ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

ஆசிரியர்களுக்கு டிப்ஸ்...மாணவர்களுக்கு வழிகாட்டி !

வாழ்க்கைத் திறன்கள்!

##~##

ஒரு மாணவர் தன் உடலையும்  உள்ளத்தையும் நலமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வாழ்க்கைத் திறன்கள் உதவுகின்றன. மாணவர்கள் தினசரி வாழ்க்கையைச் சிறப்பாக எதிர்கொள்ள இந்தத் திறன்கள்தான் அடிப்படை. இதன் மூலம் மாணவரின் சிந்தனையும் நடத்தையும் மேம்படும்.

தன்னை அறிதல், துணிந்து உரைத்தல், மறுக்கும் திறன், பகுத்தறியும் திறன், சிறப்பாகத் தொடர்புகொள்ளும் திறன், குழுப் பணி முதலானவை வாழ்க்கைத் திறன்கள் பகுதியில் மதிப்பீடு செய்வதற்காகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்தப் பகுதியில் ஆசிரியர்களும் மாணவர்களும் அறியவேண்டியவை:

ஒரு மாணவர் தன்னம்பிக்கையைச் செயல் மூலம் வெளிப்படுத்துதல்.

மாணவரின் தன்னம்பிக்கையை வலுவாக்கஆசிரியர்கள் துணைபுரிதல்.

தைன்னைவிட பெரியவர்களுக்கு மரியாதை தருதல்.

தைன்னுடைய நிறைகுறைகளை அறிந்து இருத்தல்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

ஒரு மாணவர் தேவையற்ற செயல்களில் இருந்து விலகி இருத்தல்.

தைனது கருத்தைத் துணிவோடு பேசுதல்.

தைவறான சொற்களை பயன்படுத்தாமல் இருப்பது. தவறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது.  

தைன்னைத் தவறான நோக்கத்தோடு ஒருவர் தொட்டால், எதிர்ப்புத் தெரிவித்தல்- (குட் டச், பேட் டச் பற்றி அறிந்து இருத்தல்).

அனைவரிடமும் சிறப்பாகத் தொடர்புகொண்டு பேசுதல்.

சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுதல்.  

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

குழுவாகச் செயல்படுவதில் ஆர்வம் காட்டுதல்.

இவை அனைத்தும் ஆசிரியரால் கவனிக்கப்படும். அதற்கு உரிய மதிப்பீடுகளும் வழங்கப்படும்.

வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்த ஆசிரியரின் பங்களிப்பு மிகவும் முக்கியம். மாணவர்கள் பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபடும்போது, இந்தத் திறன்களை வளர்ப்பதற்கு உதவுவதும், அறிவுரை கூறுவதும் அவசியம். அதைத் தொடர்ந்து, அவர்கள் வெளிப்படுத்தும் திறன்களைக் கண்காணித்து மதிப்பீடு செய்யவேண்டும்.

- எஸ்.ஜானவிகா

தமிழகத்தில் தற்போது எட்டாம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (CCE - Continuous and Comprehensive Evaluation) நடைமுறையில் உள்ளது. இந்த மதிப்பீட்டு முறை, மாணவர்களின் கல்விசார் செயல்பாடுகளுடன் கல்வி இணைச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது.

கல்வி இணைச் செயல்பாடுகள் (Co - Scholastic Activities) நான்கு தலைப்புகளின் கீழ் மதிப்பீடு செய்யப் படுகின்றன. வாழ்க்கைத் திறன்கள் (Life skills), மனப்பான்மை மற்றும் மதிப்புக் கல்வி (Attitudes and values)நன்னலம் மற்றும் யோகா (Wellness and Yoga) மற்றும் பாட இணைச் செயல் பாடுகள் (Co - curricular activities) ஆகியன. இவற்றைப் பற்றியும், இவற்றின் கீழ் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த இணைப்பில் முழுமையாகப் பார்ப்போம்.

