Published:Updated:

சுட்டி ஸ்டார்ஸ் !

சுட்டி ஸ்டார்ஸ் !

சிரிக்கும் சந்நியாசிகள்!

##~##

சீனாவில் மூன்று ஞானிகள் இருந்தார்கள். 'சிரிக்கும் சந்நியாசிகள்’ என்று அவர்களுக்குப் பெயர். அவர்களின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. படிக்காத அந்த மூன்று சந்நியாசிகளும் சீனா முழுவதும் ஊர் ஊராகச் சென்று வீதிகளில் நின்று சிரிப்பார்கள்.

'இவங்க ஏன் சிரிக்கிறாங்க... எதுக்குச் சிரிக்கிறாங்க?’ என்று புரியாமல், சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களும் கொஞ்ச நேரத்தில் சிரிக்க ஆரம்பித்து, அந்த இடமே சிரிப்புமயமாகிவிடும். மன இறுக்கம், பணம், பேராசை, ஏமாற்று வேலை ஆகியன மண்டிக் கிடந்த அந்த இடத்தில் இப்போது சிரிப்பு, மகிழ்ச்சி, குதூகலம் நிரம்பி வழியும்.

யாராவது அவர்களிடம் சென்று, ''எங்களுக்கு ஏதாவது சொல்லுங்கள்'' என்றால், ''நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. நாங்கள் சிரிக்கிறோம். இந்தச் சூழ்நிலையை மகிழ்ச்சியாக மாற்றுகிறோம், அவ்வளவுதான்'' என்பார்கள்.

ஒரு கிராமத்தில் அவர்கள் இருந்தபோது, மூவரில் ஒருவர் இறந்துவிட்டார். 'அவங்க இப்போ என்ன செய்றாங்க என்று பார்க்கலாம்’ என்று மக்கள் ஆவலுடன் அங்கு சென்றார்கள்.

அங்கே, இறந்து கிடந்த சந்நியாசியின் உடலைச் சுற்றி மற்ற இரண்டு பேரும் ஆனந்தமாக ஆடிக்கொண்டு இருந்தார்கள். ''என்ன இது பைத்தியக்காரத்தனம். ஒருவர் செத்துக்கிடக்கிறார். நீங்க ஆடிக்கிட்டு இருக்கீங்களே?'' என்று எல்லோரும் திகைத்தார்கள்.

''நாங்கள் எப்போதும் சிரித்தே வாழ்ந்தோம். எப்படி வாழ்ந்தோமோ அப்படித்தானே நண்பரை இப்போது வழி அனுப்ப வேண்டும். அதுதான் சிரித்து மகிழ்ச்சியுடன் விடை கொடுக்கிறோம்'' என்றார்கள்.

பிறகு, இறந்தவரை மயானத்துக்கு தூக்கிச்சென்று சிதையில்வைத்து தீ மூட்டினார்கள். என்ன ஆச்சர்யம்! நெருப்பை வைத்ததும் சிதையில் இருந்து வெடிச் சத்தத்துடன் வர்ண ஒளிகள் தோன்றின.

அந்த சந்நியாசி இறப்பதற்கு முன் தன்னுடைய உடலுக்குள் பட்டாசுகளையும் மத்தாப்பூகளையும் மறைத்துவைத்து இருந்திருக்கிறார். இதைப் பார்த்த மக்கள் துக்கத்தையும் மறந்து சிரிப்புடன் ஆட ஆரம்பித்தார்கள்.

வாழ்க்கை என்பது மகிழ்வதற்கும் அடுத்தவர்களை மகிழ்விப்பதற்கும் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டார்கள்.

சுட்டி ஸ்டார்ஸ் !

சரிபாதி!

ஒரு விவசாயிக்கு நான்கு பிள்ளைகள். அவருக்குப் படத்தில் காண்பதுபோல் சதுரமான நிலம் ஒன்று இருந்தது. அந்த நிலத்தின் கால் பகுதியில் தனக்கு ஒரு வீடு கட்டிக்கொண்டார். மீதி நிலத்தைத் தன் நான்கு பிள்ளைகளுக்குமே பிரித்துக்கொடுக்க எண்ணினார். அவருக்கு நீங்கள் உதவுங்கள். ஒரு பென்சிலை எடுத்துக்கொண்டு, படத்தில் காலியாக இருக்கும் பகுதியை நான்கு சரி பாதியாகப் பிரிக்க வேண்டும். முடியுமா?

