சிகரம் தொட்ட பெண் இயக்குநர்!

2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. `பரியேறும் பெருமாள்', `மேற்குத்தொடர்ச்சி மலை', `சூப்பர் டீலக்ஸ்' போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட, வணிக ரீதியாகவும் படைப்பாக்க ரீதியாகவும் பெருவெற்றி என்று பேசப்பட்ட திரைப்படங்களில் ஏதேனும் ஒன்றுக்கு விருது கிடைக்கும் என்று தமிழ்த் திரையுலகமே எதிர்பார்த்திருந்தது. ஆனால், பதினெட்டே நாள்களில் எடுக்கப்பட்ட, வெள்ளித்திரைக்கு வராத `பாரம்' என்ற தமிழ்த் திரைப்படத்துக்குத் தமிழின் சிறந்த திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமி, மும்பையில் வசித்துவரும் தமிழர்.

தென்தமிழ்நாட்டின் கிராமங்களில் பரவலாக நடந்து கொண்டிருக்கும் - `தலைக்கு ஊத்தல்' என்ற பெயரில் - உடல்நலம் குன்றிய முதியோரை குடும்பத்தினரே கருணைக்கொலை செய்யும் கொடுமையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது `பாரம்'. கருப்புசாமி என்ற காவலாளியின் வாழ்க்கையைச் சொல்லும் படத்தின் நடித்திருப்பவர்களில் பலர் புதுவை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள். “இந்தப் படம் கலைப்படைப்பு அல்ல. மக்கள் பார்க்க வேண்டிய படம். அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உயிரோட்டமான படம் இது. மக்களிடம் அதிகம் சென்று சேரவேண்டிய படமும்கூட” என்று சொல்கிறார் படத்தைத் தயாரித்து இயக்கிய பிரியா.

பிரியாவுக்குப் பிரியமான வாழ்த்துகள்!

முதல் நாவலுக்கே விருது பெறும் ஷாரன் பாலா!

கனடா நாட்டில் வசித்துவரும் இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளரான ஷாரன் பாலா, `தி போட் பீப்பிள்' என்ற தன் முதல் நாவலுக்கு ஹார்ப்பர் லீ விருது பெறவிருக்கிறார். கனடா நாட்டில் வசிக்கும் ஷாரன், 2018-ம் ஆண்டு வெளியிட்ட `தி போட் பீப்பிள்' நாவலில் மஹிந்தன் என்ற இலங்கை அகதியின் கதை சொல்லப்படுகிறது. இலங்கையின் உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிப் பிழைத்து கனடாவுக்கு வரும் மஹிந்தனும், அவனுடன் வரும் அகதிகளும் வான்கூவர் தீவுகளுக்குப் படகு ஒன்றின் உதவியுடன் வந்து இறங்குகின்றனர். தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள அவர்களை கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் வழக்கறிஞர் பிரியா காப்பாற்றினாரா என்பதுதான் கதை.

வழக்கறிஞர்களின் பங்களிப்பை எடுத்துச் சொல்லும் நாவல்களுக்கு வழங்கப்படும் இந்த ஹார்ப்பர் லீ விருது 2011-ம் ஆண்டு ‘டு கில் அ மாக்கிங் பேர்டு’ நாவலின் 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. “இந்த நாவல் கருணைக்கான பிரார்த்தனையாக எழுதப்பட்டது. இதை வாசிப்பவர்கள் மீது சிறிய தாக்கத்தையேனும் ஏற்படுத்த வேண்டுமென்று பெரும் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்று சொல்கிறார் ஷாரன். வரும் ஆகஸ்ட் 29 அன்று லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது.

வாழ்த்துகள் பாலா!

பெரும் அழிவில் இருந்து மக்களைப் பாதுகாத்த பெண் அதிகாரிகள்!

