ஸ்பெஷல்
Published:Updated:

ரயில் தாக்குதலை முறியடிப்போம் !

ரயில் தாக்குதலை முறியடிப்போம் !

##~##

'பாம்’ என்றால் படையே நடுங்கும் என்பது உண்மைதானே? அப்படிப்பட்ட வெடிகுண்டு ரயில் பாதையில் வைக்கப்பட்டால் அதைத் தடுக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை வடிவமைத்து இருக்கிறார் திருப்பூர், சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் யுகவேந்தன்.

ரயில் தாக்குதலை முறியடிப்போம் !

 'ஒரு முறை வெளியூர் செல்வதற்காக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனபோது ரயில்வே பாதுகாப்புப் படையினர் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடி பொருட்கள் இருக்கானு பரிசோதனை செய்த பின்னரே, எல்லாரையும் உள்ளே நுழைய அனுமதிச்சாங்க.

ஸ்டேஷனில்  பரிசோதிக்க முடியுது. ஆனால், ரயில் பாதைகளில் யாராவது வெடிபொருளை வைத்து இருந்தால் அந்த  ஆபத்தை எப்படித் தடுப்பது என்று யோசித்தபோது உண்டானதுதான் 'பாம் டிடெக்டர் ட்ராலி’ (Bomb Detector Trolley) ஐடியா'' என்கிறார்.

அதைப்பற்றி தனது அறிவியல் ஆசிரியர் வீராசாமியிடம் சொன்னபோது அவர் மேலும் சில யோசனைகளைச் சொல்லி, இதனை வடிவமைக்க உதவி இருக்கிறார்.

ரயில் தாக்குதலை முறியடிப்போம் !

தான் கண்டுபிடித்தக் கருவியின் அமைப்பை விவரித்தவர், 'இந்த 'பாம் டிடெக்டர் ட்ராலியை தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறையால் எச்சரிக்கப்படும் நாட்களில் பயன்படுத்தலாம். ரயில்களுக்கு முன்னோட்டமாக ரயில் பாதைகளில் ஓட்டலாம்.

இதில் உள்ள பாம் டிடெக்டர் சந்தேகப்படும்படியான பொருள்களைக் கண்டறிந்து எச்சரிக்கை ஓலி எழுப்புவதுடன் ட்ராலியை நிறுத்திவிடும். அப்போது பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டு வெடிகுண்டு இருப்பதைக் கண்டறியலாம்.

ரயில் தாக்குதலை முறியடிப்போம் !
ரயில் தாக்குதலை முறியடிப்போம் !

மேலும் இந்தக் கருவியில்  இன்ஃப்ரா ரெட் வேவ் (Infra red wave) பொருத்தப்பட்டு உள்ளதால்,  ரயில் பாதையின் குறுக்கே பாறைகள் போன்ற பெரிய தடைகள் இருந்தாலோ அல்லது அதே பாதையில் மற்றொரு ரயில் வந்தாலோ உடனடியாக ட்ராலி நின்றுவிடும்'' என்கிறார் யுகவேந்தன்.

தங்கள் பள்ளியின் சுட்டி விஞ்ஞானி பற்றித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி கூறுகையில் ''எங்கள் பள்ளி சார்பில் அறிவியல் கண்காட்சி அறிவித்தால், முதல் ஆளாக நிற்பது யுகா தான். கடந்த ஆண்டு நடந்த  மாநில அளவிலான கண்காட்சியில் தங்கப் பதக்கம் வென்று எங்களுக்குப் பெருமை சேர்த்தான்'' என்கிறார்.  

இப்போதைக்கு இந்தக் கருவியை யுகவேந்தன் சிறிய அளவில் ஒரு மாடலாகத்தான் செய்து இருக்கிறார். ''இதனை இன்னும் மேம்படுத்தி ரயில்களில் பொருத்தும் கருவியைக் கண்டுபிடிப்பேன். தீவிரவாதச் செயல்களை முறியடிப்பேன்'' என்று முழங்குகிறார் யுகவேந்தன்.

ரயில் தாக்குதலை முறியடிப்போம் !