சுட்டி ஸ்டார்ஸ் !

 குட்டி கார்

சுட்டி ஸ்டார்ஸ் !

'நானோ’ காரைப் பார்த்தே அதிசயித்த நமக்கு அதைவிட மிகச் சின்ன காரைப் பார்த்தால் எப்படி இருக்கும்? இத்தாலியைச் சேர்ந்த ஜகட்டோ என்பவர் உருவாக்கி இருக்கும் கார் வோல்ப் (Volpe). பார்க்க பொம்மை கார்போல இருக்கும் இது, மின்சாரத்தால் இயங்க கூடியது. 1 மீட்டர் அகலமும் 1.5 மீட்டர் உயரமும் 350 கிலோ எடையும் மட்டுமே உடையது. மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்லலும். வீட்டில் ஓர் அறையின் மூலையிலேயே நிறுத்திவிட முடியும்.

சுட்டி ஸ்டார்ஸ் !

இணையதளம்!

விடுமுறை நேரத்தில் பொழுதுபோக்காக இணையதளத்தில் வலம் வந்தபோது கல்வி சம்பந்தமான ஓர் இணையதளத்தைப் பார்த்தேன்.

சுட்டி ஸ்டார்ஸ் !

பத்தாவது படிக்கும் மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில் கே.கே.தேவதாஸ் என்பவரால் உருவாக்கப்பட்டு இருக்கும் தமிழ் இணையதளம் www.kalvisolai.com. இந்தத் தளத்தில் பல கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் படைப்புகளை வெளியிட்டு உள்ளனர். மாணவர்களுக்கு எந்த ஒரு சந்தேகம் ஏற்பட்டாலும், இந்தத் தளத்தைப் பார்த்துத் தெளிவு பெறலாம். பள்ளி மற்றும் கல்வி சம்பந்தமான அரசுச் செய்திகள் உட்பட அனைத்துத் தகவல்களையும் அப்டேட்டாக  அறிந்துகொள்ளலாம். விடுமுறை விளையாட்டுக்கு நடுவில் இந்த இணையதளத்தை இப்பவே கொஞ்சம் பார்த்துவெச்சுக்கோங்க ஃப்ரெண்ட்ஸ். அப்புறம் ரொம்ப யூஸ் ஆகலாம்.

சுட்டி ஸ்டார்ஸ் !

எப்படி? எப்படி?

சில பெயர்கள் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், சுவையான வரலாறு இருக்கும்.

கிறிஸ்துமஸ்: கிரேக்க மொழியில் 'மஸ்’ என்றால், 'பூஜை’ என்று பொருள். இதைக் குறிக்க 'கிறிஸ்துமஸ்’ சொல் உருவானது.

சுட்டி ஸ்டார்ஸ் !

சீனா: கி.மு 246-ல் வாழ்ந்த சீனாவை முதன் முதலில் ஆண்ட குய்ன் சி ஹங் (Qin shi huang) சக்கரவர்த்தியின் பெயரால் சீனா  பெயர் வந்தது.

சோப்: சோப்புக்கு நுரையைத் தருவது 'சபோனின்’ என்ற ரசாயனம். இதுவே 'சபோ’ என்று மாறி, சோப் ஆகிவிட்டது.

ஹாலி காமெட்: இங்கிலாந்து வானியல் அறிஞர், சர் எட்மண்ட் ஹாலி என்பவர் இந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். எனவே, இது ஹாலிவால் நட்சத்திரம் எனப்படுகிறது.

நியூஸ் (NEWS):N-North E-EastW-West S-South என நான்கு திசைகளில் இருந்தும் செய்திகள் சேகரிக்கப்படுவதால் 'நியூஸ்’ என்ற பெயர் வந்தது.

சுட்டி ஸ்டார்ஸ் !