தென்மேற்கு இந்தியாவைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது பெருமழை. மகாராஷ்டிரம், கோவா, கேரளம், கர்நாடகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் வெள்ளநீரில் மிதந்துகொண்டிருக்கின்றன. வயநாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடும் நிலச்சரிவுகளில் மக்கள் இறந்து போயிருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டமும் இந்த மழை வெள்ளத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இங்கே, மோசமான சூழலை ஓரளவு சமாளித்து பெரும் அழிவிலிருந்து மக்களைப் பாதுகாத்த மூன்று பெண் அதிகாரிகளைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள். அம்மாவட்ட உதவி கமிஷனர் ஆனிஸ் கண்மணி ஜாய், எஸ்.பி சுமன் பென்னேகர், ஜில்லா பஞ்சாயத்து தலைமை செயல்பாட்டு அதிகாரி லக்ஷ்மிபிரியா ஆகிய மூன்று பெண்களும் ஒன்றுசேர்ந்து துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிர் மற்றும் பொருள் சேதத்தைப் பெருமளவில் தடுத்துள்ளனர்.

இவர்களில் ஆனிஸ் கண்மணி கடந்த சில மாதங்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங் களை வணிக நிலங்களாக மாற்றும் விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறார். அந்தப் பகுதியில் அதிக நிலச்சரிவு நிகழாததற்குக் காரணம் இந்த நடவடிக்கைதான் என்று சொல்லப்படுகிறது.

கள்ளிசந்த நோபன் என்ற அம்மாவட்டத் தின் மரக்கடத்தல் மன்னனைத் துணிவுடன் கைது செய்திருக்கிறார் எஸ்.பி சுமன். கடந்த ஆண்டு வெள்ள நேரத்தில் கிட்டத்தட்ட 4,200 மக்களை மண் சரிவு மற்றும் கடும் மழையிலிருந்து காப்பாற்றியதும் இவரே. லக்ஷ்மி பிரியா குடகு பகுதியின் கிராமப் பஞ்சாயத்துகளைப் பலமாக்கும் வேலைகளைச் செய்துவருகிறார். இந்த மூன்று பெண்களும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஒன்றிணைந்து ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மக்களின் பாராட்டைப் பெற்றன.

முப்பெரும் தேவியர்!

தாய்மையைக் கொண்டாடும் எமி ஜாக்சன்!

இங்கிலாந்துப் பெண்ணான பிரபல நடிகை எமி ஜாக்சன் சமீபத்தில் தன் நீண்ட நாள் காதலரான ஜார்ஜ் பனயிட்டோவுடன் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டார். தாய்மையடைந்திருக்கும் எமி, தன் தினசரி வாழ்க்கை, தாய்மையின் சவால்கள், அவற்றைத் தான் சமாளிக்கும் விதம் போன்றவற்றைத் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துவருகிறார். `வொர்க்கிங் மம்மா…' என்று தலைப்பிட்ட படம் ஒன்றில், கர்ப்பிணியாக மாடலிங் செய்யும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

33-வது வார கர்ப்பத்தை எட்டியிருப்பதாகச் சமீபத்தில் எழுதிய எமி, “என் உடல், என் பெருவயிறு இரண்டையும் நான் நேசித்து ஏற்கிறேன். கூடவே தாய்மையுடன் வரும் எடை அதிகரிப்பு, சருமச் சுருக்கங்கள், பிரசவத் தழும்புகள் எல்லாவற்றையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று தன் புகைப்படத்துடன் செய்தி பகிர்ந்தார்.

மேலாடை அணியாமல் கைகள் கொண்டு மறைத்தபடி, தன் முழு வயிற்றையும் காட்டி அவர் பகிர்ந்த இந்தப் படத்திலும் நம் கலாசாரக் காவலர்கள் ‘மேலாடை அணியலாமே?’ என்று அவருக்கு அறிவுரை சொல்லத் தொடங்கினார்கள். இவர்களை சட்டை செய்யாத எமி, அடுத்தபடியாக அமர்ந்த நிலையில் யோகா செய்யும் வீடியோவையும் படத்தையும் வெளியிட்டுள்ளார்!

