கட்டுரைகள்
Published:Updated:

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு
பிரீமியம் ஸ்டோரி
News
இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

பெயர்: ஷர்மிளா தேசிங்கு.

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

என் அப்பா பெயர் தேசிங்கு. ஓய்வுபெற்ற தமிழாசிரியர். கணவர் பெயர், ஜெயக்குமார். ஒரு பையன், லிவின்.

பிறந்தது: திருநெல்வேலி மாவட்டம்,  அரியநாயகிபுரம்

இப்போ இருப்பது: பெங்களூரூ

என்ன வேலை?: ஐ.டி

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

கதை சொல்லும் ஆர்வம் எப்படி வந்துச்சு?

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

என் மகன் லிவினைப் புரிந்துகொள்ள, மற்ற குழந்தைகளோடு பேச ஆரம்பிச்சேன். சும்மா பேசினால், போர் அடிக்கும் இல்லையா? கதை, விளையாட்டு, பாடல் எனச் சொல்ல ஆரம்பிச்சேன்.

முதன்முதலாக எங்கே சொன்னீங்க?

பெங்களூரூவில் நாங்க இருக்கும் அப்பார்ட்மென்ட்டில் சொன்னேன். பிறகு, நிறைய கதை விழாக்கள், பள்ளிக்கூடங்களுக்குப் போய் சொல்ல ஆரம்பிச்சேன். ‘சுட்டி ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியிலும் கதை சொல்லியிருக்கேன்.

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

எந்தக் கதையை எல்லோரும் விரும்பி கேட்கறாங்க?

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

‘அணிலும் யானையும்’ என்ற கதை. அணிலுக்கும் யானைக்கும் ஆளுக்கொரு பலா விதை கிடைக்குது. இரண்டு பேருமே விதைக்கிறாங்க. ஆனா, யானையின் விதை மட்டுமே மரமா வளர்ந்து, பழமும் கிடைக்குது. அதை ரெண்டு பேரும் அடுத்த நாள் பகிர்ந்து சாப்பிடலாம்னு வெச்சிருக்காங்க. அன்னிக்கு இரவே, அந்தப் பலா பழத்தில் உள்ள ஒரு சுளையை அணில் தின்னுடுது. அதனால், இரண்டு பேருக்கும் சண்டை வந்துடுது. அப்புறம் எப்படிச் சமாதானம் ஆகிறாங்க என்பது மீதி கதை. இடையில் நிறைய பாட்டுகள் வரும்.

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

விளையாட்டு, பாட்டு எல்லாம் எங்கே கத்துக்கிறீங்க?

என் அப்பா, குழந்தைகளுக்காகப் பாட்டு எழுதியிருக்காங்க. அதைப் பாடுவேன். குழந்தைக் கவிஞர், அழ.வள்ளியப்பா  பாடல்களையும் பாடுவேன். விளையாட்டுகளை குழந்தைகளோடு சேர்ந்து புதுசு புதுசா உருவாக்குவேன்.

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

உங்களால மறக்க முடியாத நிகழ்ச்சி எது?

ஜவ்வாதுமலையில ஒரு கதை விழாவுல கதை, பாட்டு, விளையாட்டு என நிறைய சொன்னேன். அதுக்குப் பரிசா, அங்கிருந்த ஒரு சின்னப் பொண்ணு கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தா. அதுதான் என்னால மறக்கவேமுடியாது.

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

எதிர்காலத் திட்டம் என்ன?

ஏராளமான குழந்தைகளைச் சந்திக்கணும். கதை சொல்லணும்; அவங்க கதையைக் கேட்கணும். எப்போ வேணாலும் ஷர்மிளாகிட்ட பேசலாம்னு அவங்க நினைக்கிற அளவுக்கு நெருங்கிப் பழகணும் அவ்வளவுதான்! 

- விஷ்ணுபுரம் சரவணன்