Published:Updated:

''அவருடைய கடைசி நாவல்களை கூடிய விரைவில் படிக்கலாம்'' - சாந்தா பாலகுமாரன்

''அவருடைய கடைசி நாவல்களை கூடிய விரைவில் படிக்கலாம்'' - சாந்தா பாலகுமாரன்
News

ழுத்துச் சித்தர் பாலகுமாரன், தன் குடும்பத்தையும் வாசகர்களையும் உடலளவில் பிரிந்து 6 மாதங்கள் ஆகப்போகிறது. அவரைப் பிரிந்த அவருடைய குடும்பம் எப்படி இருக்கிறது? அவர் முடிக்காமல் விட்டுச்சென்ற நாவல்கள் எப்படி இருக்கின்றன? பாலகுமாரனின் குடும்பத்தாரிடம் பேசினோம். முதலில் பேசியது, அவருடைய மகன் சூர்யா. 

''அப்பாவின் இழப்பிலிருந்து 90 சதவிகிதம் மீண்டுவந்துட்டோம்னுதான் நினைக்கிறேன். ஆனால், மீதி 10 சதவிகிதம் மீளவே முடியாது. அப்பாவின் அழகான நினைவுகள் காலத்துக்கும் மனசுல இருக்கும்'' என்றார் உருக்கமாக.

பாலகுமாரனின் மனைவி சாந்தா, ''அவரோட நினைவுகள் மறையறதுக்குள்ளே என் காலம் முடிஞ்சுடும். இதிலிருந்து நான் வெளியே வர்றதுக்கு அவ்வளவு நாள் ஆகிடும். என்னோட கடைசி நாள் வரைக்கும் அவரை மறக்கவே முடியாது'' என்று குரல் உடைந்தவரை சமாதானப்படுத்தி, பாலகுமாரன் விட்டுச்சென்ற நாவல்கள் பற்றிக் கேட்டோம்.

'' 'வெள்ளைத் துறைமுகம்', 'சொர்ண வேட்டை' என இரண்டு நாவல்கள் பப்ளிஷ் ஆகாமல் இருக்கு. அவரின் வாசகர்கள், இந்த ரெண்டு நாவல்களையும் எதிர்பார்க்கிறதால், பப்ளிஷர்ஸ் எங்கிட்ட கேட்கிறாங்க. அவரோட ஸ்கிரிப்டை சில நண்பர்களிடம் படிக்கக் கொடுப்பார். அப்படி 'சொர்ண வேட்டை' நாவலின் ஸ்கிரிப்டை நண்பர் ஜெயராமன் ரகுநாதனிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கார். அந்த நாவலை எப்படி முடிக்கலாம்னும் அவர்கிட்ட பேசியிருக்கிறார். அதனால், அவரையே அந்த நாவலுக்கு முன்னுரை எழுதவைத்து, முடிவைச் சொல்லச் சொல்லி வெளியிடப்போறோம். ஆனால், 'வெள்ளைத் துறைமுகம்' அப்படியில்லை. இரண்டாம் உலகப் போர் பற்றிய அந்த நாவலை, இன்னமும் மெருகூட்டணும்னு அப்படியே வெச்சிருந்தார். பாலாவின் கடைசி எழுத்துகளைப் படிக்கிறதுக்காக, அதையும் அப்படியே தரச்சொல்லி வாசகர்கள் கேட்கிறாங்க. பதிப்பாளர்களிடம் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்திருக்கோம். கூடிய சீக்கிரம் அந்த எழுத்துகளை வாசகர்கள் படிக்கலாம்'' என்றார் சாந்தா பாலகுமாரன் நிறைவாக.