Published:Updated:

வாழ்க்கை விதியாக வளம் தரும் வாரன் பஃப்பெட்டின் வணிக விதி! | மினிமலிசம் - 14

மினிமலிசம்

உங்கள் ஆற்றல் மற்றும் கவனத்தை குறைவான பணிகளில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகள் மேம்படும். நீங்கள் ஒரு திறமையில் தேர்ச்சி பெற விரும்பினால் உங்கள் நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Published:Updated:

வாழ்க்கை விதியாக வளம் தரும் வாரன் பஃப்பெட்டின் வணிக விதி! | மினிமலிசம் - 14

உங்கள் ஆற்றல் மற்றும் கவனத்தை குறைவான பணிகளில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகள் மேம்படும். நீங்கள் ஒரு திறமையில் தேர்ச்சி பெற விரும்பினால் உங்கள் நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மினிமலிசம்

நம் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்காத விஷயங்களில் இருந்து நாம் எவ்வளவு அதிகமாக விலகிச் செல்கிறோமோ, அவ்வளவு அமைதியாகவும் சுதந்திரமாகவும் இலகுவாகவும் உணர்கிறோம். ஆம்... மினிமலிசத்தின் அடிப்படை இதுதான். மினிமலிசம் என்பது நுகர்விலிருந்தே (கன்ஸ்யூமரிஸம்) விலகியிருக்கும் ஒரு வழி அல்ல; மினிமலிசம் என்பது அதைப் பொறுப்புடன் பயன்படுத்தும் ஒரு வழியாகும்.

பிரபல பங்குச்சந்தை மேதை வாரன் பஃபெட்டின் `20 ஸ்லாட்’ விதியானது மினிமலிச வாழ்வியலுக்கும் பொருந்தும் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்தானே? உண்மையில் நம் வாழ்க்கையை எளிதாக்குவது மற்றும் முடிவுகளைத் தீர்க்கமாக எடுப்பது எப்படி என இந்த விதியில் இருந்தும் நாம் அறியலாம்.

வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்

அது 1994-ம் ஆண்டு... சார்லி முங்கர், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்ற வந்தார். அவர் 20 ஆண்டுக்காலம் வாரன் பஃபெட்டுடன் இணைந்து பணியாற்றியவர். இருவரும் பெர்க்ஷயர் ஹாத்வேயை, பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்த்தனர்.

அன்று, முங்கர் யு.எஸ்.சி பிசினஸ் ஸ்கூலுக்கு, `ஆரம்ப உலக ஞானத்தின் ஒரு பாடம்’ என்ற தலைப்பில் ஓர் உரையை வழங்கினார். அவரது விளக்கக்காட்சியின் பாதியிலேயே, அருமையான பல செய்திகளுக்கு மத்தியில், வாரன் பஃபெட் தன் வாழ்க்கை முழுவதும் பெரும் வெற்றியுடன் பயன்படுத்திய ஓர் உத்தியைப் பற்றி விவாதித்தார். அது...

``வாரன் பஃபெட்டின் மகத்தான செல்வம் அவரது நம்பமுடியாத மதிப்புமிக்க ஞானத்தால் மட்டுமே உருவானது. அவரது அடிப்படை விதி இதுதான்...

20 ஸ்லாட்டுகள் கொண்ட டிக்கெட் மட்டுமே உங்களிடம் இருக்கிறது. இதைப் பயன்படுத்தியே உங்களின் இறுதி நிதி நலனை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் நீங்கள் 20 வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறீர்கள். இது, வாழ்நாளில் நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து முதலீடுகளையும் உள்ளடக்கியது. நீங்கள் ஒரு ஸ்லாட்டைப் பயன்படுத்திவிட்டீர்கள் என்றால், அதை மீண்டும் பயன்படுத்தி உங்களால் வேறு எந்த முதலீடும் செய்ய முடியாது. அதனால், நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது பற்றி உண்மையிலேயே கவனமாகச் சிந்திப்பீர்கள். நீங்கள் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதையே செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதைப் பற்றிய நினைவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். எனவே, நீங்கள் இன்னும் சிறப்பாகச் செய்வீர்கள்!"

முதலீடு
முதலீடு

இதுதான் `20 ஸ்லாட் ரூல்’ என்கிற ஸ்மார்ட் முதலீடுகளுக்கான வாரன் பஃபெட்டின் பொன்விதி. ஆனால், இதில் முதலீட்டைத் தாண்டியும் பல விஷயங்கள் உள்ளன. இது மினிமலிஸ்ட்டு களுக்கும் உதவும். அதாவது, இது வணிகம் மட்டுமல்ல... வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும் நம்பமுடியாத அளவுக்கு பலனைப் பெற வாரனின் இந்தப் பொன் விதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள எளிய உதவிக் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.

பஃபெட்டின் விதி நமது பணத்தைவிடவும் அதிக விஷயங்களைக் குறிக்கிறது. ஓர் உதாரணமாக, வேலைப் பட்டியல்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்களில் ஒன்றான மல்டி டாஸ்க்கிங்.’

ஆனால், ஒரே நேரத்தில் ஓராயிரம் விஷயங்களைச் செய்வது நம் மூளையை எளிதில் திசைதிரும்பச் செய்கிறது. அதோடு, அது புதிய தகவல்களைச் செயலாக்க 4 மடங்கு அதிக நேரம் எடுக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மினிமலிச செயல்பாடுகளுக்கு மிகவும் பொருந்தும்.