நம்மை நாம் அறிவோம்!

வாழ்க்கைத் திறன்களில் நம்மையே நாம் அறிந்துகொள்வதற்குத் தன்னை அறிதல், துணிந்து உரைத்தல், மறுத்தல் திறன் மற்றும் பகுத்தறியும் திறன் முதலானவை உதவுகின்றன.  

தன்னை அறிதல்: மாணவர் தமது நிறைகுறைகளை நன்கு உணர்ந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றிபெற முடியும். அவ்வாறு தன்னைப் பற்றி மாணவர் அறிய வேண்டியவை...

தன்னம்பிக்கை, ஒரு செயலை ஆற்றலுடன் தொடங்குவது, பிறரை மதித்தல், பெரியவர்களுக்கு மரியாதைத் தருதல், தனது திறமைகள் மற்றும் குறைகளை அறிந்து இருத்தல், சூழலுக்கு ஏற்ப சிறப்பாக முடிவு எடுத்தல் மற்றும் எடுத்த முடிவைத் தெரிவித்தல்.

இந்த விஷயங்களில் மாணவர்கள் எந்த அளவுக்குத் தெளிவு பெற்று உள்ளார்கள் என்பதை ஆசிரியர் செயல்பாடுகள் மூலமாகவோ, அல்லது உன்னிப்பாகக் கவனிப்பதன் மூலமாகவோ மதிப்பிடலாம்.

துணிந்து உரைத்தல் மற்றும் மறுத்தல் திறன்: மாணவர்கள் தீயப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்க, மறுத்தல் திறன் மற்றும் துணிந்து உரைத்தல் திறன் மிகவும் அவசியம். இவற்றை ஆசிரியர்கள் மதிப்பிடுவதற்குக் கவனிக்க வேண்டியவை:

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் ஆற்றல்.

பிறரிடம் தன் நிலையைத் தெளிவாக உணர்த்துதல்.

தைன்னைத் தீய நோக்கத்துடன் தொடுதலை எதிர்த்தல்.

அறிமுகம் இல்லாதவரிடம் எச்சரிக்கையாக இருத்தல்.

பகுத்தறியும் திறன்: ஆசிரியர் தங்களது மாணவர்களின் பகுத்தறியும் திறனை வளர்க்கப் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பாடங்களுக்கு இடையே சமூக விழாக்கள் நடைபெறும் இடங்கள், விளையாட்டு மைதானம் போன்ற பல பகுதிகளிலும் மாணவர்களின் கீழ்க் கண்ட செயல்பாடுகளைக் கவனித்து மதிப்பிடலாம்.

குறிக்கோளையும் திறமையையும் வெளிப்படுத்துதல்.

ஒரு செயலுக்கான காரணத்தை அறியும் வகையில் சிந்தித்தல்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

சிக்கலான சூழலிலும் தெளிவாகச் சிந்தித்தல்.

ஒரு செயலைக் கட்டுப்பாடுடன் செய்து முடித்தல்.

தோல்வியை வெற்றிப்படிகளாக மாற்றும் சிந்தனை.

- ஸ்ரீ.திலீப், ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
சத்தியமங்கலம், விழுப்புரம்.

தொடர்புகொள்ளும் திறனை மேம்படுத்துவோம்!

'மனிதன் ஒரு சமூக விலங்கு’ என்பார் அரிஸ்டாட்டில். நாம் அனைவரும் சமூகத்தில் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொண்டு வாழவேண்டி உள்ளது. சிறப்பாகத் தொடர்புகொள்ளும் திறன் என்பது அத்தியாவசியமான ஒன்று. அதில் மாணவர்களுக்கு தெளிவை ஏற்படுத்துவது ஆசிரியரின் கடமை.

மாணவர்களின் சிறப்பாகத் தொடர்புகொள்ளும் திறனைப் பல்வேறு விதமான அளவீடுகளைக்கொண்டு அறியலாம். அவற்றில் சில...

