Published:Updated:

சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி

அனுபமா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
அனுபமா பானர்ஜி

கணிதமேதை சகுந்தலா தேவியின் மகள் அனுபமா பானர்ஜி

சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி

கணிதமேதை சகுந்தலா தேவியின் மகள் அனுபமா பானர்ஜி

Published:Updated:
அனுபமா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
அனுபமா பானர்ஜி

‘ஒரு பெண் கணித நிபுணராக இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?’ - உலகமே வியந்து கொண்டாடிய ‘ஹியூமன் கம்ப்யூட்டர்’ சகுந்தலா தேவியிடம் நிருபர் கேட்ட கேள்வி இது.

ஓர் ஆண் பத்திரிகையாளராக இருப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ - அதே நபரைப் பார்த்து சகுந்தலா தேவி வீசிய எதிர்க்கேள்வியில் வாயடைத்துப் போனவர் அந்த நிருபர் மட்டுமல்ல, ஆணாதிக்கச் சிந்தனைவாதிகள் பலரும்தான். இது நடந்தது 70களில். கணிதத்திறமையை ஆண்மையோடு பொருத்திப் பார்த்த சமூக நியதியைத் தகர்த்த எண்களின் காதலி சகுந்தலா தேவி.

சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி

பாரதியாருக்குக் கசந்த கணக்கு, பாரதி கண்ட புதுமைப்பெண் சகுந்தலா தேவிக்கு இனித்திருக்கிறது. கணிதத்திறமைக்கு மட்டுமல்ல, முற்போக்கு சிந்தனைகள், துணிச்சல், ஆணாதிக்க மனோபாவ எதிர்ப்பு என அந்தக் காலத்திலேயே நிஜமான பெண்ணிய அடையாளமாகத் திகழ்ந்தவர்.

பாடப்புத்தகங்களில் படித்தும் படிக்காமலும் கடந்துபோன கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை, அமேஸான் ப்ரைமில் அழகான, நேர்த்தியான படமாக வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சகுந்தலா தேவியாக வித்யா பாலன். சகுந்தலா தேவியின் வாழ்க்கையோடு சேர்த்து, அவருக்கும் அவரின் மகளுக்குமான பாசப்போராட்டமே கதையின் கரு.

சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி
சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி

‘`அம்மா இறந்து சரியா மூணு வருஷங்கள் கழிச்சு நடந்த சந்திப்பு அது. லண்டன்ல அம்மாவோட ஃபேவரைட் ஸ்டோர் ‘ஹாரோட்ஸ்’ல படத்தோட டைரக்டர் அனு மேனனை நானும் என் ஹஸ்பண்டும் சந்திச்சோம். ஒரு காபி சாப்பிட்டுக் கிளம்பறதா பிளான். ஆனா, அந்த மீட்டிங் ஆறு மணி நேரம் போச்சு. அம்மாவோட வாழ்க்கையை பயோபிக்கா எடுக்கிறதுல அனு ஆர்வமா இருந்தாங்க. நானும் என் கணவரும் அம்மாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகிட்டோம். அப்புறம் அந்த காபியும் மீட்டிங்கும் அடிக்கடி தொடர ஆரம்பிச்சது. அதன் விளைவுதான் ‘சகுந்தலா தேவி’ பயோபிக்...’’ - லண்டனிலிருந்து நம்முடன் பேட்டிக்காக இணைந்தவர் சகுந்தலா தேவியின் மகள் அனுபமா பானர்ஜி. அங்கே தன் கணவர் அஜய் அபய் குமாருடன் ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் பிசினஸ் செய்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி
சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி
சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி

‘`படம் ரிலீசாகிறதுக்கு முதல்நாள்வரை எனக்குள்ளே ஒருவிதப் பதற்றம் இருந்தது. அம்மாவுக்கும் எனக்குமான உறவு எப்படியெல்லாம் இருந்ததுன்னு இந்த உலகமே பார்க்கப் போகுதேங்கிற படபடப்பு இருந்தது. ஸ்க்ரீன்ல அம்மாவின் கேரக்டரைப் பார்த்த பிறகு எனக்கு வார்த்தைகள் இல்லை. அவங்களை ‘ஹியூமன் கம்ப்யூட்டரா’ மட்டுமே தெரிஞ்சிருந்த இந்த உலகத்துக்கு அவங்க எப்பேர்ப்பட்ட பாசக்காரின்னு உணர்த்தின படம் இது...’’ - சிலாகித்துத் தொடர்கிறார் அனுபமா.

சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி

‘’அம்மாவுக்கு ஸ்கூல் போகிற வாய்ப்பு கிடைக்கலை. மற்ற குழந்தைகளுக்குக் கிடைச்ச எந்த வாய்ப்புகளும் கிடைக்கலை. அம்மாவோட அக்காவின் இறப்பு அவங்களை மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்திடுச்சு. அஞ்சு வயசுலயே அம்மா சம்பாதிக்க ஆரம்பிச் சிட்டாங்க. அவங்க வாழ்க்கையில் அடுக்கடுக் கான துயரங்கள்...

சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி
சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி

அம்மா என்ன பண்ணினாலும் அப்பா அவங்களுக்கு பயங்கரமா சப்போர்ட் பண்ணி யிருக்கார். அவங்களுடைய விவாகரத்துக்குப் பிறகும் அப்பாவோடு நல்ல நட்பில் இருந்தாங்க. சிங்கிள் பேரன்ட்டா அம்மாகிட்ட வளர்ந்தபோது ஆரம்ப நாள்களில் அதுக்குப் பழக நிறையவே சிரமப்பட்டிருக்கேன். அம்மா அவங்க வேலையில பிசியா இருப்பாங்க. என்கூட அதிக நேரம் செலவு பண்ண முடியாது. அப்புறம் போர்டிங் ஸ்கூல். காலேஜ் படிச்சபோது. ஹாலிடேஸ்ல எல்லாரும் அவங்கவங்க வீடுகளுக்குப் போவாங்க. அம்மா வேற வேற நாடுகள்ல இருப்பாங்க, என்னால போக முடியாது. ஆனா, இது எல்லாமே ஒரு கட்டத்துல மாற ஆரம்பிச்சது. என்கூட நேரம் ஒதுக்க ஆரம்பிச்சாங்க. என்னுடைய 20 வயசுலதான் அவங்களைப் புரிஞ்சுக்க வாய்ப்பு கிடைச்சது. அவங்களுடைய குழந்தைப்பருவத்துல அவங்க தொலைச்ச விஷயங்கள், ஒவ்வொரு நாளையும் போராட்டங்களோடும் சவால்களோடும் அவங்க கடந்துவந்ததுன்னு எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டேன். நானும் அம்மாவும் மட்டுமேயான எங்க உலகத்துல நிறைய சந்தோஷங்கள்.... ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டோம். எங்களுக்குள்ள நல்ல நட்பு மலர்ந்தது. அம்மாகிட்ட எதையும் பேச முடியற சுதந்திரம் எனக்கு இருந்தது. அம்மாவை இன்னும் அதிகமா ஆழமா நேசிக்க ஆரம்பிச்சேன். அவங்களுடைய ஆளுமையை ரசிச்சிருக்கேன்...’’ படம் பார்ப்பவர்களையும் ரசிக்கவைக்கிற ஆளுமை அது.

சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி

ஒருநாள்கூட ஓய்வின்றி உலகம் முழுக்க பயணம் செய்த சகுந்தலா தேவிக்குத் தன் பூர்வீகம் பெங்களூருதான் சொர்க்கமாக இருந்திருக்கிறது.

‘`பெங்களூருல அம்மாவுக்கு வீடு இருந்தது. வருஷத்துல ஒருமுறை அங்கே போயிடுவோம். பெங்களூரு வித்யார்த்தி பவன்ல மொறுமொறு தோசை அம்மாவோட ஃபேவரைட். அம்மாவுக்கு டயட்ல எல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. அம்மாவுக்கு மைசூர்பாகு ரொம்ப பிடிக்கும். நான் திட்டுவேன்னு எனக்குத் தெரியாம மறைச்சுவெச்சு சாப்பிடுவாங்க.. அந்த விஷயத்துல அவங்க ஒரு குழந்தை.. அதே நேரம் அவங்க ரொம்ப பொஸஸிவ்.

சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி

என் கல்யாண விஷயத்துல அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணினார்னு அம்மாவுக்கு அப்பாமேல பயங்கர கோபம். அம்மா அவர்கிட்ட பேசறதையே நிறுத்திட்டாங்க.. ஆனாலும் அவங்களுடைய அந்தக் கோபம் என்பக்கம் திரும்பலை. என் மூத்த மகள் அம்ரிதா மெடிசின் படிக்கிறாள். அவ தன்னோட சாயல்ல இருக்கிறதா சொல்லி அம்மா ரொம்ப பெருமைப்படுவாங்க. இளையவள் நேனா, ஜிசிஎஸ்சி (இந்தியாவில் 10-ம் வகுப்புக்குச் சமம்) முடிச்சிருக்கா. அவளுக்கு பொருளாதாரத்தில் விருப்பமிருக்கு. ரெண்டு பேரும் மேத்ஸ்ல பிரில்லியன்ட்டா இருக்காங்க. நானும் ஸ்கூல்ல மேத்ஸ்ல பிரில்லியன்ட் ஸ்டூடன்ட்தான். ஆனா அதை என் கரியரா எடுக்கச்சொல்லி அம்மா ஒருநாளும் வற்புறுத்தினதில்லை. அதான் அம்மா...’’ - அம்மாவின் நினைவுகள் மட்டுமே நிரந்தரம் என்ற நிகழ்காலம் துயரமாகவே தொடர்கிறது அனுபமாவுக்கு.

