FA பக்கங்கள்
Published:Updated:

மகாத்மாவுக்கு மரியாதை!

மகாத்மாவுக்கு மரியாதை!

ரோடு மாவட்டம், கவுந்தபாடி அருகில் மகாத்மா காந்திஜிக்கு ஒரு கோயில் இருக்கிற விஷயத்தை இந்தக் கண்காட்சியில் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தக் கோயிலைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு” என்கிற சுபலட்சுமியின் கண்களில் மின்னுகிறது பரவசம்.

மகாத்மாவுக்கு மரியாதை!

காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறில் இருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று நாள் (அக்டோபர் 2-4) கண்காட்சியை நடத்தியது, ‘காந்தி வேர்ல்டு ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு.

மகாத்மாவுக்கு மரியாதை!

மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்கள், வெவ்வேறு நாடுகள் வெளியிட்ட அஞ்சல் தலைகள், காந்தி உருவம் பொறித்த ரூபாய்த் தாள்கள் மற்றும் நாணயங்கள், காந்திஜியை பற்றிய அரிய செய்திக் குறிப்புகள் எனப் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

மகாத்மாவுக்கு மரியாதை!

‘‘எங்க அப்பாகிட்டே ‘இன்னிக்கு லீவு, பீச், மால்னு எங்காவது கூட்டிட்டுப் போங்கப்பா’னு சொன்னேன். இங்கே கூட்டிட்டு வந்தார். மாலுக்குப்போய் வீடியோ கேம்ஸ் விளையாடி இருந்தாலும் இந்த சந்தோஷம் கிடைச்சு இருக்காது. ஸ்கூலுக்குப் போனதும் என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே பெருமையா சொல்லிப்பேன்” எனப் புன்னகைக்கிறார் தரணி

- கோ.இராகவிஜயா படங்கள்: ச.பிரசாந்த்