சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்ட ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை

சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் சமீபத்தில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை திறந்துவைக்கப்பட்டது. ‘மிஸ்டர் இந்தியா’ என்ற ஹிந்திப் படத்தில் இடம்பெற்ற `ஹவா ஹவாயி' என்ற பாடல் காட்சியில் நடித்தபோது அணிந்த ஆடை அணிகலன்களுடன் இந்த மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பின்போது ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூருடன் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோரும் இருந்தனர்.

சிலையைத் திறக்கும்போது, மனைவியைக் கண்ணீர்மல்க நினைவுகூர்ந்தார் போனி. ஸ்ரீதேவியின் ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட வாழ்த்துச் செய்திகளை சுவர் ஒன்றில் விழா அமைப்பாளர்கள் ஒட்டியிருந்தனர். அருங்காட்சியகம் வரும் ரசிகர்கள், இதில் எப்போது வேண்டுமானாலும் எழுதிக் கையொப்பம் இடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவியின் முதல் உருவச் சிலை, சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸில் இருக்கும் இந்தச் சிலைதான். 20 கலைஞர்கள் கொண்ட குழு கடந்த ஐந்து மாத காலமாக ஸ்ரீதேவியின் குடும்பத்தினரிடம் அவரது உருவம், ஆடை, முகபாவம் போன்றவை குறித்து ஆலோசனைகள் பெற்று சிலையைச் செதுக்கியது. மிக தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டுள்ள இந்தச் சிலையே தங்கள் அருங்காட்சி யகத்தின் நட்சத்திர சிலை என்று சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இறந்தும் வாழும் ஸ்ரீ!

பள்ளிக்குச் செல்லும் வழியில் மாணவர்களைத் தேடிவந்த வாய்ப்பு

கொல்கத்தா நகரின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள சங்கமித்ரா வித்யாலயா பள்ளியில் படித்துவருபவர்கள், 11 வயது சிறுமி ஜஷிகா கான், 12 வயது சிறுவன் முகமது அசாஜுதீன். இவர்கள் இருவரும் சேகர் ராவ் என்ற டான்ஸ் மாஸ்டரிடம் இலவச நடனப் பயிற்சி எடுத்து வருகின்றனர். பள்ளிக்குச்செல்லும் வழியில், சாலையில் கேட்ட பாடலுக்கேற்ப இருவரும் குட்டிக்கரணங்கள் அடித்துச் செல்லும் வீடியோ ஒன்று, சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார், ஒலிம்பிக் தங்க மங்கையான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை நதியா கொமனேசி. `மிக அற்புதமான காட்சி இது' என்றும் பாராட்டினார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான கிரன் ரிஜுஜுவின் கண்களில் இந்த ட்வீட் படவே, அவரும் மாணவர்களை வெகுவாகப் பாராட்டியதோடு, ‘அவர்களுக்கு இலவசமாக ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி வழங்கப்படும்’ என்று அறிவித்தார். இந்தச் சிறுவர்கள், வார்டன் ரீச் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். ஜஷிகாவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர், தாய் தையற்காரர். அசாஜுதீனின் பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளிகள். விரைவில் இருவரும் பயிற்சியில் சேரவுள்ளனர்.

வாழ்த்துகள் சுட்டீஸ்!

கமர்ஷியல் பைலட்டாகும் ஒடிசாவின் முதல் பழங்குடியினப் பெண்!

ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில், கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்துவருபவர் மரினியாஸ் லக்ரா. மனைவி, ஜிமஜ் யஷ்மின். இவர்களின் 27 வயது மகள், அனுபிரியா மதுமிதா லக்ரா. இவரது வாழ்நாள் கனவு இம்மாதம் கைகூடப்போகிறது. இண்டிகோ விமான நிறுவனத்தின் துணை விமானியாக இம்மாத இறுதியில் விமானங்களை இயக்கவுள்ளார் அனுபிரியா.

ஒடிசா மாநில ஒரோன் பழங்குடியினக் குடும்பம் லக்ராவுடையது. கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் மகளின் கனவை நிறைவேற்ற இயலவில்லை. மனம் தளராத தம்பதி, உறவினர்களிடம் கடன் பெற்று, ஏழு ஆண்டுகள் அனுபிரியாவைப் படிக்கவைத்தனர். 2012-ம் ஆண்டு, அரசு பொறியியல் கல்லூரியில் கற்க இடம் கிடைத்தும், அதை உதறிவிட்டு பைலட் உரிமம் எடுப்பதில் கவனம் செலுத்தினார் அனுபிரியா. புவனேஸ்வரில் உள்ள அரசு விமானப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். “மற்ற பெண்களுக்கு என் மகள் உதாரணமாக இருக்க வேண்டும். மகள்கள் தங்கள் கனவை நனவாக்க, பெற்றவர்கள்தான் உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார் அனுபிரியாவின் தாய் ஜிமஜ். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அனுபிரியாவின் சாதனை எனக்கு மட்டற்ற மகிழ்வைத் தருகிறது; பிற பெண்களுக்கு இது தூண்டுகோலாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

சிறகு விரிக்கும் சிறுபெண் வானம்தொட வாழ்த்துகள்!

