Published:Updated:

பளபளக்கும் பனானா ஆடைகள் !

சா.வடிவரசுப.சரணகுமார்

##~##

பருத்தி, பட்டு, பாலியஸ்டர் எனப் பல வகை ஆடைகள் உண்டு. சென்னை, அனகாபுத்தூரில் இருக்கும் 'நேச்சுரல் ஃபைபர் டெக்ஸ்டைல்ஸ் கன்சோசியேஷன் பி.லிட்’ நிறுவனத்தினர் நார் மூலமும் ஆடைகள் தயாரிக்கிறார்கள்.

நமது பாரம்பரிய ஆடைகளை வண்ணமயமாக இயற்கை முறையில் தயாரிப்பதில் அனுபவம் மிக்கவரான சேகர், சுட்டிகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார்.

'இங்கு தயாரிக்கும் புடைவைகளுக்கு பனானா சில்க்ஸ் என்று பெயர். நாங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். 2006 முதல் வாழை நாரைக்கொண்டு துணிகளை நெய்துவருகிறோம். ஆடைகள் தயாரிப்பு என்பது இப்போது முழுக்க முழுக்க இயந்திரமயமாகிவிட்டது. ஆனால், நாங்கள் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுத்தும் கைத்தறிகள் முழுவதும் மரக் கட்டைகளால் ஆனது.  தமிழகத்தில் ஆடைத் தயாரிப்புக்கு என்று முதன் முதலில் உருவாக்கப்பட்ட கைத்தறிகளைக் கொண்டுதான் இன்று வரை தயாரிப்பில்  ஈடுபட்டு வருகிறோம். வாழைநாரில் அனைத்து வகையான ஆடைகளையும் தயாரிக்க முடியும். இயற்கை முறையில் வாழை நாரைக்கொண்டு ஆடைகள் தயாரிப்பதில் இந்தியா, உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது'' என்றார் சேகர்.

பளபளக்கும் பனானா ஆடைகள் !

வாழை மட்டையில் இருந்து நாரை உரித்துக்கொண்டு இருந்தலைலா என்பவரைச் சுட்டிகள் சூழ்ந்துகொண்டார் கள் 'இந்த வாழை மட்டையைச், சீப்பு போல இருக்கும் கத்தியைக்கொண்டு சீவினால், அதில் இருக்கும் மெல்லிய நார் இழைகள் தனித் தனியாகப் பிரிந்து விடும். அவற்றை அப்படியே எடுத்து, நன்றாக முதலில் காயவைக்க வேண்டும்'' என்றார்.

''வாழைநாரில் இருந்து எடுத்த நூல் எப்படி ஸ்ட்ராங்காக இருக்கும்? அதைக்கொண்டு  துணி நெய்தால், கிழிஞ்சுடாதா ஆன்ட்டி?'' எனக் கேட்டான் விஜய்.

பளபளக்கும் பனானா ஆடைகள் !

'நல்லக் கேள்வி... வாழைநாரை நன்றாகக் காயவைத்து, பின்னர் கத்தாழையில் இருந்து எடுக்கப்படும் ஜெல்லில்  ஊறவைத்து, மீண்டும் நன்கு காயவைத்தால், வாழைநார் ரொம்ப வலுவாகிடும். அப்புறம் அது அவ்வளவு சீக்கிரம் அறுந்துபோகாது'' என்றார் லைலா.

''வாழை நார்கள் எல்லாமே குட்டைக் குட்டையா இருக்கே... அதைக்கொண்டு எப்படி நீளமான ஆடைகளைத் தயாரிக்கிறீங்க?'' என்று கேட்டாள் சோபனா.

பளபளக்கும் பனானா ஆடைகள் !

'வாழை மட்டையில் இருந்து எடுத்த நார்த் துண்டுகளை ஒவ்வொன்றாக இணைத்து சின்ன சின்ன நூல்கண்டுகளாகத் திரித்துக் கொள்வோம். இப்படி எவ்வளவு வேண்டுமானாலும் சுற்றிவைக்கலாம். ஒரு வாழை மரத்தில் இருந்து 400 கிராம் வாழை நார் கிடைக்கும். பொதுவாக, வாழை மரத்தில் இருந்து வாழைக் குலையை வெட்டிய பின்பு, மரம் காய்க்காது என்பதால் அது எதற்கும் பயன்படாது. அப்படிப் பயன்படாத வாழை மரங்களை வெட்டி, அதில் இருந்து நார் எடுத்து, அதைத் துணி தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். இதனால், எங்களுக்கு உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு.' என்று ஷோபனாவின் கேள்விக்கு விளக்கம் தந்தார் பத்மா.

