``எனக்குத் தாய்மொழி மலையாளம்; செவிவழியாகவே கேட்டுக் கற்றுக்கொண்டது தமிழ்; பள்ளி, கல்லூரிகளில் பாடமாகப் பயின்றது கன்னடம்; அடிப்படையில் ஆங்கிலப் பேராசிரியை - இப்படி மொழிகளின் கலவையாகவும் காதலியாகவும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் சூசன் டேனியலின் முக்கியமான அடையாளம்... இலக்கிய ஆளுமை.

பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே களமாடும் இந்த இலக்கிய உலகில், மொழிபெயர்ப்பு நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்று பெருமை சேர்த்திருப்பவர்.

தற்போது, கொரோனா பொதுமுடக்கக் காலத்தை சாதகமாக்கிக்கொண்டு, தன் நீண்டகால விருப்பமான கன்னட சிறுகதைத் தொகுப்பு ஒன்றை ஒரே மூச்சில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முடித்துள்ளார் சூசன். மைசூரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பேராசிரியையாகப் பணியாற்றியவர். 25 ஆண்டுகளுக்கு முன் பணியிலிருந்து விலகியவர், கணவரின் சொந்த ஊரான ஊட்டியில் குடியேறி, ஊட்டியின் மகளாகவே மாறிவிட்டார்.

`தேவனூர்' மகாதேவா என்ற எழுத்தாளர் கன்னடத்தில் இயற்றிய `குசும பாலே’ என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தமைக்காகத்தான், இவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுக்கான இந்த விருது, ஊரடங்கு காரணமாக விழா நடைபெறாததால் இன்னமும் சூசனின் கைகளுக்கு வந்து சேரவில்லை. ஆனால், விருது, புகழ் என எதையும் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து இலக்கிய பணிகளில் தீவிரமாகிவிட்டார்.

“அவரவர்களுக்கென்று தனித்தனி வேலைகள் இருக்க, எப்போதும் ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டே இருந்தோம். ஆனால், அனைத்தையும் தகர்த்தெறிந்ததோடு, அடுத்து என்ன நடக்கும் என ஓரளவுக்குக்கூட யூகிக்க முடியாதபடி முழுக்கட்டுப்பாட்டையும் தன்வசம் எடுத்துக் கொண்டுவிட்டது கொரோனா. இந்த ஊரடங்கு நாள்கள் நம்மில் பலரிடம் மன அழுத்தத்தையும், தனிமையையும், எதிர்காலம் குறித்த அச்சத்தையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அதனால், நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக்கொள்ள, மனதுக்கு பிடித்தமான ஆக்கபூர்வமான மாற்றுவழிகளில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவது அவசியம். அப்படித்தான் நானும் இதில் மூழ்கியிருக்கிறேன்.

இலக்கியத்தில் இயங்கும் பெண்களுக்கு நேர மேலாண்மை என்பது பெரும் சவாலாகவே இருக்கும். இப்போதோ பலரிடம் நேரம் நீண்டு கிடப்பதாகவே கருதுகிறேன். இயல்பாகவே வாசிப்பிலும் எழுத்திலும் அதிக நாட்டம்கொண்ட எனக்கு, இந்த ஊரடங்கு நாள்கள் வாசிப்பு நேரத்தை அதிகப்படுத்தியதோடு ஆழ்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த நாள்களைப் பயனுள்ளதாக்க வேண்டும் என்ற முனைப்பில்தான் நீண்டநாள் விருப்பங்களில் ஒன்றாக இருந்த கன்னட எழுத்தாளர் தேவனூர் மகாதேவாவின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க முடிவு செய்தேன்.

மகாதேவாவின் சிறுகதைகள், கர்நாடகத்தில் வாழும் பட்டியல் இனமக்களின் வாழ்வியலின் வெளிப்பாடாகக் கொண்டவை. அந்த மக்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், ஆக்கபூர்வ செயல்கள் என அவர்களுடைய நேர்மறையான வாழ்வை தத்ரூபமாக எழுதியுள்ளார் மகாதேவா. தேவையற்ற பரிதாபத்தை ஏற்படுத்த முனையாமல், அவர்களுடைய யதார்த்த வாழ்வியலைப் படம்பிடித்து காட்டும் வகையில்தான் அவருடைய எழுத்துகள் இருக்கும். பெண்கள்மீதும் பட்டியலின மக்கள் மீதும் தீராத பற்று கொண்டிருக்கும் எனக்கு, அவருடைய சிறுகதைகள் அதை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

கன்னட மக்களில் ஒரு பிரிவினர் பேசும் எழுத்துருவற்ற பேச்சுவழக்கை மிக லாகவமாகக் கையாண்டுள்ளார் மகாதேவா. இந்த மக்களின் வாழ்வியல் பரந்துபட்ட மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில்தான் என்னையும் மறந்து பல மணி நேரங்களுக்கு அவருடைய கதைகளில் மூழ்கி, மொழிபெயர்ப்பை நிறைவு செய்துள்ளேன். இந்த மாத இறுதிக்குள் அச்சுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன். அடுத்தபடியாக ஆங்கிலத்தில் நான் எழுதியுள்ள சில சிறுகதைகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளேன். அதற்கான வேலைகளையும் தொடங்கப்போகிறேன்'' என்று சிலிர்ப்புடன் சொல்லும் சூசன்,

``கொரோனாவும் அது கொண்டுவந்து சேர்த்த தனிமையும் ஆரம்பத்தில் சற்று குழப்பமடையவே செய்தது. பின்னர் எழுத்தின் துணைகொண்டு எதிர்கொள்ள பழகிக்கொண்டேன். என்போல் ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு துணை கிடைக்கவே செய்யும். தெம்புடன் வெல்லுங்கள்’’ என்று நம்பிக்கையூட்டி முடித்தார்.