெருமையா இருக்கு. `சுத்தமான காற்று' பிரிவுல எனக்கு இந்த விருது கிடைச்சது. ஸ்வீடனின் துணைப் பிரதமர் இசபெலா லோவின், ஆன்லைன் விருது நிகழ்ச்சியில் இந்த விருதை எனக்கு வழங்கினாங்க'' என்று சொல்லும் வினிஷா விருதுடன் டிப்ளோமா சான்றிதழ், பதக்கம் மற்றும் 8.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்வீடன் விருது, இந்திய விருது... வினிஷா ஹேப்பி!

``என்னோட இந்த சோலார் இஸ்திரி வண்டி வடிவமைப்பை, குஜராத்ல இருக்கிற நேஷனல் இன்ஃபர்மேஷன் அறக்கட்டளையின் பொறியாளர்கள் காப்புரிமைக்காக விண்ணப் பிச்சிருக்காங்க. இந்த ஆண்டு இறுதிக்குள் காப்புரிமையும் கிடைச்சிடும்'' என்பவருக்கு இன்னும்மிச்சமிருக்கின்றன சந்தோஷங்கள்.

``மத்திய அரசால் 18 வயதுக்குட்பட்டவர் களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான `பால சக்தி புரஸ்கார்’ விருதும் வினிஷாவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கு. இந்த விருது வரும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்னு சொல்லியிருக்காங்க'' என்று பெருமையும் பூரிப்புமாகச் சொல்கிறார்கள் வினிஷாவின் பெற்றோர் உமாசங்கர் - சங்கீதா.

மேலும், கடந்த ஆண்டு டாக்டா் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இக்னைட் விருது பெற்றிருக்கிறார் வினிஷா. தானாக இயங்கும் ஸ்மார்ட் மின்விசிறி கண்டு பிடிப்புக்காக, 'சிறந்த பெண் கண்டுபிடிப்பாளர்' பிரிவில் டாக்டா் பிரதீப் பி தேவனூா் விருதும் பெற்றிருக்கிறார்.

``முதல்வர் எடப்பாடி பழனி சாமி டிவிட்டர்ல எனக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிச்சிருந்தாங்க. சின்ன வயசுல எங்க அப்பா எனக்குப் பரிசாகக் கொடுக்க அறிவியல் களஞ்சியம் புத்தகம்தான் எனக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டியது. அது தொடரும், நிறைய ஐடியாஸ் இருக்கு''

- இன்னும் பல புதிய சிந்தனைகளை தேக்கி வைத்திருக்கும் வேகத்துடன் சொல்கிறார் வினிஷா.