மாணவரிடம் குறிக்கோளை நோக்கிய தெளிவு.

கைவனித்துக் கேட்கும் இயல்பு.

குறைகூறாமல் கருத்துக்களை எடுத்துச் சொல்வது.

எதிர்கருத்துகளை ஏற்பது.

பிறரை வற்புறுத்தாத மனம்.

சைரியான உடல் அசைவுகளைப் பயன்படுத்துதல்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

இந்தப் பண்புகள் அனைத்தையும் மாணவர்களிடம் கவனித்து, ஆசிரியர் மதிப்பீடு செய்யலாம். இந்தத் திறன்களை வளர்ப்பதற்குச் சிறு சிறு செயல்பாடுகளை வகுப்பிலேயே மேற்கொள்ளலாம். உதாரணமாக, இன்றையச் செய்தித்தாள்களை மாணவர்களிடம் கொடுத்துப் படிக்கச் செய்து, அவர்கள் படித்த செய்திகளை விவரிக்கச் சொல்லலாம்.

மாணவர்கள் இடையே சிறப்பாகத் தொடர்புகொள்ளும் திறனை மேம்படுத்த சில அடிப்படை விஷயங்களை ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும். மாணவர்கள் மற்றவருடன் தொடர்புகொள்ளும்போது பின்வரும் சிலவற்றைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தலாம். அவை...

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

1. மற்றவரைக் குறைகூறுதல்

2. அவமதித்தல்

3. அதிகாரம் செய்தல்

4. பயமுறுத்துதல்

5. உரத்த குரலில் பேசுதல்

6. பேச மறுத்தல்

7. பட்டப் பெயர் கூறி அழைத்தல்

8. கண்களை உருட்டிப் பார்த்தல்

9. உற்றுப் பார்த்தல்

10. விழிகளைப் பார்க்காமல் பேசுதல்

இவற்றைத் தவிர்த்தால், அவர்களுடைய தொடர்புகொள்ளும் திறன் மேன்மை அடையும். வருங்காலத்தில் மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கவும் வழிவகுக்கும்.

- டி.விஜயலட்சுமி, ஆசிரியை,
அரசினர் ஆண்கள் மே.நி.பள்ளி,
கண்ணமங்கலம், திருவண்ணாமலை.

குழு மனப்பான்மையை வளர்ப்போம்!

குழுச் செயல்பாடு... வாழ்க்கைத் திறன்களில் மிக முக்கியமானது. அனைத்து மாணவர்களையும் ஆர்வத்துடன் முன்னால் வரவழைக்கவும், தன்னம்பிக்கையுடன் கருத்துகளைக் கூறச் செய்யவும் குழுச் செயல்பாடு மிகவும் உதவுகிறது.

குறிப்பாக, கற்றலில் பின்தங்கி இருக்கும் மாணவர்களை மேம்படுத்த இது சிறந்த வழி. சில மாணவர்களிடம் முழுச் செயல்பாட்டையும் தனித் தனியாகச் செய்யச் சொன்னால், அவர்கள் அதைச் செய்வதற்குத் தயங்கக்கூடும். அதே வேளையில், ஒரு செயல்பாட்டையோ அல்லது செயல்திட்டத்தையோ சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அவர்களைக் குழுவாக செய்யச் சொன்னால், நிச்சயமாக ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் பங்குபெறுவார்கள்.

உதாரணமாக, எங்கள் வகுப்பில் ‘Intelligent’ என்ற ஆங்கிலப் பாடத்தை ஒட்டி 'விவாதம்’ ஒன்றை நடத்தினோம். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த ஒரு கருத்தைச் சொல்லி,  அனைவருமே செயல்பாட்டில் பங்குபெற்றனர்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

அதேபோல், ஆங்கில இலக்கணச் செயல்பாடு ஒன்றுக்காக, படம் வரையத் தெரிந்தவர் வரைய, ஒருவர் எழுத, அனைவரும் சரியா, தவறா, என விவாதித்துப் பதிலைப் பொருத்தியது, குழுச் செயல்பாட்டின் சிறப்பை உணர்த்தியது.

