ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

பென்டிரைவ்

பென்டிரைவ்

பென்டிரைவ்

ங்கள் வீட்டை மிக அழகாகக் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டுதான். ஆனால், லெபனானில் உள்ள மிஜியாரா கிராமவாசிகள் ரொம்பவே வித்தியாசமானவர்கள். அவர்கள் கட்டியிருக்கும் வீடுகளைப் பார்த்தால், அதிசயமாக இருக்கும். இதோ, ஏர்பஸ் 380 விமான வடிவில் இருக்கும் இந்த விமான வீடு அப்படி ஒன்று. இந்தக் கிராமத்தில் பிரமிடு, தேவாலயம் போன்ற பல வடிவங்களிலும்  வீடுகள் உள்ளன.

பென்டிரைவ்

லக நாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு டிப்ஸ் வழங்கிவரும் ‘ட்ரிப் அட்வைசர்’ (TripAdvisor) எனும் அமெரிக்கச் சுற்றுப் பயண இணையதள நிறுவனம், சமீபத்தில் ‘Travellers Choice Attractions Awards’ என்ற பெயரில் ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் தலைசிறந்த அடையாளங்களாக சில இடங்களைக் குறிப்பிட்டுள்ளது. அதில், தாஜ்மஹாலுக்கு மூன்றாம் இடம். பெரு நாட்டில் உள்ள மச்சு பிக்சு (Machu Picchu), முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்  (Angkor wat) ஆலயமும் இருக்கிறதாம்.

பென்டிரைவ்

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைவிட இங்கிலாந்தைச் சேர்ந்த 10 வயது மாணவருக்கு ஐக்யூ அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ப்ளாக்பர்ன் (Blackburn) பகுதியைச் சேர்ந்தவர் அகில் ஜோஹர் (Aahil Jouher). எந்த ஒரு கடினமான விஷயத்தையும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் இவருக்கு அறிவியல், கணக்கு பாடங்களில் ஆர்வம் அதிகம். சமீபத்தில்,  நுண்ணறிவுத் திறனைக் கண்டறிய பிரபல நிறுவனமான  மென்சா (Mensa) நடத்திய தேர்வில், 162 புள்ளிகள் பெற்று முதல் இடம் பெற்றார் அகில் ஜோஹர். இது, ஐன்ஸ்டீன் நுண்ணறிவைவிட இரண்டு புள்ளிகள் அதிகம் என்கிறார்கள். ஐன்ஸ்டீனைப் போலவே விஞ்ஞானி ஆவதுதான் அகில் ஜோஹரின் கனவு.

பென்டிரைவ்

ற்றே மேடாக இருக்கும் சாலையில் ஏறுவதற்கே கஷ்டப்படும் வாகனங்களைப் பார்த்திருப்பீர்கள். 44 மீட்டர் உயரம்கொண்ட இந்தப் பாலத்தைப் புதிதாகப் பார்க்கும் வாகன ஓட்டுநர்களுக்கு வியர்த்துக்கொட்டுவது நிச்சயம். ஜப்பானில் உள்ள நக்கவ்மி (Nakaumi) ஏரி மீது 1.7 கிலோமீட்டர் நீளத்துக்கு இருவழிப் பாதைகொண்ட இந்தப் பாலம் அமைந்துள்ளது. இது, நதியின் இரு புறங்களிலும் இருக்கும் மாட்சு (Matsue) மற்றும் சகைமினாட்டோ (Sakaiminato) என்ற நகரங்களை இணைக்கிறது. ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்துக்குச் செல்வதற்கு இது குறுக்கு வழி என்பதால், வாகன ஓட்டிகள் ஆக்ஸிலேட்டரைத் தம் கட்டி முடுக்கி ஓட்டுகிறார்கள்.