Published:Updated:

குழந்தையைக் கவ்விய புலி, துணிச்சலுடன் போராடி மீட்ட தாய்! திக்... திக்... நிமிடங்கள்!

Tiger ( pixabay )

அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக, புலி ஒன்று குழந்தையைக் கவ்விக் கொண்டு பாய்ந்தோடி உள்ளது. தன்னுடைய குழந்தையை மீட்க, புலியைத் தடுத்துப் போராடிய அப்பெண்ணையும் புலி பந்தாடியுள்ளது.

குழந்தையைக் கவ்விய புலி, துணிச்சலுடன் போராடி மீட்ட தாய்! திக்... திக்... நிமிடங்கள்!

அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக, புலி ஒன்று குழந்தையைக் கவ்விக் கொண்டு பாய்ந்தோடி உள்ளது. தன்னுடைய குழந்தையை மீட்க, புலியைத் தடுத்துப் போராடிய அப்பெண்ணையும் புலி பந்தாடியுள்ளது.

Published:Updated:
Tiger ( pixabay )

குறிப்பிட்ட உயரம் வரை பறக்கும் கோழிகூட, தன்னுடைய குஞ்சை பருந்து கவ்விக்கொண்டு சென்றால், உயரப் பறந்து தாக்கும். தன்னுடைய சேய்க்கு ஒரு பிரச்னை என்றால், தாய்மையின் வீரம் அதை மீட்கும் வரை போராடும். அப்படி ஒரு சம்பவம்தான் மத்தியப் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியையொட்டிய ஒரு கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

வனம் - சித்திரிப்பு காட்சி
வனம் - சித்திரிப்பு காட்சி
pixabay

அர்ச்சனா சௌத்ரி என்ற பெண், தன்னுடைய 15 மாத மகனைக் கூட்டிக்கொண்டு, வெளியில் மலம் கழிக்கச் சென்றுள்ளார். அச்சமயத்தில், எதிர்பாராத விதமாகப் புலி ஒன்று குழந்தையைக் கவ்விக்கொண்டு, பாய்ந்தோடி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய், தன்னுடைய குழந்தையை மீட்கப் போராடினார். துணிச்சலுடன் தடுத்துப் போராடிய அப்பெண்ணையும் புலி பந்தாடியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்பெண்ணின் கூச்சலில், அக்கம் பக்கத்தினர் விரைந்தோடி வந்து, புலியை விரட்டி உள்ளனர். கூட்டம் சேரவே புலி காட்டுக்குள் தப்பி ஓடியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர்களை உமாரியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தன்னுடைய மனைவிக்கு இடுப்பு, கை மற்றும் பின்புறத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மகனுக்குத் தலை மற்றும் பின்புறத்தில் காயங்கள் இருப்பதாகவும் அப்பெண்ணின் கணவர் போலா தெரிவித்துள்ளார்.

Treatment (Representational Image)
Treatment (Representational Image)
Image by Parentingupstream from Pixabay

பாதிக்கப்பட்டவர்களை அம்மாவட்டத்தின் கலெக்டர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, மருத்துவமனையில் சென்று பார்த்துள்ளார். இவர்கள் இருவரையும் மேற்படி சிகிச்சைக்காக ஜபல்பூரில் உள்ள மருத்துவமனைக்குப் பரிந்துரைப்பதாகவும், வனப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய குழந்தையைக் காக்க, புலியுடன் தாய் ஒருவர் போராடிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.