பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

புக் மார்க்

புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
News
புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

ங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ் அறிஞர்களுள் முக்கியமானவர் ம.லெ.தங்கப்பா. இவர், திருவருட்பா, முத்தொள்ளாயிரம், பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பரவலான வாசகர்களுக்குக் கொண்டுசேர்த்தவர். இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து அறிக்கையிட்டு கோவையில் நடந்த உலக செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்தார். சிறுவர் இலக்கியம், இயற்கை மீதான பற்று என, பல தளங்களில் கடைசிவரை செயல்பட்ட தங்கப்பா, எதற்காகவும் தன்னை சமரசம் செய்துகொள்ளவில்லை. ``தமிழ்ப்புலவர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட ஏதேனும் ஒரு நோக்கம் கருதி மொழியையும் இலக்கியத்தையும் பயில்பவர்களாக இருக்கிறார்களே தவிர, குளத்தில் குதித்து நீந்தும் சிறுபிள்ளைகளின் மகிழ்ச்சியோடு தமிழ் இலக்கியத்தில் முங்கித் திளைப்பவராக இல்லை” எனச் சொன்ன தங்கப்பா தன் இறுதி மூச்சுவரை சிறுபிள்ளையின் மகிழ்ச்சியோடு இலக்கியப் பணியாற்றினார். கடந்த வாரம் தன் 84-வது வயதில் இயற்கை எய்திய தங்கப்பா, தமிழ் ஆர்வலர்களுக்கு ஆகச்சிறந்த முன்னோடி.

புக் மார்க்

``போகன் சங்கரின் உரைநடையில் இருக்கும் நகைச்சுவை, எனக்கு மிகவும் பிடிக்கும். போகன், நீங்கள் ஏன் முழுமையான அபத்த நகைச்சுவை நாவல் ஒன்றை எழுதக் கூடாது?’’

புக் மார்க்
புக் மார்க்

“தமிழ்நதியிடம் ஒரு கேள்வி, புலம்பெயர்ந்த வாழ்வின் அனுபவங்கள் முழுவதும் வேதனையானவைதானா? அதில் நேர்மறையான அம்சங்கள் ஏதேனும் இருக்கும்தானே? உங்கள் அடுத்த நாவலில் அவற்றை விரிவாகப் பதிவுசெய்வீர்களா?’’

- பாஸ்கர் சக்தி

புக் மார்க்

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாறு, காமிக்ஸ் வடிவில் வெளிவந்துள்ளது. பூவண்ணன் எழுதிய கதையை அடிப்படையாகக்கொண்டு ஓவியர் பாரதிவாணர் சிவா அருமையான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். வள்ளியப்பாவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சம்பவங்களைச் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் தந்திருப்பது இந்த நூலின் சிறப்பு. இதைப் படிப்பவர்கள், அழ.வள்ளியப்பாவின் படைப்புகளையும் நிச்சயம் தேடிப் படிப்பர்.

குழந்தைக் கவிஞரின் கதை - படக்கதை பாரதிவாணர் சிவா  வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை , ராயப்பேட்டை, சென்னை - 14

புக் மார்க்

``என்னைப் பாதித்த புத்தகங்களுள் ஒன்றாக நான் குறிப்பிட விரும்புவது, காந்தி எழுதிய `Hind Swaraj’ புத்தகம். நவீன யுகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், உற்பத்திப் பெருக்கத்தில் இயந்திரங்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி, 125 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் எழுதியது; உலகமயமான இன்றைய இக்கட்டான நிலையில் தெளிவைத் தரக்கூடியது, இந்தப் புத்தகம். தற்போது ஓஷோ எழுதிய `Living on your own terms: What is real rebellion?’ எனும் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். புரட்சி பற்றியும் கலகக்காரர்கள் பற்றியும் எளிமையாக, ஆழமான சிந்தனைகள் இதில் நிறைந்திருக்கின்றன.’’

- சுப.உதயகுமாரன்.

புக் மார்க்

மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள், வேதகாலம் தொடங்கி இந்நாள் வரை இந்திய நாட்டில் வளர்ந்து வந்துள்ள தத்துவச் சிந்தனைகள் அனைத்தும் ஆன்மிகமயமானவை, உலகியல் நோக்கு அற்றவை என வாதிடுகின்றனர். ஆனால், இந்த நூலை எழுதிய சோவியத் ஆய்வாளர், காலம்தோறும் இந்தியத் தத்துவச் சிந்தனைகள் வளர்ந்துவந்துள்ளதை விளக்குகிறார். ராம்மோகன்ராய், சையத் அகமதுகான், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் முதலான நவீன வங்காளத் தத்துவத்தின் வேர்களை விரிவாக ஆராயும் சிறந்த நூல் இக்கால இந்திய மெய்ப்பொருளியல் - வி.புரோதோவ். (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) தமிழகத்து நவீன தத்துவச் சிந்தனை வரலாற்றை ஆராய்வதற்கு இது ஒரு முன்மாதிரி ஆகலாம். ஆனால், இந்த நூல் ஏன் இவ்வளவு காலம் மறுபதிப்பு செய்யப்படவில்லை எனத் தெரியவில்லை.

புக் மார்க்

பிரமிளின் படைப்புகள் தொகுக்கப்படாத நிலையில், அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், பேட்டிகள், உரையாடல் எனப் பலவற்றையும் தொகுத்து வெளியிடுகிறார் பிரமிளின் நண்பரும் எழுத்தாளருமான கால சுப்ரமணியம். 3,400 பக்கங்களில் தனித்தனியாக ஆறு தொகுதிகளாக வரவிருக்கின்றன. மொத்த விலை 3,400 ரூபாய். ``முன்வெளியீட்டுத் திட்டத்தில் 2018 ஜூலை மாதம் இறுதி வரை 3,000 ரூபாய் (அனுப்பும் செலவுடன்) சலுகை விலையில் கிடைக்கும்” என அறிவித்திருக்கிறார் கால சுப்ரமணியம்.