
விக்ரமாதித்யன், ஓவியம் : பிரேம் டாவின்ஸி
தாமிரபரணி?
“தமிழையும் கவிதையையும் தந்த தாய்.”
குறுந்தொகை?
“உலகக் காதல் கவிதைகளின் உச்சம்.”
குடும்பம்?
“என்றும் முதன்மையான அரண்.”
குடி?
“குடிதான் மேலான கவிதைகளையும் தந்தது; சகல கேவலங்களையும் தந்தது.
நண்பனா பகைவனா தெரியவில்லை.”

காசி?
“விட்டு விடுதலையாவதற்கான வழிகாட்டும் ஸ்தலம்.”
காமம்?
“காமம் இல்லையேல்
படைப்புத்திறம் இல்லை.”
சாதி?
“தமிழில் ‘திணைக்குடி’தானே உண்டு.
எங்கிருந்து எப்படி வந்தது சாதி?”
தமிழ்?
“மகாகவி பாரதியைவிடவா
நான் சொல்லிட முடியும்?”
கதாநாயகி?
“நயன்தாரா.”
கவிதை?
“There is no Miracle
greater than poetry - Osho.”
சினிமா?
“ ‘உதிரிப்பூக்கள்’,
‘அவள் அப்படித்தான்’. ”
மரண பயம்?
“கால சம்கார மூர்த்தி
மிருத்யுஞ்சய மந்திரம்.”
சோதிடம்?
“உலகத்தின் ஓர் உண்மை
அது மட்டுமே.”
அபராஜிதா?
“கனவுக்கும் அப்பாற்பட்ட உயிர்.”
கண்ணதாசன்?
“காலம், தமிழுக்குத் தந்த மாபெரும் கொடை.”
பெண்?
“உலகத்தின் தலையாய அற்புதம்.”
தொகுப்பு: சக்தி தமிழ்ச்செல்வன்