மாணவர்களிடம் குழு மனப் பான்மையை வளர்ப்பதற்கு, ஆசிரியர்கள் பாடங்களையே குழுச் செயல்பாடாக வழங்கலாம். அதன் மூலம் 'நான்’ என்பது மாறி 'நாம்’ என்ற உணர்வு மாணவர்கள் மத்தியில் மேலோங்கும்.

குழு மனப்பான்மை, நம்பிக்கை, பங்கேற்புத் திறன் முதலியவற்றை மேம்படுத்தும் குழுச் செயல்பாடுகள், மாணவர்களிடம் உள்ள அச்சத்தையும் கூச்சத்தையும் போக்கும். எந்த ஒரு நற்செயலையும் தானாக முன்வந்து செய்யும் மனப்பான்மையைத் தரும்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

மாணவர்களின் குழுப் பணியை மதிப்பிடும்போது, அவர்களில் குழுவில் முன் நின்று பணியாற்றுபவர், பிறர் கருத்துக்கு மதிப்பளிப்பவர், தொடங் காற்றல் உடையவர், பொறுப்பு மிக்கவர், குழுவினர் கூறும் மீள் கருத்து களையும், திறனாய்வுக் கருத்துகளையும் நேர்மறையாக எடுத்துக்கொள்பவர் ஆகியோரை அடையாளம் கண்டு ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யலாம்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

- நா.கிருஷ்ணவேணி,
ஆசிரியர், ஊ.ஒ.ந.நி.பள்ளி,
நல்லம்பாக்கம்.

மனப்பான்மைகளும் மதிப்புகளும்!

கல்வி இணைச் செயல்பாடுகளில் இரண்டாவதாக வருவது, மனப்பான்மை களும் மதிப்புகளும். ஒரு மாணவர் தான் விரும்பும் வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கு இந்தத் திறன்களே அளவுகோள்.

நேர்மையாக நடந்துகொள்ளுதல், ஒழுக்கமாக இருப்பது, சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களில் எச்சரிக்கையாக விலகுவது போன்றவை ஒரு மாணவரிடம் இருக்கவேண்டிய முக்கிய அம்சங்கள். இவை தவிர, சமுதாயத்தின் நிலையை அறிதல், உரிய இடத்தில் மரியாதையுடன் நடத்தல், சகிப்புத்தன்மை, இணக்கமான உறவை வெளிப்படுத்துதல் போன்றவை எளிதில் வெளியில் தெரியக்கூடியவை. இவற்றை அடிப்படையாகக்கொண்டு ஆசிரியர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

நமது மரியாதைக்கு உரிய தேசிய மற்றும் மாநிலச் சின்னங்களை அறிந்து வைத்திருத்தல் மற்றும் அவற்றின் பொருள் பற்றியும் சிறப்பு பற்றியும் தெரிந்துவைத்து இருப்பதை 'தேசிய மாநிலச் சின்னங்களை மதித்தல் திறன்’ என்கிறோம்.

பாராட்டத்தக்க பண்புடைமை என்பது எப்போதும், எந்தச் சூழலிலும் சமுதாயத்துக்கும் சட்டத்துக்கும் பொருத்தமான பண்புகளை வெளிப்படுத்துவதைக் குறிக்கும்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

மாணவப் பருவத்தில் இருந்தே சமூகத்தின் மீது அக்கறையை வலுவாக்குவதற்கு வகைசெய்ய வேண்டும். இத்தகைய திறன்களை வளர்ப்பதற்கு, 'மனப்பான்மைகளும் மதிப்புகளும்’ பிரிவு வழிவகுக்கிறது. அதாவது, பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பது, கலை, பண்பாட்டுச் சிறப்பு மிக்க இடங்களைக் காப்பது, மின் சிக்கனம் பற்றி அறிந்து இருப்பது முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும்.

பிற உயிர்களிடத்தில் அன்புகாட்டுதல், ஒற்றுமை கடைப்பிடித்தல், பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுதல். இவற்றை மாணவர்கள் கவனத்தில் கொண்டு செயல்படுகிறார்களா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டியதும் அவசியம்.

ஆசிரியர்கள் மேலும் சில அடிப்படை விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

மாணவர் ஒருவரை ஆசிரியர் உன்னிப்பாகக் கவனித்து, அவரது இயல்பான செயல்பாடுகளைக் கருத்தில்கொண்டுதான் கிரேடுகளை வழங்குவார். ஏதேனும் ஒரு நாளில் அல்லது ஒரு சூழலில் மட்டுமே இந்தக் கவனித்தல் நடைபெறாது. பருவம் முழவதுமே ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் தொடர்ந்து கவனித்து வருவார். மாணவர்கள் வகுப்பறை மட்டும் அல்லாது விளையாட்டு மைதானத்தில் அல்லது பள்ளி வளாகத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கவனிக்கப்படலாம்.  சில சமயம் பள்ளி வளாகம் தாண்டி சமூகச் சூழலிலும் ஆசிரியரால் கண்காணிக்கப்படலாம்.

- எஸ்.ஜானவிகா

பாராட்டத்தக்க பண்புகளை வளர்ப்போம்!

இந்தியர் ஒவ்வொருவரும் நமது தேசிய மற்றும் மாநில அரசு சார்ந்த சின்னங்களுக்கு மரியாதை செலுத்துவதைக் கடமையாகக்கொண்டு இருக்க வேண்டும்.

தேசிய, மாநிலச் சின்னங்களை ஆசிரியர், தங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி இருப்பார்கள். இந்தச் சின்னங்களை அறிவதன் மூலம் அவற்றின் மீதும், நம் நாடு, மாநிலம் மீதும் பற்று அதிகரிக்கும். இதேபோல் விடுதலை நாள், குடியரசு நாள் பற்றிய விளக்கத்தைப் பெறுவதன் வழியாக, நம் தலைவர்கள் விடுதலைக்காகப் பட்ட பாடுகளை உணரலாம்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது மகிழ்ச்சியுடனும் திருத்தமுடனும் அழகாக ராகமாகப் பாடக் கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டுப்பண் பாடும்போது அசையவோ, பேசவோ கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

தேசியக் கொடியைக் கீழே போடவோ, மிதிக்கவோ கூடாது; காவி நிறம் மேலே வரும்படி மட்டுமே கொடியைப் பறக்க விட வேண்டும் என்பதை எல்லாம் ஆசிரியர்கள் உதாரணங்களோடு மாணவர்களுக்கு விளக்கலாம்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

தினமும் காலையிலும் மாலையிலும் வழிபாட்டுக் கூட்டத்தில் ஒவ்வொரு மாணவரையும் கவனிப்பதன் மூலம் இதுபோன்ற திறன்களை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யலாம்.

ஆசிரியர்கள் உறுதுணையுடன் மாணவர்கள் பாராட்டத்தக்க பண்புகளை வளர்த்துக்கொள்வது அவசியம். எப்பொழுதும் பொருத்தமான பண்புகளையே வெளிப்படுத்துதல், சொல்லிலும் செயலிலும் அனைவருக்கும் மதிப்பு அளித்தல், நண்பர்களுக்கு உதவுபவராகவும், அவர்களின் மனத்துக்கு இனியவராகவும் இருத்தல், சமூக நன்னடத்தை யினை வகுப்பிலும் வெளி இடங்களிலும் வெளிப் படுத்துதல், கோபம்கொள்ளும் நிலையிலும் பண்பு நிலையில் இருந்து வழுவாமல் இருத்தல் முதலானவற்றில் மேன்மை பொருந்தியவராகத் திகழுதல் அவசியம்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

மேலும், பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல் என்பதும் முக்கியம். அடுத்தவருக்கு முன்வந்து தாமாக விட்டுக்கொடுத்து உதவுதல், தாவரங்களையும் மரங்களையும் பாதுகாத்து வளர்க்க முன்வருதல், எந்த முறையிலும் விலங்குகளைத் துன்புறுத்தாத பண்புடன் இருத்தல், மற்ற உயிர்களின் நிலையில் இருந்து பார்த்தல் போன்ற அனைத்திலும் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மதிப்பீடு செய்ய, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.

- இரா. இராணி,
தலைமை ஆசிரியை, ஊ.ஒ.தொ.பள்ளி,
விநாயகக்குடி, நாகை மாவட்டம்.

பாதுகாப்பதே நம் கடமை!

கல்வி இணைச் செயல்பாடுகளின் கீழ் 'மனப்பான்மைகளும் மதிப்புகளும்’ பிரிவில் இடம்பெற்று இருக்கும் செயல்களில், நமக்கு சமுதாயப் பொறுப்புகளை உணர்த்தக்கூடிய சிலவற்றைப் பார்ப்போம்.

பள்ளியின் பொருட்களையும், சுவர்களையும் சிதைக்காமல் இருத்தல், மனம்போன போக்கில் வன்முறையில் ஈடுபடாமலும், பள்ளியின் சொத்துகளைப் பாழ்படுத்தாமலும் இருத்தல், மின்சாரக் கருவிகளைத் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துதல், பிறரால் ஏற்படும் கலை, பண்பாட்டுச் சீரழிவுகளைத் தடுத்தல், பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதில் பங்கேற்றல் ஆகியவை பள்ளி மற்றும் சமூகத்தில் உள்ள பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தலின் கீழ் பின்பற்ற வேண்டியவை ஆகும்.

பொதுச் சொத்துகளைப் பாதுகாப் பதும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமையாகவே இருக்கிறது என்றால், அவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தன என்பதை உணரவேண்டும்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

மாசுக் கட்டுப்பாடு, மரம் வளர்த்தல், நச்சுக் கழிவுகளை ஒழித்தல், சாலை விதிமுறைகளைப் பின்பற்ற விழிப்பு உணர்வு ஏற்படுத்துதல் போன்ற நற்செயல்களை உலகின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் செய்யவேண்டும். அத்துடன், இவற்றைப் பிறரையும் செய்யத் தூண்டவேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் வாழ்கின்ற இந்தப் பூமியில் நம் சந்ததியினரும் மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.

இதுபோன்ற நல்ல விஷயங்களை மாணவர்களைப் பின்பற்றச் செய்து, அதன் மூலம் அவர்களை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யலாம். இதற்கென நாம்  கவனத்தில்கொள்ள வேண்டியவை:

மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் வழியில் உள்ள சாலைக் குறியீடுகளை வரைந்துவரச் செய்தல்.

பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கும் முறைகள் குறித்துப் பேச்சுப் போட்டிகள் நடத்துதல்.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் குறித்து நாடகங்கள் மூலமும், பாடல்கள் பாடியும் பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் விழிப்பு உணர்வு ஏற்படுத்துதல்.

ஜனவரி முதல் வாரம் (சாலைப் பாதுகாப்பு வாரம்) பள்ளியில் சாலையமைப்பு போன்ற ஒன்றை ஏற்படுத்தி, வாகனங்கள் ஓட்டுவதைப் போல மாணவர்களை நடிக்கச் செய்து, அவர்கள் சாலை விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்று கவனித்து மதிப்பீடு செய்யலாம்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

மரக்கன்றுகளையும், செடிகளையும் நட்டு, பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைக்கச் செய்து, மாணவர்கள் அதைப் பராமரிக்கும் விதித்திலும் மதிப்பீடு செய்யலாம்.

