Published:Updated:

அஷ்டாவதானிகளுக்கும் வேண்டும் ஆசுவாசம்! - WFH பெண்கள் - சிக்கல்களும் தீர்வும்!

 WFH பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
WFH பெண்கள்

அனுசரணை

“வீட்லதான இருக்க...இதைக்கூட செய்ய முடியாதா?” குடும்பத் தலைவிகள் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த இந்த வார்த்தைகள், வேலைக்குச் செல்லும் பெண்களின் காதுகளையும் துளைக்கின்றன. கோவிட்-19 பெருந்தொற்று நமக்கெல்லாம் கொடுத்த பெருங்கொடை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கலாசாரம் என்று மகிழ்ச்சியை மீம்களாகவும் கலாய் வீடியோக்களாகவும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.

நிதர்சனம் என்னவென்றால், ‘மல்டி டாஸ்க்கர்’ பெண்களை இந்தக் கலாசாரம் சற்று திக்குமுக்காட வைத்திருக்கிறது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றும் பெண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவில், பத்தில் நான்கு பெண்கள் மனப்பதற்றம், மனச்சோர்வுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வீடு, அலுவலக வேலைகள் இரண்டையும் சமமாக நிர்வகிக்க முடியாததால் பல பெண்கள் ‘டபுள் பர்டன் சிண்ட்ரோம்’ (Double Burden Syndrome) என்ற மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஓய்வில்லாத சமையல் வேலைகள் தொடங்கி பல்வேறு வீட்டு வேலைகள், அலுவலகத்திலிருந்து வழக்கத்தைவிட கூடுதல் பணிச்சுமை ஆகியவற்றால் இந்த சிண்ட்ரோம் ஏற்படுகிறது என்கின்றனர். இதன் காரணமாக முடிக்க வேண்டிய நேரத்தில் வேலையை முடிக்க இயலாமல், 75 சதவிகிதம் பெண்கள் வழக்கத்தைவிட கூடுதல் நேரம் பணியாற்றுகின்றனர். அலுவலகத்திலும் வேலையை முடிக்க கூடுதல் அவகாசத்தைக் கேட்டுப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அஷ்டாவதானிகளுக்கும் வேண்டும் ஆசுவாசம்! - WFH பெண்கள் - சிக்கல்களும் தீர்வும்!

“வொர்க் ஃப்ரம் ஹோம் புதிய விஷயம் என்பதால் தட்டுத் தடுமாறித்தான் பழகியிருக்கிறேன். பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை மூன்று நேரம் சமைத்துப் போடுவது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது என முதல் லாக்டௌன் சந்தோஷமாகக் கழிந்தது. அதற்குப் பிறகு, அலுவலகத்திலும் வீட்டிலும் வேலை நெருக்கடிகள் தொடங்கிவிட்டன” என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெனோ வாகப் பணியாற்றும் அமுதா.

‘‘திடீரென்று வேலை வந்துவிடும். இரவு வேலையை முடிக்கவே 8 மணியாகிவிடும். எங்கள் கிச்சனில் ஒரு போர்டு தொங்கிக் கொண்டிருக்கும். தினமும் காலை டிபன், மதியம், மாலை நேரத் தின்பண்டம், இரவு உணவு என அனைத்து வேளைகளுக்கும் என்னென்ன வேண்டும் என்று பிள்ளைகள் எழுதிவிடுவார்கள். கொஞ்சம் சுணங்கினாலும் ‘வீட்டில்தானே இருக்கிறாய்... இதைச் செய்ய முடியாதா?’ என்ற கேள்வியும் பின்னாலேயே வரும். அதனால் அனைத்தையும் செய்துகொடுத்துவிட்டுத்தான் அலுவலக வேலையில் உட்கார்வேன். பிள்ளைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கும்போதோ, கணவர் வேலை செய்யும்போதோ எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது. ஆனால், நான் வேலை செய்யும்போது, ஒருபக்கம் டி.வி ஓடிக்கொண்டிருக்கும், மறுபக்கம் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பார்கள். நானும் அலுவலக வேலையைத்தான் செய்கிறேன் என்ற பிரக்ஞையே குடும்பத்தினருக்கு இருக்காது'' - ஆற்றாமையுடன் பேசும் அமுதா,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அஷ்டாவதானிகளுக்கும் வேண்டும் ஆசுவாசம்! - WFH பெண்கள் - சிக்கல்களும் தீர்வும்!

“அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது வீட்டு நினைப்பே இருக்காது, அலுவலக வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியும். வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது முழு அர்ப்பணிப்போடு அலுவலக வேலைகளைக் கவனிக்க முடியாது. தண்ணீர் செம்பை எடுத்து வருவது, டீ போடுவது போன்ற சிறிய வேலைகளைக்கூட நான் தான் செய்ய வேண்டும். மனது கேட்காமல் எல்லா வேலைகளையும் செய்து கொடுத்துவிட்டு வந்து மீண்டும் என் வேலையைத் தொடர்வேன்” என்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்!

ஒரு வீட்டில் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் மனைவி, அவசரம் அவசரமாக சமையல் வேலையைச் செய்துகொண்டிருக் கிறார். கணவருக்கு முக்கியமான அலுவலக செல்போன் அழைப்பு வருகிறது. மனைவி அப்போதுதான் கரகர சத்தத்தில் மிக்ஸியை இயக்கிக்கொண்டிருக்கிறார். கணவனோ கோபத்தில் ‘முக்கியமான கால் வருது. அதைக் கொஞ்சம் நிறுத்துறியா’ என்று கத்துகிறார். மனைவிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். `மிக்ஸியைத் தூக்கிட்டு நான் வெளியே போக முடியாது. ஆனா, மொபைலைத் தூக்கிட்டு நீங்க வெளில போகலாம்ல' என்கிறார் கணவர் சட்டென்று சிரித்துவிட்டு, நகர்கிறார். பெண் என்பவள் எல்லோரையும் அனுசரித்துப்போக வேண்டும். ஆனால், பெண்ணை அனுசரித்துச் செல்ல யாரும் தயாராக இல்லை.

அஷ்டாவதானிகளுக்கும் வேண்டும் ஆசுவாசம்! - WFH பெண்கள் - சிக்கல்களும் தீர்வும்!

“எனக்கு தினமும் காலை 10 மணிக்கு ஆன்லைன் மீட்டிங். 9.30 மணிக்கு கணவன் டிபன் கேட்பார். மகன் 9.50-க்கு கேட்பான். நான் வீட்டில்தானே இருக்கிறேன், எப்போது கேட்டாலும் சாப்பாடு கொடுப்பேன் என்ற உணர்வு. இதனால் வீட்டு வேலையைச் செய்தபடியேதான் மீட்டிங் அட்டெண்ட் செய்வேன்’’ என்கிறார் ஐ.டி துறை மூத்த அதிகாரி ரம்யா தேவநாதன்.

“கணவருக்கு போன் வந்தாலும் சரி, எனக்கு போன் வந்தாலும் சரி அவரைத் தொந்தரவு செய்யாமல் நான்தான் வெளியில் சென்று பேசவேண்டும். வீடு, அலுவலக வேலைகள் என இரட்டைச் சுமை அழுத்த அவ்வப்போது விரக்தி ஏற்படவே செய்யும். பேசினால் வீட்டில் சண்டை வருமே என்று, பேசுவதையே குறைத்துவிட்டு, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, பொருள்களை அடுக்குவது என மனத்தை அமைதிப்படுத்தும் விஷயங்களில் இறங்கிவிடுவேன். முன்பும் வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றியிருக்கிறேன். அப்போது கணவரும் வேலைக்குப் போய் விடுவார், மகனும் பள்ளிக்குப் போய்விடுவான். வேலைகளை இடையூறின்றி பார்க்க முடிந்தது. இப்போதைய சூழலில் அலுவலகத்துக்குச் சென்றால்தான் இடையூறுகள் இல்லாமல் வேலை பார்க்கமுடியும்” என்கிறார் ரம்யா.

அஷ்டாவதானிகளுக்கும் வேண்டும் ஆசுவாசம்! - WFH பெண்கள் - சிக்கல்களும் தீர்வும்!

நியாயமாரே!

ஆண்களுக்கும் இதுபோன்ற சூழலைக் கையாளத் தெரியாத நிலை தான் நீடிக்கிறது. ‘என் மனைவி, என் அம்மா... அவள் அருகிலிருக்கும்போது எனக்கு செய்து தருவாள் என்ற ஆசையிலும் உரிமையிலும் கேட்கின்றனர், எதிர்பார்க்கின்றனர். அது எல்லை மீறும்போதுதான் பெண்கள் கழுத்தை இறுக்குகிறது.

