22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அன்புசூழ் உலகை உருவாக்க வேண்டும்!

மனிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
மனிஷா

சேவை

சாலையோரங்களில் ஆதரவின்றி சுற்றித்திரியும் கைவிடப்பட்ட முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மருத்துவ சிகிச்சை, உணவு, உடை வழங்கி, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கிறார் மனிஷா. இப்படி இவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாத்து, பராமரித்த ஆதரவற்றவர்களின் எண்ணிக்கை 130.

னக்குச் சொந்த ஊர் ஈரோடு. பி.எஸ்ஸி நர்சிங் முடிச்சிருக்கேன். சின்ன வயசில் ராணுவ சேவைக்குப் போகணும்னு ஆசை. `பொம்பள புள்ளைக்கு ராணுவமெல்லாம் செட் ஆகாது’ன்னு வீட்டில் கண்டிப்போடு சொல்லிட்டாங்க’’ என்கிற மனிஷா குரலில் மென்சோகம்.

``ப்ளஸ் டூ முடிச்சதும் நர்சிங் தேர்ந்தெடுத்தேன். நர்சிங் படிக்கிறவங்களை அரசு மருத்துவமனைக்குப் பயிற்சிக்கு அனுப்புவாங்க. அங்கே நோயாளிகளை மனுஷங்களாகவே மதிக்காம நடத்தறதைப் பார்த்ததும், மனசு உடைஞ்சு போச்சு. சிகிச்சைக்கு வரும் மக்களிடம் முகம்கோணாமல் நாலு வார்த்தைப் பேசினாலே போதும். நம்மைக் கடவுளா பார்ப்பாங்க. நான் அதைப் பின்பற்ற ஆரம்பிச்சேன். அதனால் அந்த மக்களிடமிருந்து கிடைத்த அன்பு, சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. அதுதான் என் சேவையின் ஆரம்பம்.

ஒருநாள், தஞ்சாவூரில் முதியவர் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இருக்கார். அவருக்கு உதவி வேண்டும்னு வாட்ஸ்அப்ல ஒரு வீடியோ வந்துச்சு. அதைப் பார்த்ததுமே என்னை அறியாமல் அழுதுட்டேன். அவர் உடம்பு முழுக்க ஈ மொய்த்திருக்க, ஒல்லியான உடல்வாகு. பக்கத்திலேயே அவரோட கழிவுகள்னு மனசை வலிச்சது. திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்குப் போனேன். மக்களில் யாரும் அவர்கிட்ட நெருங்கவே தயாரா இல்லை. நானே பக்கத்தில் போய் சுத்தப்படுத்தி, முதலுதவி செஞ்சு, சாப்பாடு வாங்கிக்கொடுத்தேன். காப்பகத்துக்கு கூட்டிட்டுப் போக நினைச்சப்போ, டாக்ஸியில் ஏத்திக்கக்கூட பலரும் மறுத்தாங்க. ஒருவழியா அந்த ஏரியா காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு, முதியவரைக் காப்பகத்தில் சேர்த்தேன். இது தெரிஞ்சதும் என் வீட்டில் பயங்கரமா சத்தம் போட்டாங்க.

மனிஷா
மனிஷா

எல்லோருமே தங்களுடைய சுகத்தை மட்டுமே பார்த்துட்டு ஒதுங்கிட்டா, யார்தான் சமுதாயத்துக்கு வேலை பார்க்கிறது? யார் எதிர்த்தாலும் இதை தொடர்ந்து செய்யறதுன்னு உறுதியா இருந்தேன். என் சம்பளத்தில் அடிப்படைத் தேவை போக, மீதியை ஆதரவற்றவர்களுக்காகச் செலவழிக்க ஆரம்பிச்சேன். என் ஃபிரெண்ட்ஸ் பலரும் உதவி செய்ய முன்வராங்க. `அட்சயம் டிரஸ்ட்' அமைப்புடன் கைகோத்தும் செயல்பட்டுட்டிருக்கேன்.இந்தப் பணியில் பல போராட்டங்கள் இருந்தாலும் நூற்றுக்கும் மேற்பட்டவங்க வாழ்க்கையை மாற்றியிருக்கோம்கிற மனநிறைவு கிடைச்சிருக்கு. பாதிக்கப்பட்டவங்களை என் அம்மா அப்பாவாகத்தான் பார்க்கிறேன். அவங்களும் என்னை பொண்ணாகத்தான் பார்க்கிறாங்க. தீபாவளி, பொங்கல் மாதிரியான நாள்களை அவங்களோடுதான் கழிக்கிறேன். ஏமாற்றங்களால் சோர்ந்திருந்த அவங்க வாழ்க்கை, இப்போ அன்பால நிறைய ஆரம்பிச்சுருக்கு’’ எனப் புன்னகையோடு பேசுகிறார் மனிஷா.

படங்கள் : கே.ரமேஷ்