பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் ஆடம்பர செலவுகளைக் குறைப்பதே பெரும்பாலான இல்லத்தரசிகளின் குறிக்கோளாக இருக்கிறது.

அதே நேரத்தில், பெண்கள் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆடை விஷயத்திலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில் தயக்கம் அவர்களுக்கு. இந்தச் சூழலைச் சமாளித்து, நியூ நார்மல் லைஃபில் நீங்களும் நியூ லுக்கில் அசத்த எளிமையான ஃபேஷன் டிப்ஸ் வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் வின்யா ஏழுமலை.

``இந்த நேரத்தில் மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியும்போது, கூடுதல் எரிச்சல் ஏற்பட்டு வேலைகளில் கவனம் செலுத்த இயலாமல் போகலாம். அதனால், கூடுமானவரை கொஞ்சம் தளர்வான ஆடைகளையே பயன்படுத்துங்கள். லெகி்ங்ஸ், ஜீன்ஸ் அணிவது தவிர்த்து பலாசோ, ஜம்ப் சூட், ஸ்கர்ட் போன்றவற்றுக்கு மாறலாம். நாம் அன்றாடம் அணியும் ஆடைகளை சோப்புத்தண்ணீர் மற்றும் கிருமிநாசினி கலந்த தண்ணீரில் துவைக்க வேண்டியது அவசியம் என்பதால், சமிக்கி வேலைப்பாடுகள், ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்த டிசைனர் ஆடைகளைத் தவிர்த்து சிம்பிளான காட்டன் ஆடைகளை அணிவது நல்லது.

வித்தியாசமான அக்சஸரீஸ், விதம்விதமான ஹேர்ஸ்டைல்ஸும் கூட தனி அழகு தரும். வீட்டிலிருக்கும் பழைய புடவைகளை ஜம்ப் சூட், ஸ்கர்ட் போன்று வடிவமைத்தும் அணியலாம்'' என்கிறார்.

புதிய ஆடைகளுக்கென்று நிறைய பணம் செலவழிக்காமல், ஏற்கெனவே உள்ள ஆடைகளில் வித்தியாசமான கெட்டப்களை முயற்சி செய்து பார்க்கலாம். நியூ லுக்குக்குப் புதிய ஆடைதான் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களிடம் இருக்கும் ஆடைகளை மிக்ஸ் அண்டு மேட்ச் செய்வதன் மூலமோ, சின்ன சின்ன வேலைப்பாடுகள் செய்வவதன் மூலமோகூட நியூ லுக் கொண்டு வர இயலும்.

புடவை:  புடவை உங்கள் சாய்ஸ் எனில், டிரெண்டியான ரஃபில் ப்ளவுஸ், கோல்டு ஷோல்டர் ப்ளவுஸ் போன்றவற்றை மேட்ச் செய்தால் தனித்துவமாக இருக்கும். ப்ளவுஸும் சிம்பிளாக இருந்தால் ப்ளவுஸ் நிறத்திலேயே இடுப்பு பகுதிக்கு ஒரு பெல்ட் வடிவமைத்து அணிந்தால், பழைய புடவையிலும் லைக்ஸ் அள்ளலாம்.

குர்தி: உங்களிடம் இருக்கும் குர்தாவுக்கு வழக்கம்போல் துப்பட்டா அணியாமல், டெனிம் ஜாக்கெட் அல்லது டிசைனர் ஜாக்கெட் அணிந்து, ஆக்ஸிடைஸ்டு நகைகள் அணிந்தால் டிரெண்டியாகத் தெரியும். கான்ட்ராஸ்ட்டான நிறத்தில் புரோகேட் அல்லது பனராசி துப்பட்டாவுடன் ஆன்ட்டிக் நகைகள் அணிந்தால் டிரெடிஷனல் லுக் கிடைக்கும். கேஷுவல் லுக் பிரியைகள் குர்தா - ஜீன்ஸ் அணிந்து குர்தாவைவிட ஒரு இன்ச் நீளமான ஓவர்லே மற்றும் ஷூ அணியலாம்.

ஸ்கர்ட்: உங்களிடம் இருக்கும் ஸ்கர்ட்டுகளுக்கு கான்ட்ராஸ்ட்டான நிறத்தில் ரா சில்க் தாவணியை மேட்ச் செய்து அணிந்தால் கிராண்டான லெஹெங்கா லுக் கிடைக்கும். ஸ்கர்ட் உடன் புடவையை மேட்ச் செய்து கேன் கேன் டைப்பிலும் கட்டிக்கொள்ளலாம். ஸ்கர்ட்டுகளுக்கு கலம்காரி, புரோகேட், காட்டன், ரா சிலக் போன்ற மெட்டீரியலில் வெவ்வேறு நிறங்களில் கிராப் டாப் வைத்துக்கொள்ளலாம்.

சல்வார்: சாதாரண காட்டன் சல்வாரில், வழக்கமான முறையில் டாப் தைத்துக்கொண்டு, பாட்டம் துணியை ஸ்கர்ட் அல்லது பலாசோ பேன்ட் போன்று வடிவமைத்தால் வழக்கமான லுக்கில் இருந்து சற்றே வேறுபடுத்திக் காட்டலாம். நீங்கள் டிசைன் செய்துள்ள பலாசோ அல்லது ஸ்கர்ட்டுக்கு மேட்ச்சாக கிராப் டாப் அல்லது டி-ஷர்ட்டை மேட்ச் செய்தால், இன்னொரு லுக்கில் வெரைட்டி காட்டலாம்.