- பருத்தி முதல் ஷோரூம் வரை...
பருத்திச் செடியில் பிறக்கும் பஞ்சு, ஆடையாக உருவாக எத்தனை நிலைகளைக் கடந்து வருகிறது, எத்தனை பேரின் உழைப்பு அதில் இருக்கிறது தெரியுமா? ஒரு சட்டையின் பிரமிக்கவைக்கும் தயாரிப்பு முறைகளைப் பார்க்கலாம் வாங்க!

• பருத்திச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட பஞ்சு, கலர் மிக்ஸிங் செய்யப்படும். லேப் புராசஸிங் செய்த பின், தேவையான நிறங்களில் இயந்திரத்தின் மூலம் நூலாகும்.

• எட்டு கேன்களில் நூல் வைக்கப்பட்டு, மெஷின் மூலம் ஒரே நூலாகத் திரிக்கப்படும்.
• 5,000 மீட்டர் முதல் 15,000 மீட்டர் வரை நூல் சுற்றப்படும். பிறகு, பாபின் செய்யப்படும்.

• ஸ்பின்னிங் ஃப்ரேமுக்கு மாற்றப்பட்டு, நூல்கண்டுகளாகும்.
• அடுத்து, பின்னலாடை இயந்திரங்களில் கோன்கள் இணைக்கப்பட்டு, தேவையான அளவுகளில் துணி நெய்யப்படும்.

• நெய்யப்பட்ட துணிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். அவற்றில் தேவைப்படும் வண்ணங்களை மெஷின் மூலம் ஏற்றுவார்கள்.
• துணிகளில் உள்ள ஈரத்தைப் பிழிந்து எடுத்துவிட்டு, வேறொரு மெஷினுக்குள் செலுத்தி, ஈரத்தை நீக்குவார்கள். மெஷினுக்குள் இருந்து உலர்ந்த துணிகள் வெளிவரும்.

• கத்தரித்த துணிகளின் அளவுகள் சரிதானா என்பதை சரிபார்த்து, தைக்கும் பிரிவுக்கு அனுப்புவார்கள்.
• தைக்கும் பிரிவுக்கு வந்த துணிகளை, ஆர்டரின் அளவுகளுக்கு ஏற்ப டெய்லர்கள் சட்டையாகத் தைப்பார்கள்.

• தைத்த சட்டைகளின் அளவு சரிபார்க்கப்படும். பிறகு, அயன் செய்யப்பட்டு, பேக்கிங் பிரிவுக்கு அனுப்புபப்படும்.
• துணிகள் கார்மென்ட் யூனிட்டுக்குள் வந்ததும், டேமேஜ் ஏதேனும் உள்ளதா, அதன் நிறம், வண்ணங்கள் சரியாக உள்ளதா என சோதனை செய்வார்கள்.

• பேட்டன் மாஸ்டர்கள் ஆடைகளுக்கு ஏற்ப, வியாபாரிகள் கேட்டிருக்கும் அளவுகளில் பேட்டன் தயார்செய்வார்கள்.
• துணிகளை, மெஷின் அல்லது கத்தரியால் கத்தரித்து, சைஸ் ஸ்டிக்கர் ஒட்டி, அளவுகளை சரிபார்க்கும் பிரிவுக்கு அனுப்புவார்கள்.

• சட்டையில் அளவு மற்றும் விலை ஸ்டிக்கர், கம்பெனி பெயர் உள்ள ‘டேக்’குகள் உள்ளனவா என்பதைத் தர ஆய்வாளர்கள் சோதித்த பின், அழகாக மடித்து, பாலித்தீன் கவருக்குள் போடுவார்கள்.
• பாலித்தீன் கவருக்குள் போட்ட சட்டைகளை, அட்டைப் பெட்டிகளில் பேக்கிங் செய்து, ஆர்டர் கொடுத்த கடைகளுக்கு அனுப்பிவைப்பார்கள்.

• இது மாதிரியே, தயாரிக்கப்படும் சட்டைகள், பிற ஆடைகள் ஷோரூம்களுக்கு வந்து நம்மைக் கவர்கின்றன.
- கே.ஆர்.ராஜமாணிக்கம் படங்கள்: க.ரமேஷ் கந்தசாமி, அ.குரூஸ் தனம்
மாடல்: நிருபன் சக்ரவர்த்தி
நன்றி:
ஸ்ரீஜெயப்ரபா எக்ஸ்போர்ட்ஸ், திருப்பூர்.
அவுட் ஃபிட் ரெடிமேட், புதுச்சேரி