
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

* கை உடைந்த வலியைக்
கண்ணீர் கலந்து
ஹைகூவாக எழுதி
மொட்டை மாடியில் காயவைத்திருந்தான்
நல்லவேளை, காக்கா தூக்கிச் சென்றது.
- மனோ ரெட், சென்னை

* தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
டாஸ்மாக்கில் சைட்-டிஷ் தேவையுடன் தமிழ்க் `குடிமகன்!’
- தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்.

* வேங்கை மவன் பரட்டை ஒத்தையில நிக்கேன்.
பின்னாடி ஆத்தா வளர்த்த சப்பாணியும் நிக்குதிலே!
- கோபிநாதன்.

* ‘எந்த நடிகரும் ஓட்டைப் பிரிக்க முடியாது என் வீடு மாடி வீடு’ என்றார் அரசியல்வாதி!
- நிரவி கஜேந்திரன்

* அஞ்சலி செலுத்த முடியாது...
நாக்கு ‘செத்து’ப் போனதுக்கு!
- பாப்பனப்பட்டு வ.முருகன்

* அன்பே ஃபேஸ்புக்கில் நீ போடும்
மொக்கை ஸ்டேட்டஸ்க்கு லைக்
பண்றேன்
மொக்கைப் பையனான
என்னை லவ் பண்ணக் கூடாதா?!.
- எஸ்.சேக் சிக்கந்தர்.

* சுவையான தேநீரைக் கொடுத்தாலும் கழுவிக் கழுவித்தான் ஊற்றுகிறார்கள் கிளாஸை.
- தி.சிவசங்கரி

* ஆதார் போட்டோவை ஜெராக்ஸில் பார்ப்பதுவும் ‘ஜென் நிலை’தான்!
- எஸ்.ஜெயகாந்தி
வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!