கொரோனா வைரஸால் மொத்த உலகமும் ஸ்தம்பித்துள்ளது. இதனால், நம் வாழ்க்கை முறையும் வெகுவாக மாறியுள்ளது.

முடிந்தவரையில் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக்கொண்டு வீட்டில் பாதுகாப்பாக இருக்கவே அரசும் வலியுறுத்துகிறது. நமது அத்தியாவசியத் தேவைக்காக, கொரோனா அச்சத்தைப் பொருட்படுத்தாமல் ஏராளமான தொழிலாளர்கள் நம் வாசல் தேடிவந்து வேலை செய்கிறார்கள். அவர்களில் சென்னையைச் சேர்ந்த சாமான்ய பெண்கள் சிலர், தங்கள் பணிச்சூழலை விவரிக்கின்றனர்.

45 வருஷமா பால் வியாபாரம் செய்றேன். தினமும் நாலு மணிக்கெல்லாம் டெப்போவுக்குப் போயிடுவேன். இந்தத் தள்ளு வண்டியில எல்லா பால் பாக்கெட்டையும் போட்டுக்கிட்டு வருவேன். அஞ்சு மணியிலேருந்து ஒவ்வொரு வீதியா போய் பால் பாக்கெட் போடுவேன். நான் பயந்துபோய் ஒருநாள் வீட்டுக்குள் முடங்கி இருந்தாலும், என்னை நம்பியிருக்கிற ஏராளமான குடும்பங்கள் பால் கிடைக்காம சிரமப்படும். அதுக்கு இடம் கொடுக்க எனக்கு மனசில்லை. அதனால, இந்த மூணு மாசத்துல ஒருநாள்கூட வீட்டுக்குள்ளே இருக்காம வேலை செய்றேன். கொரோனா காலத்துல மட்டுமில்ல, மழை, புயல், பண்டிகைனு எந்தக் காலத்துலயும் பால் போடுறதை நிறுத்தினதே இல்லை.

வயசாயிட்டு வர்றதாலே மாடிப்படி ஏற முடியலை. அவங்க வீட்டு வாசல்ல வெச்சிருக்கிற பையில பால் பாக்கெட்டை வெச்சுட்டு கீழே வந்துடுவேன். மத்த வீடுகள்ல வாசல் கேட்டுலேயே பை மாட்டியிருப்பாங்க. அதுல வெச்சுடுவேன். மக்கள் பயப்படறதால, இப்பல்லாம் யார்கிட்டயும் கையில பால் பாக்கெட்டைக் கொடுக்கறதில்லை. மாசம் 6,000 வருமானம் கிடைக்கும். யாருக்கும் பாரமா இல்லாம உழைச்சுதான் சாப்படறேன். 82 வயசாகுது. இனி இருக்கிற காலம்வரைக்கும் இப்படியே உழைச்சு சாப்பிடுகிற அளவுக்கு உடம்புல தெம்பு இருந்தா போதும்!

கோயில் வாசல்ல பூக்கடை வெச்சிருந்தேன். கொரோனா வந்ததுலேருந்து எல்லா கோயிலையும் மூடிட்டாங்க. வீட்டு வாடகையோடு, வாங்கின கடனுக்கு வட்டியும் கட்டணும். அதனால, என் கணவரும் நானும் தள்ளுவண்டியில காய்கறி வியாபாரம் செய்ய ஆரம்பிச்சுட்டோம். இப்ப கோயம்பேடு மார்க்கெட் இல்லை. அதனால எல்லாக் காய்கறிகளும் கீரையும் ஒரே இடத்துல கிடைக்கிறதில்லை. விடியற்காலை அஞ்சு மணியிலேருந்து பல இடங்கள்ல அலைஞ்சுதான் காய்கறிகளை வாங்கறோம். அப்புறம் ஒவ்வொரு வீதியா வியாபாரம் செய்வோம்.

வியாபாரத்துக்கு நடுவுல ஒரு டீ குடிப்பேன். மதியம் வரைக்கும் எதுவும் சாப்பிட மாட்டேன். வெயில்ல அலையிறதாலயும், சத்தமா கத்திப் பேசி வியாபாரம் பண்றதாலயும் ரொம்ப சிரமமாதான் இருக்கு. வேற தொழில் தெரியாததால, சிரமத்தை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். பழைய சாப்பாடு இருந்துச்சுன்னா, அதைத்தான் காலையில பசங்க சாப்பிடுவாங்க. வியாபாரத்தை முடிச்சுட்டு மதியம் வீட்டுக்குப் போய்தான் சமைப்பேன். பசியில இருக்கிற நாலு பிள்ளைகளும் சாப்பிடப் பிறகு, மூணு மணிக்குத்தான் நான் சாப்பிடுவேன்.

மக்களும் பயந்துகிட்டேதான் காய்கறிகள் வாங்கறாங்க. தினமும் காலையில காய்கறிகளை கொள்முதல் பண்றதுலேருந்து, வியாபாரத்தை முடிக்கிறவரை நிறைய சிரமம் இருக்குது. என்ன பண்றது, எந்தப் பிரச்னை வந்தாலும் முதல் பாதிப்பு சாமான்ய மக்களுக்குத்தான். சமாளிச்சுதான் வாழ்ந்தாகணும்!

நாங்க சரியா வேலை செஞ்சாதான், மக்கள் பாதுகாப்பா இருக்க முடியும். அதனால வழக்கத்தைவிட இப்ப கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்றோம். காலையில ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வந்துடுவோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவுல முதல்ல வேலையை முடிப்போம். ஒருத்தர் வாரத்துல ஒருநாள் லீவ் எடுத்துக்கலாம். எனவே, எங்க வேலையை முடிச்சுட்டு லீவ் எடுத்துக்கிட்டவங்க ஏரியாவுல வேலை செய்வோம். தெருக்கள்ல இருக்கிற குப்பைகளை எடுக்கிறதோடு, ஒவ்வொரு வீட்டுலயும் குப்பைகளைச் சேகரிப்போம். நாங்களும் மாஸ்க், சானிட்டைசர் பயன்படுத்தறோம். ஆனாலும், இந்தச் சூழல்ல எங்க வேலை கொஞ்சம் ரிஸ்க்கானதுதான். நாங்க பயப்படாமதான் வேலை செய்றோம். மாநகராட்சி சார்பா நோய் எதிர்ப்புச் சத்துக்காக மாத்திரைகளைக் கொடுக்கறாங்க. தினமும் ரெண்டு வேளைக்கு மாத்திரை சாப்பிடறோம்.

என் ரெண்டு புள்ளைங்களும் ஸ்கூல் படிக்கிறாங்க. வீட்டுக்குப் போனதுமே பசங்க என்னைக் கட்டிப்பிடிக்க ஓடி வருவாங்க. அவங்களைத் தடுத்து நிறுத்திட்டு, குளிச்சுட்டுதான் வீட்டுக்குள்ள போவேன். என்னால பசங்களுக்குப் பாதிப்பு வரக் கூடாதுன்னு நினைக்கிறது, பசங்களுக்குப் புரியறதில்லை. வருத்தப்படுவாங்க. மத்தபடி, வேலைக்கு வந்துட்டுப் போறதுலதான் போக்குவரத்து சிரமங்கள் கொஞ்சம் இருக்கு. அதையும் சமாளிச்சுக்கிறோம். வாரத்துல ஒருநாள் லீவ் தவிர, எதுக்குமே நாங்க லீவ் எடுக்கிறதில்லை. எங்க சிரமமான வேலைச் சூழலை மக்களும் ஓரளவுக்குப் புரிஞ்சு நடத்துக்கிறாங்க. அதனால, எந்தச் சிரமமும் இல்லாம வேலை செய்றோம்.

வீட்டுக்காரருக்கு உடல்நலப் பாதிப்பு கொஞ்சம் இருக்கு. அதனால, அவரால முன்ன மாதிரி வேலை செய்ய முடியறதில்லை. அவருக்கு ஒத்தாசையா நானும் ரெண்டு வருஷமா பழ வியாபாரம் செய்றேன். ரெண்டு பேரும் வெவ்வேறு ஏரியாவுல தள்ளு வண்டியில பழ வியாபாரம் செய்றோம். கோயம்பேடு மார்க்கெட் இல்லாததால, பழங்கள் வாங்க ரொம்பவே சிரமப்படறோம். பழங்களோட விலை அதிகமா இருக்கிறதால, மக்கள் முன்ன மாதிரி பழம் வாங்க ஆர்வம் காட்டுற தில்லை. தினமும் வருமானம் குறைச்சலா கிடைக்கிறதால, வாரத்துல எல்லா நாளுமே வியாபாரம் செய்றோம். மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே பயப்படறாங்க. கொரோனா பயத்தால மக்கள் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தறாங்க. எல்லாத்தையும் அனுசரிச்சுத்தான் வியாபாரம் செய்தாகணும்.

காலையில எழுந்ததுமே பழத்தை வாங்கிட்டு, உடனே வியாபாரத்துக்கு வந்திடுவேன். எனவே, பசங்களுக்குச் சாப்பாடுகூட என்னால செஞ்சு கொடுக்க முடியறதில்லை. காலையில சாப்பிட மாட்டேன். எனக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன். எல்லாருமே ஸ்கூல்தான் படிக்கிறாங்க. பொண்ணுங்கதான் வீட்டு வேலைகளைப் பார்த்துப்பாங்க. மதியத்துல எனக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பாங்க. வியாபாரத்தை முடிச்சுட்டு வீட்டுக்குப் போக ராத்திரி பத்து மணியாகிடும். சாப்பிட்டுத் தூங்கவே நேரம் சரியா இருக்கும். பசங்ககிட்ட பேசக்கூட நேரமிருக்காது. எனக்கு கொரோனா பத்தின பயம் இல்லை. ஆனா, தினமும் அலைஞ்சு வேலை செய்றதால என் மூலமா குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதுங்கிற தவிப்புதான் அதிகம் இருக்கு.