வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து ஓசூரின் குறிப்பிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை. ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஓசூர் மாநகராட்சியில் உள்ள ஐந்து இடங்களில் வாகன போக்கு வரத்துக்கு தடை விதித்துள்ளது. நடைப்பயிற்சி செல்பவர்களும், சைக்கிள் ஓட்டுபவர்களும் சுதந்திரமாகச் செல்லவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர ஊர்திகள் இயங்க அனுமதிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஓசூர்-கொத்தூர் சந்திப்பு முதல் டிவிஎஸ் வரை, மத்திகிரி சந்திப்பு முதல் அந்திவாடி வரை, முத்துமாரியம்மன் கோயில் முதல் வென்ட் இந்தியா வரை, துணை கலெக்டர் அலுவலகம் முதல் சென்ட்ரல் எக்சைஸ் அலுவலகம் வரை, பத்தலப்பள்ளி சந்தை முதல் காளிகாம்பாள் கோயில் அருகே உள்ள ஹட்கோ காவல் நிலையம் வரை வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படாது.
``யோகா, நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் மும்பை போலீஸார் வரும் ஞாயிறு முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகன போக்குவரத்துக்குத் தடை என்ற புதுமுயற்சியை அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அறிவித்தனர். அதன்பின்னரே, அந்த முயற்சியை ஓசூரிலும் அறிமுகம் செய்யும் எண்ணம் தோன்றியது.

மேலும், அச்சமயத்தில் ஓசூரில் நடைபெறும் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் நான்கு சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 12 போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அதில் இரண்டு குழுக்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த செயல்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.