சுகப் பிரசவ பிராப்தம் கிடைக்கட்டும், எமி!

பசுமைத் தூதரான ஒன்பது வயது சிறுமி!

மணிப்பூர் மாநிலத்தின் ஹியங்க்லம் வகபை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒன்பது வயது வாலன்டீனா எலங்பம். அங்குள்ள அமுதோம்பி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி வாலன்டீனா, ஒன்றாம் வகுப்பு படித்தபோது ஆற்றங்கரையில் இரு குல்மோகர் கன்றுகளை நட்டு, நீர் ஊற்றிப் பராமரித்து வந்தாள். சிறுமியோடு மரங்களும் வளர்ந்தன. இந்த நிலையில் ஆற்றங்கரையைப் பலப்படுத்தும் நோக்கில் கரையில் நின்ற மரங்கள் வெட்டப்பட்டு, கரை மீது மண் கொட்டி பலப்படுத்தப்பட்டது. ஆசை ஆசையாக வளர்த்த இரண்டு மரங்களும் வெட்டப்பட்டதைக் கண்டு துடித்த சிறுமி அழுது அரற்றியதை சிறுமியின் உறவினர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

மரங்களுக்காக கதறி கண்ணீர்விட்ட சிறுமியின் வீடியோ மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, பலரும் அதைப் பகிர்ந்தனர். வீடியோவைக் கண்ட அம்மாநில முதல்வர் பிரேன் சிங், சிறுமி வாலன்டீனாவைப் பாராட்டி மாநிலத்தின் ‘மணிப்பூர் கிரீன் மிஷன்’ என்ற பசுமைப் பணி அமைப்பின் தூதராக ஓர் ஆண்டு பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார். கூடவே, தான் வசிக்கும் பகுதியில் நட்டுவைக்க வாலன்டீனாவுக்கு அரசால் சில மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன. இனி ஓர் ஆண்டுக்கு வன மஹோத்சவம், சுற்றுச்சூழல் தினம் என்று தொடரும் பல விழாக்களுக்கு அரசின் தூதராக இந்தச் சுட்டிப்பெண் இருப்பார் என்றும் அறிவித்திருக்கிறார் முதல்வர் பிரேன் சிங்.

குட்டித் தூதருக்கு நம் வாழ்த்துகள்!

அவள் செய்திகள்

தன் எட்டு மாத கைக்குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது வெளியிடங்களுக்கு ஷூட்டிங் செல்கையில் சிரமமாக இருக்கிறது என்று சமீபத்தில் தன் சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ளார் பிரபல இந்தி நடிகை நேஹா தூபியா. பெண்கள் பணியாற்றும் இடங்கள் அனைத்திலும் பாலூட்டும் அறைகள் ஏற்பாடு செய்வது சட்டப்படி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

தெலங்கானாவின் சாக்ஷி ஊடகக் குழுமம் ஆண்டுதோறும் `சாக்ஷி எக்சலன்ஸ் விருதுகள்' வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. அதில் 2018-ம் ஆண்டின் சிறந்த தெலுங்குப் பெண் விருது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜுக்கு வழங்கப்பட்டது.

மும்பையின் அலையாத்திக் காடுகளைக் காக்கும் மும்பை அலையாத்திக்காடு பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய ஒரே பெண் காட்டுச் சரக அதிகாரியான சீமா அட்காவ்ன்கர் உதவியால், நகரின் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 66 சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. பணி ஓய்வுபெற்ற பின்னும், காடுகளில் கன்றுகள் நட்டுவருகிறார் சீமா.

