பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

புக் மார்க்

புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
News
புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

ல்கி, சாண்டில்யன், அகிலன், கோவி.மணிசேகரன், மு.மேத்தா, பாலகுமாரன் என, சரித்திர நாவலாசிரியர்களின் பட்டியல் நீளமானது. இந்தப் பட்டியலில் இப்போது இணைந்திருப்பவர் வெற்றிவேல். கரிகாற்சோழனின் தந்தை சென்னி காலத்துக் கதையை மூன்று பகுதிகளாக எழுதியிருக்கிறார்.

இன்றைய இந்திய வரைபடத்தையும் தாண்டி பெரும் நிலப்பரப்பை ஆண்டவர் அசோகர். அவருடைய மௌரியப் பேரரசு கால் பதிக்க இயலாத ஒரே நிலப்பரப்பு, தமிழகம். அதுதான் இவருடைய `வென்வேல் சென்னி’ நாவலின் மையம். மூவேந்தர்களும் ஒன்றிணைந்து எல்லைப் பகுதியை எப்படிக் காத்தனர் என்பதுதான் கதை. பின்னியெடுத்திருக்கிறார். அசோகர் தொடாத களம் மட்டுமல்ல... எழுத்தாளர்கள் யாரும் தொடாத களமும்தான். இந்தச் சரித்திர ஆசிரியரின்
வயது 26!

நூல் வெளியீடு: வானதி பதிப்பகம்

புக் மார்க்

ரு.பழனியப்பனின் `புகழேந்தி எனும் நான்’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, தற்போது முதுகளத்தூர் கலவரத்தை மையப்படுத்தி நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார்.  ``சமீபமாக வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ் இலக்கியத்தைவிட ஈழ இலக்கியங்களே எனக்கு உயிர்ப்பாக இருக்கின்றன” என்கிறார்.

புக் மார்க்

1987-ம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்த அமைதிப்படைப் பேச்சுவார்த்தையையும் அதன் பிறகு நிகழ்ந்தவற்றையும் படக்கதையாக வர்ணிக்கிறது `வெட்ட வெட்டத் துளிர்க்கும் மறம்’ என்ற நூல். வார்த்தைகளின்றி திரைப்படம் பார்ப்பதுபோல தத்ரூபமான ஓவியங்களுடன் வெளிவந்திருக்கும் இந்த நூலைப் பார்க்கையில், மிகப்பெரிய வரலாற்றுத் துயரத்தின் சாட்சியாக அதன் அருகிலேயே நின்றிருப்பதுபோன்றதொரு பதற்றம் உண்டாகிறது.

ஓவியம்; வன்னிக் கலைஞன். வர்ணனை: புகழேந்தி தங்கராஜ். தாய்ப்பனை வெளியீடு

புக் மார்க்

ழகிய பெரியவனுக்கு... இங்கு துயருறும் மக்களுக்கான சமூகநீதி குறித்து அணுவளவும் அறிவற்று, `பிரான்ஸ்தான் என் தாய் நாடு... இலக்கியமென்றால் அது பிரெஞ்சு இலக்கியம்தான்...’ என அலப்பறை செய்யும் இலக்கியவியாதிகளைப் பார்க்கும்போது என்ன நினைப்பீர்கள்?

- பாமரன்

புக் மார்க்

``அண்ணல் அம்பேத்கரின் ஒட்டுமொத்தத் தொகுப்பையும் வாசித்துவருகிறேன். இதனூடாக, `India Dissents’ என்ற புத்தகமும் என் கவனத்தை ஈர்த்தது. பன்மைத்துவமே இந்தியாவின் அழகு என்று பல்வேறு சான்றுகளுடன் அழுத்தமாகப் பதிவுசெய்கிறார் இதன் ஆசிரியரான அசோக் வாஜ்பாய். அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.’’

- சுப. வீரபாண்டியன்.

புக் மார்க்

லகளவில் கல்வியறிவில் பின்தங்கிய நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. அதுவும் மத்திய ஜாவாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அங்கு குதிரை ஓட்டியாக இருக்கும் ரித்வான் சுரூரிக்கு, எப்படியாவது தம் மக்கள் கல்வி பெற வேண்டும் என்று ஆசை. தன் கையில் இருந்த சொற்ப காசைப் போட்டு சில புத்தகங்களை வாங்கினார். பல குதிரைகளை வைத்திருக்கும் தன் முதலாளியிடமிருந்து, லூனா எனும் குதிரையைக் கடனாகப் பெற்றார். குதிரையின் இரு பக்கங்களிலும் புத்தகங்கள் நிறைந்த மரப்பெட்டியைக் கட்டி, பல கிராமங்களுக்கு அதை ஓட்டிச் செல்கிறார். `குட புஸ்தகா’ (Kuda Pustaka) எனச் சொல்லப்படும் அந்தக் குதிரை நூலகத்தை, குழந்தைகள் பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சேவைக்கு, ரித்வான் எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. வார இறுதிகளில் சுற்றுலாத்தளங்களில் குதிரையைச் சவாரிக்குவிட்டு, அதில் வரும் வருமானத்தைக்கொண்டே குடும்பம் நடத்துகிறார்.

புக் மார்க்

``நாச்சியாள் சுகந்தி எழுதிய `கற்பனைக் கடவுள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்பதையெல்லாம் எனக்குப் பிரித்துப் பார்த்துப் படிக்கத் தெரியாது. ஒரு கதையில் மனித வாழ்வு இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பேன். இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் மனித வாழ்வு நிறைந்துள்ளது.’’

- இயக்குநர் சசி