Published:Updated:

வேகம்... விவேகம்... இலக்கை மட்டும் கவனத்தில் வையுங்கள்... வெற்றியை அல்ல!

ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா

உலகக்கோப்பை வென்ற பைக் ரேஸர் ஐஸ்வர்யா!

வேகம்... விவேகம்... இலக்கை மட்டும் கவனத்தில் வையுங்கள்... வெற்றியை அல்ல!

உலகக்கோப்பை வென்ற பைக் ரேஸர் ஐஸ்வர்யா!

Published:Updated:
ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா

ந்து ஆண்டுகளுக்கு முன் பைக் ரேஸிங் கரியரைத் தொடங்கிய ஐஸ்வர்யா பிஸே இப்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியாவின் முக்கிய முகம். `பாஹா உலகக் கோப்பை’யில் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் முதல் பெண். FIM சாம்பியன்ஷிப்பை வெல்லும் முதல் இந்தியப் பெண்ணும் இவர்தான்.

வேகம்... விவேகம்... இலக்கை மட்டும் கவனத்தில் வையுங்கள்... வெற்றியை அல்ல!

பாஹா என்பது கரடுமுரடான வறண்ட மலைப் பள்ளத்தாக்குகளிலும் பாலைவனங்களிலும் பல மைல் தூரம் பைக் ஓட்டும் பந்தயம். இதில் பெண்கள் பிரிவில் முதலிடமும், ஆண் பெண் இருபாலர்களும் போட்டியிடும் ஜூனியர் பிரிவில் இரண்டாம் இடமும் வென்றுள்ளார் ஐஸ்வர்யா. கடந்த இரண்டு ஆண்டுகளாக தோள்பட்டை எலும்பு முறிவு, கணையத்தில் காயம் என அவதிப்பட்ட இவர், சவால்களில் இருந்து மீண்டுவந்து உலகக் கோப்பையை வென்றுள்ளதை ஒரு சிறப்பான கம்பேக் எனச் சொல்லலாம். இந்தியப் பெண் ரேஸர்களின் இன்ஸ்பிரேஷன் ஐஸ்வர்யாவை கோவாவில் கொண்டாட்டங்களின் இடையே சந்தித்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து குணமாகி, மறுபடியும் ரேஸ் பைக்கைத் தொடும்போது பயம் இருந்ததா?

காயம் என்பது எல்லோரும் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் ஒரு விஷயம்தான். ஒரு படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து எலும்பை உடைத்துக்கொண்டால் படிக்கட்டை நினைத்து பயப்படுவோமா, என்ன? தினசரி வேலைகளே இப்படியென்றால், எனக்குப் பிடித்த ஒரு செயலை செய்யும்போது அதில் கொஞ்சம் சறுக்கினால் என் விருப்பத்தை விட்டுக்கொடுக்க முடியுமா? மனதளவிலும் உடலளவிலும் இப்போது நான் முழுமையாகக் குணமாகிவிட்டதால் கீழே விழுவதைப் பற்றிய பயமே இல்லை!

வேகம்... விவேகம்... இலக்கை மட்டும் கவனத்தில் வையுங்கள்... வெற்றியை அல்ல!
வேகம்... விவேகம்... இலக்கை மட்டும் கவனத்தில் வையுங்கள்... வெற்றியை அல்ல!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பைக் ஓட்ட தொடங்கி அதற்குள் உலகக் கோப்பையை வென்றுவிட்டீர்கள். இதை எளிதான ஒன்றாக நினைக்கிறீர்களா?

ஐந்து ஆண்டுகள் என்பது குறைவான காலம் இல்லையே. இந்த சாம்பியன்ஷிப்புக்கு கடின உழைப்பும் நிறைய பயிற்சியும் தேவைப்பட்டது. இது என் அணியின் உழைப்பும்கூட. அதோடு, இது முடிவில்லை; ஆரம்பம்தான். வெல்வதற்கு இன்னும் நிறைய கோப்பைகள் இருக்கின்றன.

ராலி பைக் ரேஸுக்காக என்னென்ன பயிற்சி எடுப்பீர்கள்?

என்னுடைய வழக்கமான பயிற்சி என்பது ஒரு வாரத்தில் மூன்று நாள்கள் ஜிம் செல்வது, மூன்று நாள்கள் பைக் ரைடிங். Strength conditioning, Mental conditioning ஆகியவற்றுக்கான பயிற்சிகள், ஊட்டச்சத்து உணவுத் திட்டம் ஆகியவற்றைப் பின்பற்றுவேன். வார இறுதி நாளில் ஃபீல்டுக்குச் சென்று டெக்னிக், ரைடிங் போன்றவற்றை மேம்படுத்தப் பயிற்சி எடுப்பேன்.

ஏழு நாள்களும் பயிற்சி என்றால் எப்படி ரிலாக்ஸ் ஆவீர்கள்?

ரேஸ் ஓட்டுவதுதான் என்னை எப்போதும் ரிலாக்ஸ்டாக வைத்திருக்கிறது. அதனால்தான் நான் இதைச் செய்கிறேன். பைக்தான் என் ஜென் வீடு. அதனாலேயே எந்தச் சோர்வும் இல்லாமல் நான் இதை செய்கிறேன். ஒரு சாதாரண நாள் எனக்கு எப்படியிருக்குமோ... அப்படித்தான் என் ரேஸ் நாளும். அதனால், நான் எப்போதுமே ரிலாக்ஸ்தான்!

உங்களைப் பின்பற்ற விரும்பும் பெண்களுக்கு உங்கள் அட்வைஸ்?

உங்களைத் தடுக்க நிறைய பேர், நிறைய காரணங்கள் சொல்வார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. உங்களுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யுங்கள். இலக்கைக் கவனத்தில் வைத்து சந்தோஷமாக ஓடுங்கள். வெற்றி என்பது வெறும் விளைவுதான்!