70 ஆண்டுகளுக்குப் பின் பதிப்பிக்கப்படும் போலந்துப் பெண்ணின் டைரி

இரண்டாம் உலகப்போர் நடந்தபோது ஜெர்மனியில் வசித்த ஆனி ஃபிராங்க் பற்றி நாம் அனைவரும் அறிவோம். டச்சு மற்றும் யூத சிறுமியான ஆனி, நாசிகளிடம் இருந்து தப்பி, தன் வாழ்க்கையின் இறுதி மூன்றாண்டுகளைப் பரணில் ஒளிந்தே கழித்தாள். தன் அனுபவங்களைத் தினமும் டைரியில் எழுதிவந்த ஆனி, 1945-ம் ஆண்டு, 15-வது வயதில் கண்டுபிடிக்கப்பட்டு, நாசி வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டாள். ஆனியின் மறைவுக்குப்பின் கண்டெடுத்து பதிப்பிக்கப்பட்ட டைரி அமரத்துவம் பெற்றது. அதேபோல 70 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்திருக்கிறது ரெனியா ஸ்பீகல் என்ற போலந்துப் பெண்ணின் டைரி. தன் 14-வது வயதில் ஆனி போலவே பரணில் ஒளிந்து வாழ ஆரம்பிக்கும் ரெனியா, தன் தலைமறைவு வாழ்க்கையைத் தெளிவாக ஆவணப்படுத்தியிருக்கிறாள்.

1942-ம் ஆண்டு ஜூலை மாதம், நாசிக்களால் தன் 18-வது வயதில் சுட்டுக்கொல்லப்பட்டாள் ரெனியா. ரெனியாவின் டைரி, அவளது இளவயது காதலனான சிக்மண்ட் ஷ்வார்சர் வசம் பத்திரமாக இருக்க, அதை அமெரிக்காவில் தஞ்சமடைந்த ரெனியாவின் தாய் மற்றும் சகோதரியிடம் ஒப்படைக்கிறான். மகளின் டைரியை படித்துப்பார்க்கப் பயந்த தாய், அதை வங்கி லாக்கரில் பத்திரப்படுத்தினார். ரெனியாவின் சகோதரி எலிசபெத்தின் மகளான அலெக்சாண்டிரா பெல்லக், ஒரு வழியாக 2012-ம் ஆண்டு ரெனியாவின் டைரியை வாசித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தந்தார். இந்த டைரி, புத்தகமாக `ரெனியாஸ் டைரி' என்ற பெயரில் பென்குயின் பப்ளிகேஷன் மூலம் இம்மாதம் வெளிவருகிறது.

இன்னும் எத்தனை டைரிகள்..?

அவள் செய்திகள்

நாட்டின் முதல் சர்வதேச மகளிர் வணிக மையத்தை கோழிக்கோடு நகரில் கேரள அரசு விரைவில் தொடங்க உள்ளது. “வீட்டுக்கு வெளியே வணிகத்தில் ஈடுபடும் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவர்களான பெண்களுக்கு இந்த மையம் பேருதவியாக அமையும்” என்று அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

நாக்பூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் காப்பு நியோநேடல் ஐ.சி.யூ பிரிவில் திடீரென மின் கசிவு ஏற்பட, அங்கு பணியாற்றிவரும் செவிலியர் சவிதா இகார், சமயோசிதமாகச் செயல்பட்டு ஒன்பது பச்சிளம் குழந்தைகளை வார்டிலிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தியுள்ளார். குழந்தைகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் மற்றும் ஐ.வி பொருத்தப்பட்டு, காப்பாற்றப்பட்டன. மருத்துவமனை அதிகாரிகளும் மக்களும் சவிதாவைக் கொண்டாடிவருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாபர், டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் `எமரிடஸ் பேராசிரிய'ராக (வாழ்நாள் கௌரவப் பேராசிரியர்) 1993-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவரிடம் `கரிகுலம் விட்டே' எனப்படும் தன்னைப்பற்றிய குறிப்பை மீண்டும் அனுப்புமாறு ஜே.என்.யூ நிர்வாகம் சமீபத்தில் நிர்பந்தித்தது. அசராத ரொமிலா, சி.வி-யைப் புதிதாக அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும், வரலாற்று ஆய்வாளர்களும், மாணவர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

எசெக்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோனியா பலோத்ரா சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, இந்தியாவில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களது தொகுதியில் பொருளாதார வளர்ச்சி, ஆண் உறுப்பினர்களின் தொகுதிகளை விட ஆண்டுக்கு 1.8 சதவிகிதப் புள்ளிகள் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகம் உதவுவது, பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்தாம் என்று கூறியுள்ளார் சோனியா.

திருச்சி மாவட்டம் புங்கனூரைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவிகள் மதுஸ்ரீ மற்றும் கனிஷ்கா, சாலையோரம் கிடந்த 50,000 ரூபாய் பணத்தை மீட்டு தங்கள் ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமிகளை ஊர் மக்களும், கல்வி அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.

2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கான டாப்ஸ் (டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம்) பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உட்பட ஒன்பது குத்துச்சண்டை வீரர்கள் தேர்வாகியுள்ளனர். ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இவர்களுக்கு ஓர் ஆண்டு கடுமையான பயிற்சி அளிக்கப்படும்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ரேகா ரேஷ்மிக், அகுவாபோனிக்ஸ் முறைப்படி வீட்டிலேயே குளம் ஒன்றை அமைத்து, அதில் மீன் வளர்ப்பு மற்றும் அந்த நீரைச் சுழற்சி செய்து காய்கறிகள் பயிர்செய்து பெரும் லாபம் ஈட்டிவருகிறார். இவரது பணியைப் பாராட்டி கேரள அரசு, மாவட்ட அளவிலான மீன் வளர்ப்புக்கான முதல் பரிசை வழங்கியுள்ளது. அன்னபூர்ணா அகுவாபோனிக்ஸ் நிறுவனரான இவர், ஒரு மென்பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு, அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டிகளில் நடப்பு சாம்பியன் செரினா வில்லியம்ஸை 6-3, 7-5 என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றினார். கனடா நாட்டுப்பெண் ஒருவர் அமெரிக்க ஓப்பன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறை.