Election bannerElection banner
Published:Updated:

பைசா செலவில்லாமல் பைக் ஓட்டக் கத்துக்கலாம்! எப்படி? #OnlineWorkshop

பெண்கள் தின ஸ்பெஷல் ஆன்லைன் ஒர்க்ஷாப்
பெண்கள் தின ஸ்பெஷல் ஆன்லைன் ஒர்க்ஷாப்

முதல் பைக்! முதல் பயணம்! பெண்கள் தின ஸ்பெஷல் ஆன்லைன் ஒர்க்ஷாப்...

‘பைக்கை சாய்க்காத, ஹேண்டில்பாரை வளைக்காத… நேரா உட்காரு..’ - முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது முழங்காலில் அடி விழுந்திருக்கிறதா உங்களுக்கு?

அதேபோல், வளர்ந்து கல்லூரி செல்லும் காலத்தில்கூட, இரு சக்கர வாகனத்தை அப்பாவோ, அண்ணனோ கடுப்பாகியபடி கற்றுக் கொடுத்த நினைவு இருக்கிறதா? நன்றாக ஸ்கூட்டி ஓட்டத் தெரிந்த பிறகும், ஆர்டிஓ அதிகாரிக்கு முன்னால், எக்ஸாம் ஃபீவர் மனநிலையில் அந்த ஸ்கூட்டியை ஓட்டிக் காட்டி 8 போடும்போது, காலை ஊன்றி… டிரைவிங் டெஸ்ட்டில் ஃபெயில் ஆன அனுபவம் உண்டா?

ஒரு வழியாக, `நானும் ரவுடிதான்’ வடிவேலு ஸ்டைலில், `ஹே.. நானும் லைசென்ஸ் வச்சிருக்கேன்’ என்று லைசென்ஸ் வாங்கி சீன் போடுவதற்குள்… பல அரியர்களையே முடித்து விடலாம்!

சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது...
சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது...
இப்போது நிலைமையே வேறு. "நீங்களே தனியாக இருசக்கர வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளலாம்" என்று சொன்னால் நம்புவீர்களா! ஆம், `பைசா செலவில்லாமல் பைக் ஓட்டக் கத்துக்கலாம்’ - இப்படி ஒரு நோக்கத்தில் ஒரு வொர்க்‌ஷாப்பை நடத்த இருக்கிறது அவள் விகடனும் மோட்டார் விகடனும்.

அது மட்டுமல்ல; உங்களுக்கு ஏற்ற இரு சக்கர வாகனத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி, வாகனச் சட்டங்கள் என்னென்ன, எதை - எங்கே எப்படிப் பயன்படுத்த வேண்டும், இருசக்கர வாகனத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை நாமே சரி செய்வது எப்படி, என்னென்ன விஷயங்களைக் கண்டிப்பாகச் சரி பார்க்க வேண்டும்… அட முக்கியமாக உங்களுக்குக் காலம் காலமாகச் சவால் விடும் சென்டர் ஸ்டாண்ட்டை ஈஸியாகப் போடுவது எப்படி - இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் இருக்கிறது இந்த ஆன்லைன் ஒர்க்ஷாப்பில்!

அவள் விகடன் மற்றும் மோட்டார் விகடன் வழங்கும் பைசா செலவில்லாமல் பைக் ஓட்டக் கத்துக்கலாம்! எப்படி? ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சி. வழங்குபவர் ஆஃப் ரோடு எக்ஸ்பெர்ட் அஷ்வின் ராஜ்வர்மா.
பைக் வொர்க்ஷாப்
பைக் வொர்க்ஷாப்
  • டூ–வீலரை கீழே விழாமல் பேலன்ஸ் செய்வது எப்படி?

  • உங்களுக்கான டூ–வீலரை எப்படித் தேர்வு செய்வது?

  • முறையான பிரேக்கிங் டெக்னிக்ஸ்!

  • ஓட்டுநர் பாதுகாப்பு டிப்ஸ்

எனப் பல விஷயங்களை உங்களுடன் ஆன்லைன் மூலம் உரையாட வருகிறார் அஸ்வின்.

நாள்: மார்ச் 28 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: மாலை 4.30 முதல் 5.30 மணி வரை (ஆன்லைன் ஒர்க்ஷாப்)

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள் - https://bit.ly/3vJ1UJB

இந்தக் கட்டணமில்லா வெபினாரில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு