Published:Updated:

புகைப்படங்களையே தங்கள் அடையாளமாக்கிக்கொண்ட பெண்கள்! #WorldPhotographyDay

#worldphotographyday
News
#worldphotographyday

உலக புகைப்படத் தினச் சிறப்புக் கட்டுரை.

புகைப்படங்கள் காலத்தின் சாட்சி. அழகியல் படங்களை மட்டும் காட்டாமல் வறுமை, அகதிகளின் நிலைமை என எத்தனையோ வாழ்வியல் கொடூரங்களை உலகுக்குக் காட்டி உயிரை உலுக்கச் செய்தவை புகைப்படங்களே. மக்களின் வாழ்வை, நிலத்தின் அரசியலை, உலகமயமாக்கலின் பிரதிபலிப்பு தங்கள் லென்சின் வழியே பல பெண்கள் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

irina popova
irina popova
PC: artguide.com

இரினா பப்போவா (Irina Popova)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

போதைக்கு அடிமையான பெண்ணான லில்யாவின் அன்றாட வாழ்வைப் படங்கள் எடுக்கத் தயாரானார் இரினா பப்போவா. எலும்பும் தோலுமாக நைந்துபோயிருக்கும் அந்தப் பெண்ணை தன் கேமராவில் உயிர்ப்புடன் படங்களாகப் பதிவு செய்துகொள்கிறார் இரினா பப்போவா. அவற்றைப் புகைப்படக் கண்காட்சியாகவும் வைக்கிறார். அங்கு லில்யா தன் கணவர் பாஷாவோடும் குழந்தை ஆன்ஃபிஷாவோடு வருகிறார். தங்களின் புகைப்படங்களைத் தாங்களே பார்த்துச் சிரித்துக்கொள்கின்றனர். அந்தப் புகைப்படங்களுக்கு "There can be also love and affection in such families caused even more hysteria'' என்று கேப்ஷன் ஒன்றை எழுதுகிறார்.

புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் பல விமர்சனங்களைச் சந்திக்கின்றன. லில்யாவின் மீதும் பாஷாவின் மீதும் பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. குழந்தையை அவர்களிடமிருந்து பிரித்து காப்பகத்துக்கு அனுப்ப வேண்டும் என வழக்குகள் பதிவாகின. புகைப்படக்காரர் இரினா பப்போவா மீதும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அந்தப் புகைப்படக்காரர் லில்யாவின் குடும்பத்தைப் பற்றி எழுதும்போது "THE PHOTOGRAPHER REFUSES TO TAKE THE RIGHT TO BLAME THESE PEOPLE“ என்று முடிக்கிறார். விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்த அந்தப் புகைப்படக்கதையை `ANOTHER FAMILY' என்ற புத்தகமாக வெளியிடுகிறார் இரினா. உலக அளவில் மிகவும் புகழ்பெற்றதாக அது மாறியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இரினா பப்போவா, 1986-ல் பிறந்தவர். இவர் ரஷ்யா மற்றும் டச்சினைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் மற்றும் பல துறைகளில் தன்னுடைய திறமைகளை நிரூபித்து வருபவர். 16 வயதிலேயே பத்திரிகையாளராகப் பல இதழ்களிலும் செய்தித்தாள்களிலும் வேலை பார்த்தவர். இவருடைய `ANOTHER FAMILY' என்ற மேற்கூறிய புகைப்படக் கதையின் புத்தகம் மிகவும் பிரபலமானது; விவாதிக்கப்பட்டது. இதைத்தவிர, ஏழு வருடம் பயணம் செய்து, தன்னுடைய சொந்தநாடு பற்றிய புகைப்படங்களைத் தொகுத்து `IF YOU HAVE A SECRET' என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இவருடைய புகைப்படங்கள் பார்வையாளரை ஆழமான பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடியவை.

