சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

படிப்பறை

றுதி யுத்தம் முடிந்து பத்தாண்டுகளாகிவிட்டன. குண்டுகளால் சிதறடிக்கப்பட்ட வீடுகள், யுத்தத்தில் உறுப்புகளையும் உறவுகளையும் இழந்து, மிஞ்சிய வாழ்க்கையைத் துயரம்சூழக் கழித்துக்கொண்டிருக்கும் மக்கள் எனக் காலத்தின் சாட்சியாக ஈழத்தில் போர்த்தடங்கள் பதிந்து கிடக்கின்றன. சர்வதேச நாடுகளின் உதவியோடு நிகழ்த்தப்பட்ட கடும்யுத்தத்தை இறுதிவரை எதிர்கொண்டு உயிரென நேசித்த மண்ணிலேயே விதைக்கப்பட்டார்கள் விடுதலைப்புலிகள்.

படிப்பறை

1976-மே 5ஆம் தேதி உருக்கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கமென்பது வெறுமனே யுத்தக்குழுவல்ல. மிகத்தெளிவான கொள்கை கோட்பாடுகள், நெடுங்காலத் திட்டங்கள், அரசியல், சர்வதேச உறவு எனப் பரந்துபட்ட எல்லைகளைக் கொண்ட அமைப்பாக அது விரிந்திருந்தது. தங்கள் மண்ணுக்கு மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் மொத்தத் தமிழர்களுக்காகவும் பல வேலைகளைச் செய்திருக்கிறார்கள் புலிகள். அந்த அமைப்பு உருவான காலச்சூழல், எதிர்கொண்ட சிக்கல்கள், இயக்கத்தின் உள்முரண்பாடுகள், களையெடுப்புகள், யுத்தத் திட்டமிடல்கள், ராஜதந்திரச் செயல்பாடுகள் என அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான மிக முக்கியமான ஆவணம், இந்த நூல்.

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றையும் ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றையும் ஒருசேரப் பேசுகிறது இந்த நூல். இலங்கைத் தமிழர்களின் ஆதிவரலாறு, சிங்களர் சரித்திரம் எனத் தொடங்கி தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் பகை வளர்ந்த புள்ளியை விளக்குகிறது. பிரபாகரனின் குடும்பம், புலிகள் இயக்கம் தோன்றிய சூழல், அரசியல் மாற்றங்கள், சர்வதேச நிலைப்பாடுகள், பிற தமிழ் யுத்தக்குழுக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்குமான முரண்பாடுகள், இந்திரா, ராஜீவ், எம்.ஜி.ஆர் ஆகியோரின் தலையீடு, பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், தமிழ்த்தலைவர்களின் தொடர்புகள் என எல்லா திசைகளையும் படம்பிடித்துக்காட்டுகிறது இந்த நூல். மாத்தையா, கருணா விவகாரங்கள் குறித்துத் திரைமறைவில் நடந்தவற்றை இந்த நூல் வெளிச்சமிடுகிறது. ஆனையிறவுப்போர், ஓயாத அலைகள், விமான நிலையம் தகர்ப்பு எனப் புலிகள் நடத்திய யுத்தங்கள் பற்றியும் திட்டமிடல்கள் குறித்தும் விரிவான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. பிரபாகரனின் தனித்த குணங்கள், கிட்டு உள்ளிட்ட தோழர்கள் குறித்த தனிப்பட்ட செய்திகள், விடுதலைப்புலிகள் வெளியிட்ட ஆவணங்கள், பிரபாகரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகள் என நூல் கனம் கூடியிருக்கிறது.  நூலெங்கும் பிரபாகரன் மற்றும் புலிகள் தொடர்பான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வேலுப்பிள்ளை பிரபாகரன்  விடுதலைப்போராட்ட வரலாறு செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை வெளியீடு: வ.உ.சி நூலகம்,  ஜி-1, லாயிட்ஸ் காலனி, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14
மொபைல்- 9840444841
பக்கங்கள் : 1328
விலை : 1500 ரூபாய்


- வெ.நீலகண்டன்