ஸ்பெஷல்
Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

##~##

''ஹலோ ஜீபா... உலகின் உயரமான இடம் எவரெஸ்ட்... தாழ்வான இடம் எது?''

    -எம்.முத்துராஜ், மதுரை.

''பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கே மின்டா என்ற இடத்தில் உள்ள 'குக்’ பள்ளத்தாக்குதான் உலகின் ஆழமான இடமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 29,028 அடிகள். இந்த குக் பள்ளத்தாக்கின் ஆழம் 37, 782 அடிகளாம். அதாவது, தரைப் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 8 கிலோ மீட்டர் கீழே இருக்கிறது. இந்த இடத்துக்கு மனிதர்கள் உட்பட எந்த உயிரினமும் செல்ல முடியாது. அல்ட்ரா சோனிக் அலைகளைச் செலுத்தித்தான் இந்த ஆழத்தையே கணக்கிட்டு இருக்கிறார்கள்.''

''ஜீபா... கேஸ் சிலிண்டர்களை லிறிநி, மிழிஞிகிழிணி என்று அழைக்கிறார்களே... அவை வாயுக்களின் பெயரா?''

   -கே.ஸ்ரீவர்ஷா, சென்னை-102.

''இல்லை வர்ஷா. கேஸ் சிலிண்டர்களில் பியூட்டேன், புரோபேன் என்ற வாயுக்களை நிரப்பி அழுத்தம் கொடுப்பார்கள். அப்போது அது திரவ நிலையை அடைந்து எரிபொருளாக மாறுகிறது. இதற்கு நறுமணம் கிடையாது. அதனால் முன்னெச்சரிக்கையாக இருந்து ஆபத்தைத் தவிர்க்க, திரவத்துடன் கந்தகத்தை சேர்க்கிறார்கள். மிழிஞிமிகி மற்றும் ஙிஹிஜிகிழிணி என்ற இரண்டையும் சேர்த்து மிழிஞிகிழிணி என்று அழைக்கிறார்கள். அதேபோல் லிமினிஹிணிதிமிணிஞி றிணிஜிஸிளிலிணிஹிவி நிகிஷி என்பதன் சுருக்கமே லிறிநி.''

மை டியர் ஜீபா !

''நம் கையில் ரேகைகள் இல்லாவிட்டால் என்ன ஆகும் ஜீபா?''

-ம.அக்ஷயா, அரூர்.

''ஒன்றும் ஆகாது அக்ஷயா! முதுமை நெருங்க நெருங்க முகம் மற்றும் உடலில் சுருக்கங்கள் எனப்படுகிற மடிப்புகள் ஏற்படுகிறது அல்லவா? அப்படித்தான் ரேகை என்பதும் உள்ளங்கையின் தோலின் மீது இருக்கும் மடிப்புகள். கருவில் இருக்கும் குழந்தைக்குக் கைகள் உருவாகும்போதே அவை உள்ளங்கையை மடித்தும் விரித்தும் பழக்கமாவதால் அந்தப் பிஞ்சு உள்ளங்கைகளில் மடிப்புகள் (ரேகைகள்) உருவாகின்றன. அதனால் ரேகை இல்லாமல் எந்த மனிதனும் பிறக்க (இருக்க) முடியாது.''

''டியர் ஜீபா... நம்மால் இரண்டு கண்களால் ஒரு பொருளைத்தானே பார்க்க முடிகிறது. அப்படி எனில் ஒரு கண் இருந்தாலே போதும் அல்லவா?''

  -அ.முகமது ரபீக், செஞ்சி.