 வித்யா பாலனுடன் அனுபமா பானர்ஜி
வித்யா பாலனுடன் அனுபமா பானர்ஜி

‘`இன்னும்கூட அம்மாவின் இழப்புலேருந்து என்னால மீள முடியலை. உடம்புக்கு முடியாம அம்மா பெங்களூரு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருந்தாங்க. அவங்களுக்கு ரொம்பவே முடியலை. அப்பவும் `என்னால இங்க படுத்திருக்க முடியாது, நான் போகணும்'னு அடம்பிடிச்சாங்க. ‘அப்படியெல்லாம் போகக்கூடாது. உங்க உடம்பு மோசமா இருக்கு’னு டாக்டர்ஸ் சொன்னபோதும், ‘என் மூளை ரொம்பவே ஆக்டிவ்வா இருக்கு. நான் ஃபிட்டாதான் இருக்கேன்’னு அவங்ககிட்ட விவாதம் பண்ணினாங்க. அவங்களுடைய கடைசி நாள்... அம்மா பக்கத்துல உட்கார்ந்து மணிக்கணக்குல பேசிட்டிருந்தது நினைவிருக்கு. எல்லாத்தைப் பத்தியும், எல்லாரைப் பத்தியும் பேசினோம். திடீர்னு அம்மா இல்லாமப் போயிட்டாங்க. அந்த அதிர்ச்சியிலேருந்து மீள முடியலைதான். அம்மா இல்லைங்கிறதுதான் நிதர்சனம். மற்றவர்களோடு பகிரும்போதுதானே சோகங்கள் குறையும்? மனசு திறந்து பேசினதுல பாரம் கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கு.’’

படங்கள் உதவி: அமேஸான் ப்ரைம் வீடியோ மற்றும் சகுந்தலா தேவியின் பர்சனல் கலெக்‌ஷனிலிருந்து அனுபமா பானர்ஜி

யார் இந்த சகுந்தலா தேவி?

மூளைக்கு வேலை கொடுக்கும் கணிதப்பாடம் ஆண்களுக்கானதாகப் பார்க்கப்பட்ட காலத்தில், மூளை ஆண், பெண் இருவருக்குமானது, கணக்குப் பாடம் மூளையும் ஆர்வமும் இருக்கும் யாருக்குமானது என நிரூபித்துக்காட்டியவர் சகுந்தலா தேவி. உலகமே போற்றிய கணித மேதை.

சாதனை தேவி: உலகத்துக்கு அவங்க ஹியூமன் கம்ப்யூட்டர்... எனக்கு பாசக்காரி

பெங்களூரைச் சேர்ந்த இவர் பள்ளிக்கூட வாசலையே மிதிக்காமல் எண்களில் நிபுணத்துவம் பெற்றவர். பார்த்ததுமே உச்சிமுகர்ந்து கொண்டாடப்பட வேண்டிய திறமைக்குச் சொந்தக்காரராக இருந்தும், கிட்டத்தட்ட ஒரு குழந்தைத் தொழிலாளியாகத்தான் வெளியுலகுக்கு முதலில் அறிமுகமானார் சகுந்தலா. தந்தையின் ஏற்பாட்டில், பொது இடங்களில் கணிதம் தொடர்பான திறன்வெளிப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். இதன் மூலம் அவருக்கு ஏதோ ஒரு வருவாயும் கிடைக்க ஆரம்பித்தது. ஆறு வயதில் மைசூர் பல்கலைக்கழகத்திலும், எட்டு வயதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தி சாதனை புரிந்தார் சகுந்தலா. லண்டன், அமெரிக்கா என உலகம் முழுவதும் பயணம் செய்து, தன் கணிதத் திறமையை நிரூபிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, இள வயதிலேயே உலக அளவில் பிரபலமானார் சகுந்தலா.

எத்தனை இலக்க எண்களையும் கம்ப்யூட்டரை விடவும் விரைவாகவும் துல்லியமாகவும் கணக்கிடுவதில் நிபுணி. அதனாலேயே ‘ஹியூமன் கம்ப்யூட்டர்’ எனக் கொண்டாடப்பட்டார். கின்னஸ் சாதனையாளரான இவர், எண்களை நண்பர்களாக பாவித்தவர்.

பெண்ணியம் பேசுவது, விவாகரத்து, ஹோமோ செக்ஸுவாலிட்டி பற்றிய புத்தகம் எழுதியது என எப்போதும் விமர்சனங்களுக்குட்பட்டவராகவே இருந்திருக்கிறார் சகுந்தலா தேவி. கணிதம் மட்டுமன்றி, ஜோதிடம், சமையல், நாவல் என பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். உடல்நலமின்றி தன் 83-வது வயதில் உயிரிழந்தார். அதே 2013-ம் வருடம் கூகுள் நிறுவனம் இவரது படத்தை முகப்பு பக்கத்தில் வெளியிட்டு கௌரவித்தது குறிப்பிடத் தக்கது.