தீவிர கவனம்
தீவிர கவனம்

ஆகவே, உங்கள் பணிப் பட்டியலை பஞ்ச் கார்டு போல கருத வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் X எண்ணிக்கையிலான பணிகளை மட்டுமே செய்ய முடியும் என்பதை உணர்ந்து, உங்கள் முழு, லேசர்-மையப்படுத்தப்பட்ட கவனத்தை எதில் கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றிக் கவனமாகச் சிந்தியுங்கள். முன்னுரிமை அளிப்பதன் மூலம், ஒவ்வொரு திட்டத்திலும் நீங்கள் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

`ஸ்லாட்டுகள்’ அடிப்படையில் நாம் சிந்திக்கத் தொடங்கும்போது, நாம் அதை உண்மையில் முக்கியமானவற்றை நோக்கி செலுத்தலாம். அதோடு, அதை அதிக தூரம் நீட்டிக்கலாம். அதற்காக நாம் ஒரு துறவியைப் போல சிக்கனமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டியதில்லை, ஆனால், அடுத்த முறை போனஸ் பணம் அல்லது ஓய்வு நேரம் உங்களிடம் இருந்தால், அதற்கு எந்த ஸ்லாட்டைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கவனமாகக் கவனியுங்கள்.

நேரம் உங்கள் கையில்!

வாரன் பஃபெட்டின் 20 ஸ்லாட் விதி நேர முதலீடுகளுக்கும் சிறந்த அணுகுமுறையாகும். குறிப்பாக, அது உங்களை உயர்த்துவதற்கு உங்களைக் கட்டாயப்படுத்துகிறது.

உங்கள் ஆற்றல் மற்றும் கவனத்தைக் குறைவான பணிகளில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகள் மேம்படும்.

நீங்கள் ஒரு திறமையில் தேர்ச்சி பெற விரும்பினால் - உண்மையிலேயே தேர்ச்சி பெற விரும்பினால் - உங்கள் நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மிகச்சிறந்த யோசனைகளுக்கு இடமளிக்க நீங்கள் இரக்கமே இன்றி பல நல்ல யோசனைகளையும் அகற்ற வேண்டும். நீங்கள் சில அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். கவனச் சிதறல்களைப் புறக்கணிக்க வேண்டும்.

வாழ்க்கை விதியாக வளம் தரும் வாரன் பஃப்பெட்டின் வணிக விதி! | மினிமலிசம் - 14

இலக்கு இடம் மாறுகிறதா?

நீங்கள் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தால், வெகு சிலரே நீண்ட காலத்துக்கு ஒரே திறமை அல்லது இலக்கில் செல்வதைக் கவனிக்க முடியும். ஆழ்ந்த கவனம் செலுத்தி, ஓரிரு ஆண்டுகளில் இலக்கை அடைவதற்குப் பதிலாக, பெரும்பாலான மக்கள் புதிய உணவு, புதிய படிப்பு, புதிய உடற்பயிற்சி வழக்கம், புதிய வணிக யோசனையில் ஈடுபடுகிறார்கள். அதாவது, அடுத்த புதிய விஷயத்துக்குச் செல்வதற்கு முன் சில வாரங்கள் அல்லது மாதங்கள் மட்டுமே புதிய வாழ்க்கைப் பாதையில் பயணிக் கிறார்கள். ஊன்றிய விதை முளைத்து, பூத்து, காய்த்து, கனி தரும் முன்பே அடுத்த விதையைத் தேடி ஓடுகிறார்கள்.

ஒரு சிலரே ஒரு விஷயத்தை நீண்ட காலத்துக்கு பயிற்சி செய்வதில் விடாமுயற்சி காட்டுகிறார்கள். அதனால் நீங்கள் ஒரு விஷயத்தில் ஓராண்டுக் காலம் கவனம் செலுத்துவதன் மூலம் பல துறைகளில்-ஒருவேளை உலகத் தரத்தில் கூட- உண்மையிலேயே சிறந்தவர் ஆக முடியும். உங்கள் வாழ்க்கையை 20-ஸ்லாட் பஞ்ச் கார்டாகக் கருதினால், ஒவ்வொரு ஸ்லாட்டும் ஓரிரு வருடங்கள் கவனம் செலுத்தும் வேலையாக இருந்தால், சில விஷயங்களைத் தெளிவாகச் செய்வதன் மூலம் நீங்கள் முதலீடு செய்த நேரத்தில் கணிசமான பலனை அனுபவிக்க முடியும்.

வாழ்க்கை வழிகாட்டல்
வாழ்க்கை வழிகாட்டல்

வாழ்க்கைக்கும் வழிகாட்டும்!

நாம் ஒவ்வொருவரும் `லைஃப் பஞ்ச் கார்டு’ வைத்திருக்கிறோம். வாழ்நாளில் எத்தனை விஷயங்களில் நாம் தேர்ச்சி பெற முடியும்? அந்த அட்டையில் அதிக இடங்கள் இல்லை. அதேபோல காலமும் எப்படியோ கடந்து போகும்.

ஆகவே, உங்கள் அடுத்த ஸ்லாட்டை வீணாக்காதீர்கள். கவனமாகச் சிந்தித்து, முடிவெடுக்கவும். உங்கள் இறுதி முடிவுகள் உங்கள் முந்தைய உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கும்.

மினிமலிச வாழ்க்கைக்கும் உங்கள் நேர மேலாண்மைக்கும் இன்ன பிற விஷயங்களுக்கும் வாரென் பஃபெட்டின் 20 ஸ்லாட் விதியைப் பொருத்திப் பாருங்கள். எல்லாமே எளிதாகும்!

- இனிதே வாழப் பழகுவோம்.

- சஹானா