Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெண்கள் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் உலகம்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

இந்தியாவின் கிராமப்புறமே கொரோனாவின் வாழிடமாக மாறும் அபாயம் - உலக சுகாதார நிறுவன தலைமை அறிவியலாளர்

``சிக்கலான இந்தக் காலகட்டத்தில் ஏன் சிலவற்றை கட்டாயம் செய்யச் சொல்கிறோம் என்று மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். கைகளைக் கழுவுவது, பொது இடங்களில் துப்பாமல் இருப்பது, தனிமனித சுத்தம் போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் பெரிய மாற்றங்களை நாம் காண முடியும்'' என்று சொல்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் சௌமியா சுவாமிநாதன்.

“நகர்ப்புறங்களில் வாழ்ந்த விளிம்புநிலை மக்கள் சாரிசாரியாக கிராமங்களுக்குத் திரும்பியதன் மூலம் கிராமப்புறங்களில் கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவ வாய்ப்பிருக்கிறது. அதனால் கிராமப்புறங்களில் அதிக பரிசோதனைகள் செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சௌமியா சுவாமிநாதன்
சௌமியா சுவாமிநாதன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லாக்டவுண் நீக்கப்பட்டாலும் சில முக்கிய சட்டத்திட்டங்களை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சொல்கிறார் சௌமியா. ‘பிசிக்கல் டிஸ்டன்சிங்’ என்ற விலகி இருத்தல் கட்டாயம் தொடர வேண்டும்; எல்லாவிதமான கூட்டங்களுக்கும் தடை நீடிக்க வேண்டும் என்று கூறும் அவர், கோவிட் நோய் தாக்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மீதான சமூக ஒதுக்கம் கவலைக்குரியது என்று வருந்துகிறார். மக்கள் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்று சொல்லும் சௌமியா, இந்தக் கிருமி பாலினம், வர்க்கம், வயது, நாடு என்று எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

பிசிக்கல் டிஸ்டன்சிங்தான் தேவை; சோஷியல் டிஸ்டன்சிங் அல்ல!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கொரோனா பரிசோதனைக் கருவியை உருவாக்கிய மறுநாள் பிரசவித்த பெண் அறிவியலாளர்

காராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த `மைலேப் டிஸ்கவரி' என்ற மருத்துவக் கருவிகள் ஆய்வு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் மினல் தகவே போஸ்லே. அந்த நிறுவனத்தில் கொரோனா நோய்த் தொற்றை விரைவாகக் கண்டறியக்கூடிய முதல் இந்தியக் கருவியை அவர் தலைமையிலான குழு முயற்சி செய்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் `பேத்தோ-டிடெக்ட்' என்கிற இரண்டரை மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றை உறுதி செய்யக்கூடிய பரிசோதனைக் கருவியை சமீபத்தில் வடிவமைத்தனர்.

மினல் தகவே போஸ்லே
மினல் தகவே போஸ்லே

மூன்று அல்லது நான்கு மாதங்கள் பிடிக்கக்கூடிய இந்தப் பணியை ஆறு வாரங்களில் வெற்றிகரமாக முடித்து அரசு அனுமதிக்கு அனுப்பி வைத்தனர். இக்கருவிகள் வெறும் 1200 ரூபாயில் இந்தியச் சந்தையில் விற்பனைக்கும் வந்துவிட்டன. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் கருவியின் விலை ரூபாய் 4,500 என்பதால், இந்தியக் கருவிகளுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. கருவியை வடிவமைத்து அரசின் அனுமதிக்கு அனுப்பிய அடுத்த நாளே மினலுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

பிப்ரவரி மாதத்தில் பணியைத் தொடங்கு வதற்கு முன் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் தான், பரிசோதனைக் கருவி வடிவமைப்பு வேலையையே தொடங்கியுள்ளார் மினல். “இது ஆபத்து காலம். இதை சவாலாகவே எடுத்துக்கொண்டேன். என் நாட்டுக்கு நான் செய்யும் கடமை இது” என்று சொல்லி யிருக்கிறார் மினல்.

புது அம்மாவுக்கு நம் வாழ்த்துகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இளம் வயதினருக்கு விட்டுக்கொடுத்து மரணத்தைத் தழுவிய 90 வயது சீனியர்!

ரோப்பாவின் பெல்ஜியம் நாட்டின் லுபீக் நகரைச் சேர்ந்தவர் 90 வயதான மூதாட்டி சூசன் ஹொய் லேர்ட்ஸ். அவருக்கு மார்ச் மாதம் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். காய்ச்சலோ, இருமலோ, வேறு எந்த அறிகுறியோ இல்லாத சூசனுக்கு, மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து தனிமைப் படுத்தப்பட்டார். மூச்சுவிட சிக்கல் எழுந்தபோது, உலகெங்கும் உள்ள வென்டிலேட்டர் பற்றாக்குறையைக் கருதி, தனக்கு வென்டிலேட்டர் உதவி தேவையில்லை என்று மருத்துவர்களிடம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

சூசன் ஹொய் லேர்ட்ஸ்
சூசன் ஹொய் லேர்ட்ஸ்

“நான் அருமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டேன்; எனக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் தேவையில்லை. நிறைய இளம் வயதினருக்கு அவை தேவைப்படும்” என்று கூறி வென்டிலேட்டர் உதவியை மறுத்துவிட்டார். தொடர்ந்து உடல்நிலை மோசமாகி மரணமடைந்தார். அவர் மகள் ஜூடித், தாயின் மரணம் குறித்து பேசுகையில், “எங்களால் அவரை இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாமல் போயிற்று. அவரது இறுதிச்சடங்கில்கூட எங்களால் பங்கேற்க முடியவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார்.

நிறைவான வாழ்வு, நினைவஞ்சலி...

நாடோடி சமூகத்தினரைத் தேடிச் சென்று உணவளிக்கும் பெண்

நாகப்பட்டினம் பகுதியில் வாழும் நாடோடி சமூகத்தினர் குழந்தைகளுக்கென `வானவில்' அறக்கட்டளை மூலம் இல்லம் நடத்தி வருகிறார் பிரேமா ரேவதி. இங்கு கல்வி மற்றும் பிற அடிப்படை உரிமைகள் குழந்தைகளுக்கு தடையின்றி கிடைத்துவந்த நிலையில்தான் கொரோனா காரணமாக ஊரடங்கும், அதையடுத்து பள்ளிகள் மூடப்படும் நிலையும் ஏற்பட்டது.

பள்ளியை மூடிவிட்டாலும், ஊரடங்கு காரணமாக தன் ஹோம் குழந்தைகள் மற்றும் நிரந்தர வருமானம் எதுவுமில்லாத எளிய பெற்றோருக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிவெடுத்தார் பிரேமா.

பிரேமா
பிரேமா

நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டியவர், சிறு பொருள்கள் விற்றும், பிச்சை எடுத்தும் திணறி வந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். ஒருவேளை கஞ்சி மட்டுமே குடித்து வந்தவர்கள் இப்போது ஓரளவுக்குத் தற்காலிக நிம்மதி அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 231 துப்புரவுப் பணியாளர்களுக்கு தேவையான முகமூடிகளையும் வழங்கியுள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

இதுவரை 645 குடும்பங்களைத் தன் உதவி எட்டியிருக்கிறது என்று மகிழ்வுடன் குறிப்பிடும் இவர், குறைந்தபட்சம் 1000 குடும்பங்களுக்காவது உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதாகக் கூறுகிறார்.

ஊரடங்கில் வீடுகளை விட்டே வெளியே வர அச்சம்கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில், பூட்டியிருக்கும் கடைகளைத் திறக்கச் சொல்லி மளிகை உள்ளிட்ட பொருள்கள் வாங்கி எளிய மக்களுக்கு உதவி வருகிறார் பிரேமா.

வாழ்த்துகளும் நன்றியும்!

அவள் செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்த உலகின் தலைசிறந்த வைராலஜிஸ்டுகளில் ஒருவரான இந்திய வம்சாவளிப் பெண் கீதா ராம்ஜி, கோவிட்-19 நோய் தாக்கி உயிரிழந்தார். எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் வழிவகைகளை ஆராய்ந்து வந்த கீதாவின் மரணம் உலகின் ஹெச்.ஐ.வி ஆய்வுகளுக்குப் பின்னடைவு என்றே கருதுகிறார்கள் ஆய்வாளர்கள். 2018-ம் ஆண்டு லிஸ்பன் நகரில் தன் எய்ட்ஸ் ஆய்வுகளுக்காக `தலைசிறந்த பெண் விஞ்ஞானி' விருது பெற்றவர் கீதா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

த்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் பிரீதி வர்மா என்ற 27 வயது இளம் பெண்ணுக்கு சமீபத்தில் ஆணும் பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. “இந்த வைரஸ் காரணமாகவே சுகாதாரத்தின் முக்கியத்துவம், சுத்தமான பழக்க வழக்கங்களை மக்கள் கற்றுக்கொண்டுள்ளனர் என்பதால், வைரஸின் நினைவாகவும் இந்த ஊரடங்கு நேரத்தில் பிறந்ததாலும் எங்கள் குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா என்று பெயரிட்டிருக்கிறோம்” என்று கூறி வியக்க வைக்கிறார் பிரீதி.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி உடல்நலம் தேறி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய சிக்கல்களைத் தாண்டி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் உடல்நலம் தேறியுள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

துருக்கியைச் சேர்ந்த இடதுசாரி இசைக்குழுவான `யோரும்'மை நடத்தி வந்த ஹெலின் பொலெக் 288 நாள்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி மரணமடைந்தார். அவரது குழுவைச் சேர்ந்த ஏழு பேர் எந்த விசாரணை யுமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்தும், தங்கள் குழு இயங்க அனுமதி கோரியும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார் ஹெலின். கடந்த 2016-ம் ஆண்டு முதல் இவரது இசைக்குழு மார்க்சிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டதாக குற்றம்சாட்டி நிகழ்ச்சிகள் நடத்தத் தடை செய்யப்பட்டிருந்தது. இவரது குழு உறுப்பினர்கள் இருவர் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்
பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கோவிட்-19 நோய் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கேரள மாநிலம் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் செவிலியராகப் பணியாற்றும் ரேஷ்மா மோகன்தாஸ் உடல்நலம் பெற்று வீடு திரும்பியிருக்கிறார். கேரளாவின் கொரோனா தாக்கப்பட்ட மிக முதிய நோயாளிகளான 88 வயது மரியம்மா மற்றும் 93 வயது தாமஸ் தம்பதிக்கு சிகிச்சை வழங்கியபோது இவருக்கு நோய்த்தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. மூவரும் உடல் நலமடைந்துள்ளனர். 14 நாள்கள் க்வாரன்டீனுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேரப் போவதாகக் கூறியுள்ளார் ரேஷ்மா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ரடங்கு நாள்களில் சமூகத்துக்குப் பயன்படும் வகையில் மருத்துவர்களுக்கான உடைகளைத் தைத்து வருகிறார்கள் பெங்களூரு ஏ.சி சபையைச் சேர்ந்த கத்தோலிக்கச் சகோதரிகள். பெங்களூரு ஜான்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த சகோதரிகள் தைக்கும் கவுன்களைப் பயன்படுத்தவிருக்கிறார்கள். மும்பை, கோழிக்கோடு, மேஹ்சேனா நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு முக கவசங்களைத் தைத்து இலவசமாக வழங்கி வருகிறார்கள் இந்த சகோதரிகள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

லகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதைகள் எழுதிய நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங், “கொரோனா ஊரடங்கு காலத்தில் புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டால்தான் நாம் திறமைசாலி” என்று சமூக ஊடகங்களில் சொல்லும் லைஃப் ஸ்டைல் பயிற்சிகளைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். “சோகமாக இருப்பதும் நிம்மதியில்லாமல் இருப்பதும் ஒரு சூழலில் நிலவும் பிரச்னைகளுக்கு மனித மனம் காட்டும் எதிர்வினை மட்டுமே, அது ஒரு நோயல்ல” என்று கூறியிருக்கும் ரௌலிங், “நாம் யாரும் சூப்பர்மேன் அல்ல; நம் எல்லோருக்கும் சிக்கல்கள் வரும். அவற்றுக்கான எதிர்வினையை நாம் எப்படி யாவது காட்டித்தான் ஆக வேண்டும். அதுவே இயற்கை; அதை ஒப்புக்கொள்வதில் நமக்கு எந்தத் தயக்கமும் தேவையில்லை” என்றும் கூறியுள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

திருவனந்தபுரத்தை அடுத்த ஆளில்லாத்துறா என்ற இடத்தை வாங்கி, மரியநாடு மீனவ கிராமத்தை உருவாக்கியது லத்தீன் கத்தோலிக்க மறைமாவட்டம். அங்கு மீனவர் கூட்டுறவு சங்கம் உருவாக்கி, மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டுவந்த குழுவில் இடம்பிடித்தவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த செவிலியரான லாரெட்டா ஃபரினா. 1962-ம் ஆண்டு முதல் அங்கு பள்ளி, கலை மற்றும் விளையாட்டு அமைப்புகள், மகிளா சமாஜம் என்ற பெண்கள் அமைப்பு என்று பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திய `சேச்சி' லாரெட்டா, 1977-ம் ஆண்டு தாய்நாடு திரும்பினார். அங்கும் செவிலியப்பணி தொடர்ந்தவர், 1988-ம் ஆண்டு மரியநாட்டின் மீனவர்கள் ரோம் நகரில் மீனவர் மாநாடு நடத்தவும் ஏற்பாடுகள் செய்தார். 1992-ம் ஆண்டு கடைசியாக மரியநாடு வந்துசென்ற லாரெட்டா, ‘டிமென்ஷியா’ நோயால் பாதிக்கப்பட்டு, இத்தாலியின் பெர்காமோ நகரில் பொது ஓய்வு இல்லம் ஒன்றில் சமீபத்தில் மரணமடைந்தார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ரடங்கு அமலில் இருக்கும் சென்னையில், குழந்தைப்பேற்றுக்கு மருத்துவமனை செல்ல வாகன வசதியில்லாத பெண்களைத் தன்னுடைய கார் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கிறார் ஆவடியைச் சேர்ந்த 23 வயது பொறியாளர் லியோ ஆகாஷ்ராஜ். இது வரை 51 கர்ப்பிணிகளை மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறார் இவர். கடந்த 14 நாள்களில் இவர் அழைத்துச்சென்ற பெண்மணிகளுக்கு 29 குழந்தைகள் பிறந்து தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.