''போதும்தான் ரபீக். ஆனால் அதில் பொருளின் தெளிவான பிம்பம் கிடைக்காது. ஒரு கண் மூலம் நமக்குக் கிடைக்கும் ஒரு பொருளின் பிம்பம் 135 டிகிரிதான். அதுவே இரு கண்களும் சேர்ந்து பார்க்கையில் 180 டிகிரி கிடைக்கும். ஒரு பொருளைப் பார்க்கும்போது, நம் இடது கண்ணில் உள்ள பார்வை நரம்புகள், அந்தப் பொருளின் வலது பக்கம் முழுவதையும் கவர்கிறது. வலது கண், அந்தப் பொருளின் இடது பக்கம் முழுவதையும் கவர்கிறது. இந்த இரு பார்வை நரம்புகளும் மூளையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிந்து, அந்தப் பொருளின் பிம்பத்தைக் காட்சியாக உணர்த்துகிறது. அதனால்தான் நமக்கு இரண்டு கண்கள் படைக்கப்பட்டு இருக்கின்றன.''

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... கடற்கரையில் அவ்ளோ மண் எப்படி வந்துச்சு? அதைவெச்சு எவ்வளவு வீடு கட்டலாம்?''

   -ஆர்.நந்தினி, விண்ணமங்கலம்.

''அது ஒரு பெரிய்ய்ய்ய்ய கதை நந்தினி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி கடல்களை ஒட்டிப் பெரிய பெரிய பாறைகள் இருந்துச்சு. அந்தப் பாறைகள் மீது அலைகள் மோதி மோதிப் பெரிய பெரிய கற்களாக உடைஞ்சு தண்ணீருக்குள்ளே போச்சு. அங்கேயும் தண்ணீரால் ஒன்றுடன் ஒன்று மோதி சின்னச் சின்னக் கற்களாக மாறிடுச்சு. அந்தக் கற்களும் உரசிகிட்டு பொடிப் பொடியான மணலாக மாறிடுச்சு. வெயிட் குறைஞ்சதாலே அதை அலைகள் தள்ளிட்டு வந்து கரையில் விட்டுட்டுப் போயிடுச்சு. அப்புறம் என்ன கேட்டே? ஆங்... வீடு! ஏற்கெனவே ஆற்று மணலை அள்ளி வீடுகளைக் கட்டி பூமியை அபாய நிலைக்கு கொண்டு போய்ட்டோம். கடல் மணலையாவது விட்டுடுவோமே. கடற்கரைக்கு விளையாடப் போகிறப்ப அதை வெச்சு மணல் வீடு எவ்ளோ வேணும்னாலும் கட்டிக்கலாம்.''

''டியர் ஜீபா... ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் என்று பெருமிதமாகச் சொல்கிறார்களே... அவர்களைப் பற்றி உனக்குத் தெரியுமா?''

       -எஸ்.இளங்கோவன், சோமனூர்.

''ஸ்காட்லாண்ட் யார்ட் என்பது லண்டன் நகரக் காவல் துறையின் செல்லப் பெயர். இன்று லண்டன் நகரக் காவல் துறையின் அலுவலகம் இருக்கும் இடத்தில் முன்பு பழங்கால அரண்மனை இருந்தது. கி.பி.900 முதல் 1100 வரையிலான மன்னர்கள் அதில் வசித்தார்கள். பிறகு, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து, 'சிட்டி ஆஃப் லண்டன் போலீஸ்’ என்ற பெயரில் 68 பேர்களைக் கொண்ட காவல் படையை உருவாக்கியது. பிற நாட்டு காவல்துறையைப் போல் இவர்களும் ஆரம்பத்தில் குற்றவாளிகளைப் பிடிப்பதில் நிறையவே திணறினார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திறமையை வளர்த்து கொண்டார்கள். காவலர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. 1842-ல் துப்பறியும் பிரிவை உருவாக்கினார்கள். இப்போது லண்டன் மெட்ரோபாலிடன் போலீஸ் என்ற பெயரில் உலா வருகிறார்கள். நம் காவல்துறையிலும் லண்டன் காவலர்களுக்கு இணையான திறமைசாலிகள் இருக்கிறார்கள் இளங்கோ.''