Irina popova photography
Irina popova photography
lensculture.com

ரஷ்யா, பிரான்ஸ், பாரீஸ், ஸ்பெயின் போன்று பல நாடுகளில் புகைப்படக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். ரஷ்யாவின் சிறந்த புகைப்படக்காரர், சிறந்த இளம் புகைப்படக்காரர், UNICEF-ன் மதிப்புக்குரிய விருது என்று பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எலினா செர்னிஷோவா (Elena Chernyshova)

சுரங்கம் சார்ந்து இயங்குகிற, பனிப்பொழிவு மிக்க ரஷ்ய நகரம் நோரில்ஸ்க் (Norilsk). உலகின் வடக்கு எல்லையில் இருக்கும், சராசரியாக - 10 டிகிரி முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும் பகுதி இது. ஒட்டுமொத்த நகரமும் கைதிகளால் உருவாக்கப்பட்டது. உலோகங்கள் சார்ந்த துறைகளில்தான் அந்த நகரத்தில் உள்ளவர்கள் வேலை செய்கிறார்கள். அப்பகுதியின் படு பயங்கரமான ஒரு காலநிலை, சூழலியல் அழிவு, தனிமை இவற்றின் கொடூரங்களை உலகுக்குக் காட்சிப்படுத்தியவர் புகைப்படக் கலைஞர்தான் எலினா செர்னிஷோவா.

Elena Chernyshova
Elena Chernyshova
Elena Chernyshova photography
Elena Chernyshova photography
Elena Chernyshova photography
Elena Chernyshova photography

இவர் 1981-ல் மாஸ்கோவில் பிறந்தவர். ஆர்கிடெக்ட்டாகத்தான் தன் பணியைத் தொடங்கினார். பின் அப்பணியிலிருந்து விலகி பயணம் செய்யத் தொடங்கினார். 26 நாடுகள், 1,004 நாள்கள், 30,000 கி.மீ பயணம்செய்து மனிதர்களின் பலதரப்பட்ட வாழ்க்கைச் சூழல், கலாசாரம், வாழ்வியல் சவால்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொண்டார். பயணம்தான் இவரைப் புகைப்படக் கலைஞராக மாற்றுகிறது. இவருடைய புகைப்படங்கள் மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையைச் சார்ந்ததாகவே இருக்கும். மனிதர்கள் செய்யும் எளிய விஷயங்களை ஏதோ ஆழ்ந்த பொருள் புதைந்த புனைவாக மாற்றும் தந்திரக்காட்சிப் போல இருக்கும் இவரின் புகைப்படங்கள். அந்த வகையில் நோர்ல்ஸ்க் பகுதி பற்றிய இவரது தொகுப்பான `DAYS OF NIGHT - NIGHTS OF DAY' அடங்கும்.

பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, நார்வே என்று பல நாடுகளில் புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். ஜப்பான் இன்டர்நேஷனல் போட்டோ ஜர்னலிஸம் விருது, ஃப்ரீலென்ஸ் விருது, வேர்ல்டு பிரஸ் போட்டோ 2014 விருது என்று பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.

அக்னியஸ்கா சோஸ்நவ்ஸ்கா (Agnieszka Sosnowska)

புகைப்படத்தின் மூலம் உலகத்தைக் காண்பிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தவர் அக்னியஸ்கா சோஸ்நவ்ஸ்கா. ஒரு கதை சொல்லலுக்கான கருவியாக கேமராவைப் பார்க்கிறார். இவர் 1971-ல் போலந்தில் பிறந்தவர். 18 வயதிலேயே செல்ஃப் போட்ரெய்ட்ஸ் எடுக்க ஆரம்பிக்கிறார். தன்னைத் தானே புரிந்துகொள்ளவும், தன்னுடைய நம்பிக்கையை வளர்க்கவும் இந்தப் படங்கள் அவருக்கு உதவியுள்ளன என்று கூறுகிறார்.

