கட்டுரைகள்
Published:Updated:

கனவில் வந்த பதில்!

கனவில் வந்த பதில்!
பிரீமியம் ஸ்டோரி
News
கனவில் வந்த பதில்!

கனவில் வந்த பதில்!

ள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சக்திவேல், வேகமாக அம்மாவிடம் சென்று, ‘‘அம்மா, ஸ்கூல்ல டீச்சர் ஒரு கேள்விக்குப் பதில் தெரிஞ்சுட்டு வரச்சொன்னாங்க. உனக்குத் தெரியுமா?’’ என்றவாறு அந்தக் கேள்வியைக் கேட்டான்.

கனவில் வந்த பதில்!

அம்மாவுக்குத் தெரியவில்லை. அப்பாவிடம் ஓடிப்போய் கேட்டான். அப்பாவுக்கும் தெரியவில்லை. சோகமாக தனது வீட்டுப் பாடங்களை முடித்தான். சிறிது நேரம் தங்கையுடன் விளையாடிவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

கனவில் வந்த பதில்!

அவர்கள் இருப்பது புறநகர் பகுதி. இன்னும் அதிகமான வீடுகள் அங்கே வரவில்லை. அதிலும், சக்திவேலின் வீட்டுக்கு இரண்டு பக்கமும் காலியாக இருந்தது. அதனால், அங்கே புதர்கள் மண்டி மழையால் சற்று நீர் தேங்கி இருந்தது. இரவு வந்துவிட்டால், ‘க்ராக்... க்ராக்’ என்று தவளைகள் சத்தம் போடும்.

‘‘சே... தினமும் இதே தொல்லை. இந்த இடத்துல வீட்டை வாங்கிட்டு நிம்மதியே போச்சு’’ என்று அம்மா புலம்பினார்.

சக்திவேல் படுத்து உறங்கிவிட்டான். கனவிலும் தவளை வந்து, ‘க்ராக்... க்ராக்’ எனச் சத்தம் போட்டது. சக்திவேல் அந்தப் புதர் அருகே சென்றான். ஒரு தவளை அவனைப் பார்த்துப் புன்னகைத்தது. ‘‘வா நண்பா... உன் அம்மா இந்தப் பக்கமே வர்றதுக்கு விடமாட்டாங்களே எப்படி வந்தே? அவங்களுக்கு எங்க மேலே ஏன் இவ்வளவு வெறுப்பு? நாங்க உங்களுக்கு எவ்வளவு நல்லது செய்யறோம் தெரியுமா?’’ என்றபோது, அந்தப் பக்கமாக ‘ய்ய்ய்ங்ங்ங்ங்’ எனச் சத்தமிட்டவாறு ஒரு கொசு பறந்துவந்தது. தவளை சட்டென நாக்கை நீட்டி, அந்தக் கொசுவை லபக்கியது.

கனவில் வந்த பதில்!

சக்திவேல் சட்டென கண் விழித்தான். ‘அடடா... இதை எப்படி மறந்தேன்’ என நினைத்தவன் முகம் மலர்ந்தது.

கனவில் வந்த பதில்!

அடுத்த நாள் பள்ளியில், ‘‘கொசுவைக் கட்டுப்படுத்த என்ன முக்கியம்னு கேட்ட கேள்விக்குப் பதில் ரெடியா?’’ எனக் கேட்டார் ஆசிரியர்.

ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொன்று சொல்ல, ‘தவளை’ என்றான் சக்திவேல். ‘‘தவளையானது நீர்நிலையில் இருக்கும் கொசுவின் முட்டைகளைத் தின்று கட்டுப்படுத்துகிறது’’ என்றான்.

‘‘சபாஷ்’’ என ஆசிரியர் கைதட்ட, அனைத்து மாணவர்களும் உற்சாகமாக அதில் இணைந்தனர்.

ஓவியம்: ராமமூர்த்தி