'ஆடைத் தயாரிப்பு முறையும் சற்று வித்தியாச மாகவே இருக்கும். வாழைநார் ஆரம்பத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கும். அவற்றுடன் தேவையான வண்ணச் சாயம் தோய்த்து பல வண்ணங்களில் மாற்றப்படும். அந்த நூல்களைக் கொண்டு பல வண்ணங் களில்ஆடைகள் தயாரிக்க லாம். ஒவ்வொரு புடைவை யையும் நெய்துமுடிக்கக்  குறைந்தது இரண்டு அல்லதுமூன்று நாட்கள்ஆகும்' என்றார் சேகர்.

பளபளக்கும் பனானா ஆடைகள் !

''என்னது! ஒரு புடைவைத் தயாரிக்க  மூன்று நாட்களா? இப்படி ஸ்லோவா தயாரிச்சா அதிகமாகச் சம்பாதிப்பது எப்படி?'' இது பூர்ணிமாவின் கேள்வி.

'இட வசதி இல்லாததுதான் இதற்குக் காரணம். நாங்கள் தயாரித்த புடைவைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். தென் ஆப்பிரிக்காவில் எங்களது தயாரிப்புகள் பிடித்துப்போய் நிறையப் புடைவைகளுக்கு ஆர்டர் கொடுத்தார்கள். அரசு உதவினால்  நிச்சயம் நாங்கள் அதிக அளவில் தயாரிப்போம்' என்றார் சேகர்.

புடைவை தயாராகும் தறியின் அருகே சுட்டிகள் சென்றார்கள். ''என்ன ஆன்ட்டி அங்கே கட்டை அங்கேயும் இங்கேயுமா டமால் டமால்னு அடிச்சு, சத்தம் மட்டும் வருது? அதுல எப்படிப் புடைவை வருது?'' என்று தலையைச் சொறிந்துகொண்டே கேட்டான் அறிவழகன்.

பளபளக்கும் பனானா ஆடைகள் !

'முதன் முதலாப் பார்க்கிறப்போ அப்படித்தான் தெரியும். இதில் நூல்கள் வரிசையா பட்டையாக்  கோக்கப்பட்டு இருக்கு. இதைப் பாவு என்பார்கள். இதனுடன் இணைக்கப்பட்ட பெடலை காலால் மிதித்துக்கொண்டே இருப்பார்கள். இதில் மேலே தொங்கும் தக்ளி கட்டை இணைப்பை கையால் இழுத்து இழுத்துவிட, தக்ளி கட்டை (ஊடு) இடமும் வலமுமாகச் சென்றுவரும்போது நூல்கள் குறுக்கும் நெடுக்கும் பின்னிக் கொண்டு ஆடையாக உருவாகிறது. நூல்களை ஒவ்வொன்றாகக் கோக்கவேண்டும். இடையில் வேறு கலரில் நூல்கள் தேவைப்பட்டால், அவற்றை உடனடியாக மாற்றிக்கொள்ளலாம். ஆடையில் தவறாக நூல்கள் கோக்கப் பட்டால், பிறகுஒவ்வொரு நூலாகத்தான் பிரித்துக் கோக்க முடியும். அது ரொம்பக் கஷ்டம். அதனால் கவனமாக நெய்யவேண்டும். இந்த இயற்கை முறை ஆடைகள் பற்றிமக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. தெரிந்த வர்கள் மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்'' என்றார் பத்மா.

''ஆன்ட்டி புடைவை களில் டிசைன் வருதே, அதை எப்படிச் செய்றாங்க?'' என்று கேட்டான் தினேஷ். ''எந்தக் கலரில் என்ன மாதிரி டிசைன் வேணும்னு, முன்னாடியே முடிவு செய்து வெச்சுக்கணும். அப்போதான் அதற்கு ஏற்ற மாதிரி நூல்களைக் கோக்க முடியும்'' என்றபடியே ரோஜாப் பூ டிசைனை ஆடையில் நெய்து காட்டினார்.

பளபளக்கும் பனானா ஆடைகள் !

உடனே மோனிகா, ''ஆன்ட்டி கொஞ்சம் நூல் கொடுங்க. நீங்க பின்னின மாதிரி நானும் பின்னிப் பார்க்கிறேன்'' என்று சொல்லி அதே போலச் செய்து காட்டினாள். எல்லாச் சுட்டிகளும் சேர்ந்து கைதட்டிப் பாராட்டினர்.

பிறகு ஐந்தாறு புடைவைகளை எடுத்துவந்து காட்டினார் சேகர். அந்தப் புடைவைகளில் ஒன்றை எடுத்துத் தன் மீது போர்த்திப் பார்த்து ''ஹே நல்லா இருக்கா பாருடி'' என்று கேட்டாள் வாணி. ''உன்னைவிட அந்தப் புடைவை சூப்பர்!'' என்று சொல்லிக் கலாய்க்க, எல்லோரும் சிரித்தனர்.