Agnieszka Sosnowska
Agnieszka Sosnowska
Facebook
Agnieszka Sosnowska photography
Agnieszka Sosnowska photography
Agnieszka Sosnowska photography
Agnieszka Sosnowska photography

தனி மனிதனைப் புகைப்படம் எடுப்பதன் வழியே அவரின் வாழ்க்கையைச் சொல்ல முடியும் என்று நம்பினார் அக்னியஸ்கா சோஸ்நவ்ஸ்கா. திருமணமாகி ஐஸ்லாந்தில் விவசாயம் சார்ந்த நிலத்தில் குடியேறுகிறார். இந்த மாற்றம் விவசாயம் சார்ந்தும், இயற்கை சார்ந்தும் பல புரிதலை அவருக்குத் தருகிறது. மனிதனின் மன உறுதியைப் பரிசோதிக்கிற ஒரு விஷயம்தான் விவசாயம். விவசாயியின் வாழ்க்கை ஒரு நிலையற்ற தன்மை உடையது. இப்படி ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது புனிதமான ஒன்றாகக் கருதுகிறார். முற்றிலும் வேறுபட்ட ஒரு கலாசாரத்துக்குள் நுழையும் அக்னியஸ்கா சோஸ்நவ்ஸ்காவினுள் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களை, முற்றிலும் பெண் தன்மை சார்ந்த விஷயங்களைப் புகைப்படங்களாக வெளிப்படுத்த இந்த மாற்றம் உதவுகிறது. இந்த வெளிப்பாடுகள் தனிமனித வாழ்க்கையில் இருப்பவற்றைப் பொதுவெளிக்கு எடுத்துச் செல்ல ஒரு பாதையை அமைப்பதாக அவர் உணர்கிறார்.

“இந்தப் புகைப்படங்கள்தான் எனக்கான மொழி, இந்த மொழி வழியாகவே என்னுள் இருக்கும் உண்மையை நான் அறிகிறேன். புகைப்படம் எடுக்கிற அந்த ஒரு நொடியில்தான் கற்பனையும் யதார்த்தமும் ஒன்றாகிறது“ என்கிறார் அக்னியஸ்கா சோஸ்நவ்ஸ்கா.

டீடா பேபே (Dita pepe)

நாம் சார்ந்திருக்கும் சூழலும், நாம் சார்ந்திருக்கும் மனிதர்களும் நமது தனிப்பட்ட அடையாளத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதை செல்ஃப் போட்ரெய்ட்ஸ் புகைப்படங்கள் மூலமாகக் கூறுபவர் டீடா பேபே. இவர் 1973-ல் செக் குடியரசில் பிறந்தவர். அவர்கள் செய்யும் தொழிலை செல்ஃப் போட்ரெய்ட் படங்களை எடுப்பதில் வல்லவர். புகைப்படத்தில் இவருடன் சேர்ந்து நிற்கும் ஆண்களின் குழந்தைகள் அல்லது டீடா பேபே-ன் குழந்தைகள் இவர்களுடன் புகைப்படத்தில் இடம்பெறுகிறார்கள். இவர் எடுக்கிற செல்ஃப் போட்ரெய்ட்ஸ் எல்லாமே அந்தந்த ஆண்கள் வாழும் சூழ்நிலையில் எடுக்கப்படுகிறது. இவை அந்த நொடியின் அழகியல் தன்மையை வெளிப்படுத்துகிறது என்றும் கூறுகிறார்.

Dita pepe
Dita pepe
Dita pepe Photography
Dita pepe
Dita pepe
Dita pepe Photography
Dita pepe
Dita pepe
Dita pepe Photography

`THE MISSES , LOVE YOURSELF, INTIMITA' போன்று பல புத்தகங்களை இவர் வெளியிட்டுள்ளார். `CZECH CULTURE MINISTRY AND MUSEUM OF CZECH CULTURE MINISTRY AWARD, 1ST CZECH PRESS PHOTO 2003 AWARD, 1ST AUDIENCE AWARD' உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

உலகின் மிகச்சிறந்த தனித்து நிற்கும் எண்ணற்ற பெண் புகைப்படக் கலைஞர்களில் சிலரே இவர்கள். உங்களுக்குத் தெரிந்த பெண் புகைப்படக் கலைஞர்களை கமென்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.