பி.ஏ படித்த ராஜி அஷோக், சென்னையின் `ஆட்டோ அக்கா' என்று அறியப்படுபவர். பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவது என்றால் இரவு பகல் என்று நேரம் பார்க்காமல் உழைக்கும் ராஜி, நகரில் 20 ஆண்டுகள் ஆட்டோ ஓட்டியிருக்கிறார்; கல்லூரிகளில் தன் வாழ்க்கை குறித்து தன்னம்பிக்கையாகப் பேசியும் வருகிறார்.

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி நாடுகளுக்கு இடையே 1961-ம் ஆண்டு 155 கிலோமீட்டர் நீளச் சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. கட்டுமான வேலை தொடங்கிய சில நாள்களில் இரு நாடுகளைச் சேர்ந்த ரோஸ்மேரி படசுஸ்கி மற்றும் கிரைமில்டு மயர் என்ற இரு சிறுமிகளும் சுவருக்கு இருபுறமும் நின்றபடி கைகொடுத்த புகைப்படம் உலகப்புகழ் பெற்றது. கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தேடிப்பிடித்து, அதே சுவர் நின்ற இடத்தில் சுவர் கட்டத்தொடங்கிய ஆகஸ்ட் 13 அன்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ஆந்திர மாநிலம் குண்ட்லபோச்சம்பள்ளி கிராமத்தில் மாயா விவேக் மற்றும் மீனல் டால்மியா என்ற இரு பெண்கள் இணைந்து `ஹோலி வேஸ்ட்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள். கோயில்களில் வீணாகும் பூக்களைச் சேகரித்து, உலரவைத்து, பொடித்து, அவற்றிலிருந்து நறுமண சோப், ஊதுவத்தி, இயற்கை உரம் போன்றவற்றைத் தரம் பிரித்துத் தயாரிக்கிறார்கள்.

கேரள மாநிலப் பெருவெள்ளத்தை அடுத்து முதல்வர் பினராயி விஜயன் தன் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் மக்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கி உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். லாத்விய நாட்டைச் சேர்ந்த இல்சே ஸ்க்ரொமனே என்ற இளம்பெண் முதல்வரின் நிதிக்குப் பண உதவி செய்திருப்பதாக நன்றி தெரிவித்து அவரது வீடியோவையும் பகிர்ந்தார் பினராயி. கேரளாவுடன் தான் எப்போதும் துணை நிற்பதாகவும், இறைவனிடம் வேண்டிக்கொள்வதாகவும் அந்த இளம்பெண் அதில் தெரிவித்தார். கடந்த ஆண்டு இல்சேயும் அவர் சகோதரி லிகாவும் கேரள மாநில சுற்றுலா வந்தபோது, லிகா திருவனந்தபுரத்தில் கொலை செய்யப்பட்டார் என்பது கூடுதல் செய்தி.

20 ஆண்டுகளுக்கு முன்பு குர்து இனப் பெண்ணான மேவன் பபக்கர் தன் குடும்பத்துடன் அகதியாக ஐரோப்பாவில் ஐந்து ஆண்டுகள் சுற்றித் திரிந்தார். நெதர்லாந்து நாட்டின் சோல் நகரிலுள்ள அகதிகள் முகாமில் அப்போது பணியாற்றிய நபர் ஒருவர் மேவன் குடும்பத்துக்கு சைக்கிள் ஒன்றைப் பரிசாகத் தந்தார். 20 ஆண்டுகளுக்குப்பின் ட்விட்டர் பக்கத்தில் அந்த மனிதனைச் சந்திக்க விரும்புவதாகப் புகைப்படம் பகிர்ந்தார், இப்போது ஃபுல்ஃபேக்ட் நிறுவனத்தில் பணியாற்றும் மேவன். ஜெர்மனியில் எக்பர்ட் என்ற அந்த நல்ல மனிதர் இருப்பதை வலை உலகம் கண்டுபிடித்துச் சொல்ல, அவரை நேரில் சந்தித்து அகமகிழ்ந்திருக்கிறார் மேவன்.