Published:Updated:

அந்த தம்பதி விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்? - சிவசங்கரி பகிரும் சுவாரஸ்யம்!

சிவசங்கரி
சிவசங்கரி

40 வயதுகளில் இருந்த இருவரும், 'வாழ்வில் சுவாரஸ்யமில்லை. இனி நாம் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும்... தனித்தனியாகவே இருப்போம்' என முடிவு செய்து, பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனார்கள்.

சிறுகதைகள், நாவல்கள், பயணக்கட்டுரைகள் என இலக்கியத்தின் பல தளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டவர் எழுத்தாளர் சிவசங்கரி.

பெண்களின் முன்னேற்ற எண்ணங்களும் இளைய தலைமுறைக்கான வழிகாட்டுதல்களும் இவரின் படைப்புகளில் மேலோங்கி நிற்கும். பாரம்பர்யத்துக்கும் நவீனத்துக்குமான மையப்புள்ளியாக இவரின் படைப்புகள் திகழும்.

"கோவிட்-19, லாக்டௌன்... நம் தலைமுறை இதுவரை சந்தித்திராத ஒரு வித்தியாசமான சூழல். என்றாலும், குடும்பத்துடன் ஒரு நெருக்கமான இணைப்பையும் பிணைப்பையும் உருவாக்கும் காரணியாகவும் இந்த நாள்களைப் பார்க்க முடிகிறது.

வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தவர்களின் கையைப் பிடித்து இழுத்து லாக் டௌன் வீட்டுக்குள் உட்கார வைத்துவிட்டது. நீண்டகாலத்துக்குப் பிறகு குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். நாம் அனுபவிக்காத ஒரு சுகமாக இது இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன், பிரான்ஸில் நடந்த ஒரு விவாகரத்து சம்பவம் பரபரப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டது.

கணவன் மிகப்பெரிய தொழிலதிபர். மனைவி சமூகத்தில் மிகப்பெரிய சேவைகள் புரிந்தவர். விழாக்கள், கூட்டங்களில் கலந்துகொள்வதில் புகழ் பெற்றவர். சமூக அந்தஸ்தில் இருந்த இந்த இருவருமே மிகவும் பிஸியானவர்கள்.

சிவசங்கரி
சிவசங்கரி

40 வயதுகளில் இருந்த இருவரும், 'வாழ்வில் சுவாரஸ்யமில்லை. இனி நாம் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும்... தனித்தனியாகவே இருப்போம்' என முடிவு செய்து, பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனார்கள்.

தம்பதியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்துக்கு ஒரு வெள்ளிக்கிழமையில் வந்தது. இருவரிடமும் விசாரித்த நீதிபதி, 'சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் இவர்களை ஒரே அறையில் தங்க வையுங்கள். திங்களன்று தீர்ப்பளிக்கிறேன்' என்று சொல்லி அனுப்பிவிட்டார். தம்பதிக்குக் கோபம், குழப்பம். வேண்டாவெறுப்பாக இருவரும் ஓர் அறையில் தங்கச் சென்றார்கள்.

இரண்டு நாள்கள் கழித்து நீதிமன்றம் வந்த அவர்கள், 'எங்களுக்கு விவாகரத்து வேண்டாம். மனம்விட்டுப் பேசிக்கொள்வதற்கு நேரம் இல்லாமல் இருந்ததுதான் எங்களுக்கிடையில் இருந்த பிரச்னை. இப்போது அது தீர்ந்தது. நாங்கள் செய்த தவறுகள், செய்த செயல் களுக்கான காரணங்கள் என எல்லாவற்றையும் உணர்ந்துவிட்டோம்' எனக்கூறி வழக்கை வாபஸ் பெற்றனர். இது கற்பனையல்ல, உண்மை!

லாக்டெளன் காலத்தையொட்டி, இந்தச் சம்பவத்தை எழுத்தாளர் சிவசங்கரி நினைவுகூர்வது ஏன்? - அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > தொலைந்த வசந்தங்கள் திரும்பி வருகின்றன! - எழுத்தாளர் சிவசங்கரி https://bit.ly/3cqVXGa

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு