Published:Updated:

நகம்... நகமறிய ஆவல்! - யூடியூபில் கலக்கும் கிறிஸ்டின்

கிறிஸ்டின்
பிரீமியம் ஸ்டோரி
News
கிறிஸ்டின் ( Justin Van Leeuwen )

யூடியூபில் கலக்கும் கிறிஸ்டினுக்கு நேர் எதிரான மறுபக்கம் உள்ளது. கனடா நாட்டு அரசின் குற்றவியல் தரவுகள் ஆராய்ச்சியாளராகவும் பணி யாற்றுகிறார்.

வல்லவனுக்குப் புல் மட்டுமல்ல... நகம்கூட ஆயுத மாகலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் 7.72 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை நகத்தின் மூலம் மட்டுமே ஈர்த்துள்ள கிறிஸ்டின் ரகெல் ரோட்டன் பெர்க். 32 வயதாகும் கிறிஸ்டின், நகம், நகம் சார்ந்த வீடியோக்களின் மூலமே பிரபலமடைந்தவர்.

கனடா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினுக்குப் பதின் பருவத்தில் நகங்களைக் கவனிப்பதில் அதீத ஆர்வம். குறிப்பாக, விதவிதமாக நெயில் பாலிஷ், நெயில் பெயின்டிங் செய்வதில். ‘ஒரு சேனல் தொடங்கி இதையே உலகத்துக்குச் சொன்னால் என்ன...’ என்ற எண்ணம் தோன்ற, முதுநிலை சோஷியாலஜி படிப்பை முடித்த கையோடு 2014-ம் ஆண்டு அவர் தொடங்கியதுதான் Simply Nailogical யூடியூப் சேனல்.

தன் கை விரல் நகங்களில் வேறு வேறு வண்ணங்களில் 100 அடுக்குகளுக்கு நெயில் பாலிஷ் போட்டு அவர் வெளி யிட்ட வீடியோ செம ஹிட். அதை யடுத்து 100 அடுக்கு லிப்ஸ்டிக் சேலஞ்ச், 100 அடுக்கு டி-ஷர்ட் சேலஞ்ச் என புதிய முயற்சிகளுக்கு சமூக வலை தளங்களில் பலர் கிளம்பினர்.

உடைந்த நகத்தை ஒட்டவைப்பது, நெயில் ஆர்ட், நக டிசைன்களுக்கான டுட்டோரியல், ஜிம்மில் நெயில் பாலிஷ் போடுவது, நெயில் பாலிஷ் பிராண்டு ரெவ்யூ, தன்னுடைய 2,000 ப்ளஸ் நெயில் பாலிஷ் பாட்டில்களை அடுக்கி வைப்பது என நகத்தைச் சுற்றியே புதுசு புதுசாக வெரைட்டி காட்டுகிறார். தன் வீடியோக்களில் நகைச்சுவையையும் தூவிப் பேசுவதால் ஆண், பெண் என அனைவரும் இவருக்கு ரசிகர்கள். சில நேரங்களில் நகம் தவிர வேறு காமெடி வீடியோக்களையும் வெளியிடுகிறார். ஆனால் ஹிட்டடிப்பவை நக வீடியோக்கள்தான்.

யூடியூபில் கலக்கும் கிறிஸ்டினுக்கு நேர் எதிரான மறுபக்கம் உள்ளது. கனடா நாட்டு அரசின் குற்றவியல் தரவுகள் ஆராய்ச்சியாளராகவும் பணி யாற்றுகிறார். `வீக்எண்ட்' யூடியூபரான கிறிஸ்டின் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை சின்சியரான அரசு ஊழியர்.

“சக ஊழியர்களில் ஒருவர் என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டார். அதன் பிறகு அலுவலகம் முழுவதும் பேசு பொருளாகிவிட்டேன். நான் யூடியூபில் கலகலப்பாகப் பேசுவதைப் பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சிதான். ஏனென் றால் அலுவலகத்தில் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு அமைதியான ஆள் நான்.

நகம்... நகமறிய ஆவல்! - 
யூடியூபில் கலக்கும் கிறிஸ்டின்

யூடியூபில் பிரபலம் என்றாலும் அலுவலக வாழ்க்கை என்ற மற்றொரு பக்கத்தில் எல்லாரையும் போலவே சாதாரண நபராக இருப்பதையே விரும்புகிறேன்” எனும் கிறிஸ்டின் யூடியூபில் பல லட்சம் வருமானம் ஈட்டுகிறார். ஆனாலும் அரசு வேலையையும் நேசித்துத் தொடர்கிறார்.

“அரசு ஊழியர் என்பது தேர்ந்தெடுத்த துறை. அதனுடன் யூடியூபர் என்பதைக் குழப்பிக்கொள்ளாமல் தெளிவாகப் பணியாற்றிவருகிறேன். ஒருவர், தான் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பாக வேலை செய்ய முடியும். அதேசமயம் ஃபன்னான, கிரியேட்டிவ்வான மற்றொரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியும் என்று இளம் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன்” - வண்ண நகத்துடன் தம்ஸ் அப் காட்டுகிறார் கிறிஸ்டின்.

நீ வெட்டி வெட்டிப்போடும்

நகத்திலெல்லாம்

குட்டி குட்டி

நிலவு தெரியுதடி!