உளவியல் ஆலோசகர் மினி ராவிடம் இதுபற்றி கேட்டபோது,“பெண்களைப் பொறுத்தவரை அலுவலகச் சூழலில்தான் நிம்மதி யாக வேலை பார்க்க முடியும். வீட்டிலிருந்தால் குழந்தையின் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி சமையல் வரை பார்க்க வேண்டியிருப்பதால் அலுவலகப் பணியில் கவனம் செலுத்தமுடியாது. மனைவியைக் கணவன் கண்காணித்துக் கொண்டே இருப்பது, சமையலை விமர்சிப்பது, வேலைகளை ஏவுவது போன்ற செயல்களால் ஒருகட்டத்தில் பெண்கள் எரிச்சலடையத் தொடங்குகிறார்கள். கணவரும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் இரண்டு பேரும் நிறைய நேரம் ஒன்றாக இருக்கும் நிலை ஏற்படுவதால், வெறுப்பும் விரக்தியும் அதிகமாகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணவன் மனைவிக்குள் தோன்றும் இது போன்ற சிறிய உரசல்கள், வார்த்தை வன்முறையாகவோ, உணர்வுரீதியான வன்முறையாகவோ (Emotional abuse) மாறுகிறது. குழந்தைகள் முன்னால் மனைவியைத் திட்டுவது, குத்திக்காட்டுவது, குறைகூறுவது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன. சின்ன விஷயங்கள், உரசல்கள் அனைத்தும் பெரிதாகின்றன.

அஷ்டாவதானிகளுக்கும் வேண்டும் ஆசுவாசம்! - WFH பெண்கள் - சிக்கல்களும் தீர்வும்!

இந்தியா இப்போதும் ஆணாதிக்க சமூகமாகவே இருக்கிறது. லாக்டௌன் காலத்தில் அந்த ஆதிக்கம் கூடியிருக்கிறது. ‘குடும்பத்தை நிர்வகிக்க முடியவில்லை என்றால் வேலையை விட்டுவிடு’ என்று பெண்களிடம் சர்வசாதாரணமாகச் சொல்ல முடிகிறது. ஆண்களுக்கு நிகராகப் படித்து சம்பளம் வாங்கும் பெண்களை `வீட்டில் இரு' என்று எளிதாகச் சொல்லிவிட முடிகிறது. இதை எதிர்கொள்ளும் பெண்கள், வீட்டு வேலைகளைச் செய்வ தற்கு மட்டும் தான் தமக்குத் திறமை இருக்கிறது எனச் சுயமரியாதையை இழக்கும் வகையில் சிந்திக்கத் தொடங்கிவிடுகின்றனர். விளைவு, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. மன அழுத்தம் என்பது வயிற்றுப் புண் தொடங்கி பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களால் ஸெனோபோபியா (Xenophobia) என்ற பிரச்னை பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நிலையற்ற தன்மை, குடும்பத்தில் உரசல்கள், நோய் பற்றிய அச்சம் போன்றவற்றால் எதிர்காலம் குறித்த பயம், பதற்றம் உருவாவதே ஸெனாபோபியா. பெருந்தொற்று காலத்தின் நீட்சியாகவே இந்தப் பிரச்னையைப் பார்க்க முடிகிறது” என்கிறார் மினி ராவ்.

தீர்வுகள் என்ன?

“கணவன், மனைவி இருவரும் பேச வேண்டும். மனைவியும் தன்னைப் போல் வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்கிறார் என்ற புரிந்துணர்வைக் கணவருக்கு ஏற்படுத்த வேண்டும். இருவரும் அவரவர் வேலை நேரம், குடும்ப வேலைகளைப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றைத் திட்டமிடுவது நல்லது. கணவனுக்கு வேலை இருக்கும்போது குழந்தையின் ஆன்லைன் வகுப்புகளை மனைவி பார்த்துக்கொள்ளலாம். மனைவிக்கு வேலை இருக்கும்போது கணவர் பார்த்துக்கொள்ளலாம்.

அதே போல குழந்தைகளுக்கும் பெற்றோரின் பணிச்சூழலைப் புரியவைக்க வேண்டும். பெற்றோருக்கு அலுவலக வேலையிருக்கும்போது தாங்களாகவே ஆன்லைன் வகுப்புகள் அட்டெண்ட் செய்வது, சாப்பிடுவது போன்ற வேலைகளைச் செய்யும்படி பழக்கலாம். அனுசரணை என்ற வார்த்தைக்கு மட்டும் குடும்பத்தினர் அர்த்தம் கண்டுகொண்டால் வொர்க் ஃப்ரம் ஹோமிலும் பெண்கள் சிறப்பாகப் பணியாற்ற முடியும். உடல் மனநலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்” என்கிறார்.

அஷ்டாவதானிகளுக்கும் ஆசுவாசம் அவசியம்தானே!