Published:Updated:

பாகிஸ்தானில் தடைசெய்யப்படுமா மண்ட்டோ? - நந்திதா தாஸ் ஆதங்கம்

பாகிஸ்தானில் தடைசெய்யப்படுமா மண்ட்டோ? - நந்திதா தாஸ் ஆதங்கம்
News
பாகிஸ்தானில் தடைசெய்யப்படுமா மண்ட்டோ? - நந்திதா தாஸ் ஆதங்கம்

``என்னுடைய கதைகளை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனில், நாம் அத்தகைய சகித்துக்கொள்ள முடியாத சூழலில் வாழ்கிறோம் என்று பொருள்.” - மண்ட்டோ

எண்ணிக்கை அளவில் உலகிலேயே மிகப்பெரிய பிரிவினையான இந்திய-பாகிஸ்தான் பிரிவை, இடப்பெயர்வை ரத்தமும் சதையுமாக போலித்தனங்களோ, அலங்காரங்களோ இல்லாமல் பதிவு செய்தவர் சதத் ஹசன் மண்ட்டோ. இந்தியாவில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்த மண்ட்டோ திரைப்படம், பாகிஸ்தான் தணிக்கைத் துறையால் தடை செய்யப்படும் அபாயத்தில் இருக்கிறது.   

``பிரிவினையால், அதன் பாதிப்புகளால் மிகவும் மனமுடைந்த எழுத்தாளனை அந்த நாடென்றும் இந்த நாடென்றும் பிரித்துப்பேசுவதை விடவும் அவருக்கு ஒரு அவமானத்தைச் செய்துவிட முடியாது. மண்ட்டோ இரு நாடுகளுக்கும் சொந்தமானவர் என்பதாலேயே பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் ஒரே நாளில் இப்படம் வெளியாகவேண்டும் என நினைத்திருந்தோம். மதவெறியைப் பற்றியும், பிரிவினையைப் பற்றியும், மனித மனத்தின் பாலியல் வக்கிரங்களையும் மேற்பூச்சில்லாத துணிவுடன் பேசிய அந்தப் படைப்பாளி இருநாட்டுக்கும் சொந்தமானவர். மண்ட்டோ திரைப்படம், `பிரிவினைக்கு எதிரான கருத்தைப் பேசுவதாகவும், ஆட்சேபனைக்குரிய காட்சிகளைக் கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தானிய சமூகத்துக்கு ஏற்புடையதாக இல்லாததாலும்’ தணிக்கைத்துறை நிராகரித்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். தணிக்கை எனக்குப் புதிய விஷயமல்ல. என் முந்தைய திரைப்படமான ஃபிராக்கிலும், சமீபத்தில் மண்ட்டோவுக்கும் சில காட்சிகளின் ஒலியை நீக்கி சமரசம் செய்துகொள்ளப்பட்டது. ஆனால், இப்போது முழுமையாக இப்படத்தை நிராகரிப்பதென்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. நிர்வாணக் காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாக தெரிவிப்பது எப்படி? தணிக்கை எங்கு நடந்தாலும், அது ஆபத்தானது. 2012-ம் ஆண்டில் பாகிஸ்தானின் உயரிய குடிமகன் விருதான நிஷான்-ஈ-இம்தியாஸ் மண்ட்டோவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இப்போது அவர் பேசிய விஷயங்களை காட்சிப்படுத்தினால் அரசு தடை செய்கிறது. இது எப்படிப்பட்ட முரண்?” என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் நந்திதா தாஸ்.

நந்திதா தாஸின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்திருக்கும் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரான ஃபவாத் சவுத்ரி, இப்படத்தை கொண்டு வருவதற்கு உதவுவதாகத் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானின் பல முக்கிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுத்தளத்தில் இயங்குபவர்கள் மண்ட்டோ வெளியாவதற்கான தங்களின் விருப்பத்தைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 ``என்னுடைய கதைகளை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் அத்தகைய சகித்துக்கொள்ள முடியாத சூழலில் வாழ்கிறோம் என்று பொருள்.” - மண்ட்டோ