Published:Updated:

அச்சம் தவிர் பாப்பா!

அச்சம் தவிர் பாப்பா!
பிரீமியம் ஸ்டோரி
News
அச்சம் தவிர் பாப்பா!

நவீனா

அச்சம் தவிர் பாப்பா!

அச்சமில்லை அச்சமில்லை சொல்லடி பாப்பா
வஞ்சகர்தம் வினைமுறித்து நில்லடி பாப்பா!

மாமா என்றும் அண்ணன் என்றும்
அங்கே தொடுவான் பாப்பா
எண்ணம் தவறு என்றுணர்ந்தால்
எட்டி உதைத்திடடி பாப்பா!

அம்மா அப்பா ஆசிரியரென நம்பிக்கை
மனிதர்கள் உண்டு பாப்பா
அவர்களிடம் ஆரம்பத்திலே சொல்லி
தைரியம் கொள்ளடி பாப்பா!

யாரைக் கண்டும் அஞ்சி நடுங்க
தேவையில்லை நிச்சயம் பாப்பா
உன் குரல் கேட்க செவிகள் உண்டு
இதை நம்பிடடி பாப்பா!

ஊமையென்றும் செவிடென்றும்
இருந்தது போதும் பாப்பா
உனக்கு இழிவென்று ஒன்றுமில்லை
இதை உணர்ந்துகொள்ளடி பாப்பா!

அச்சமில்லை அச்சமில்லை சொல்லடி பாப்பா
வஞ்சகர்தம் வினைமுறித்து நில்லடி பாப்பா!


ஃப்ரெண்ட்ஸ்... நம்மைச் சுற்றி எப்போதும் நல்லவர்கள் மட்டுமே இருப்பதில்லை. யார் எப்படி என்பதை உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

ஓவியம்: ரமணன்