இதேபோல், சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பைக் கடைப்பிடித்தலும் அவசியம். சாலை விதிகளை விழிப்புடன் பின்பற்றுதல், விளையாட்டுத் திடலில் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தல், மின்பொருள்கள் மற்றும் மின்மாற்றிகளில் கை வைக்காமல் இருத்தல், சமையல் அறைச் சாதனங்களைப் பாதுகாப்புடன் கையாளுதல், நீர்நிலைகளில் போதிய முன் எச்சரிக்கையுடன் இருத்தல் முதலானவற்றில் மாணவர்களைக் கவனித்து ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யலாம்.

- மூ.சங்கீதா, ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி,
புதுப்பேட்டை, ஆரணி.

பண்பாடுகளை மதிப்போம்!

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

நம் நாட்டில் பல்வேறு விதமான சமூகங்கள், பழக்கவழக்கங்களுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வேற்றுமைகளை எல்லாம் தாண்டி, ஒரே தேசம் என்ற ஒரு மெல்லிய உணர்வு அவர்களை இணைக்கிறது. குறிப்பாக, மாணவர்கள் இடையே சாதி, மத வேறுபாடுகள் அல்லாத சூழல் நிலவுவதைப் பார்க்க முடியும்.

எங்கள் பள்ளியில் ஒரு மாணவிக்கு உடல்நிலை சரியில்லை. அப்போது, எதிர்பாராதவிதமாக கிறிஸ்தவ மாணவி மண்டியிட்டு ஜெபம் செய்ய, மற்றவர்கள் அவளுக்கு எந்த ஒரு இடையூறும் செய்யாமல் அமைதி காத்தனர்.

இந்தப் புரிதல்தான் மற்ற சமூகத்தினரின் பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொள்ளுதலின் ஆணிவேர். இது போல் சின்னச் சின்ன நிகழ்வுகளில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கவனித்து, அவர்கள் எப்படிப் பிற சமூகங்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையை மதித்து ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து மதிப்பீடு செய்யலாம்.

குறிப்பாக, இந்தியப் பண்பாட்டிலும், சமூக வழக்கங்களிலும் நிலவும் வளமான வேற்றுமைகளை அறிதல், பிற மத, மொழி சிறுபான்மையினரிடம் மரியாதை காட்டுதல், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வை இடுவதில் ஆர்வம் காட்டுதல், பண்பாட்டு நிகழ்ச்சிகளில் துடிப்போடு கலந்து கொள்ளுதல் போன்றவை சிறப்பானவை. இவற்றுக்கு உரிய வழிகாட்டுதல்களைத் தந்து, அவர்களின் செயல் பாடுகளுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யலாம்.

தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் முதலான பாடங்களை நடத்தும்போது, ஆசிரியர்கள் பாடங்களை ஒட்டிய கதைகளையோ, சம்பவங்களையோ மாணவர்களிடம் பகிரலாம். நம் நாட்டின் பண்பாட்டைப் பிரதிபலிக்கக்கூடிய கதைகளைச் சொல்லி, அதுகுறித்து மாணவர்களை விவாதிக்கச் சொல்லலாம்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

அதுபோல், மாணவர்கள் தங்கள் வீட்டிலும், தங்கள் வசிப்பிடங்களிலும் நடைபெறுகின்ற சமூக விழாக்கள், பண்டிகைகளைப் பற்றி விவரிக்கச் சொல்லி, அதில் அவர்கள் புரிந்துகொண்ட விஷயங்கள்  பற்றி பேசவைத்து மதிப்பிடலாம்.

- க.மணிமேகலை, ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
வெங்காரம் பேரையூர், திருவாரூர் மாவட்டம்.

மாணவர்களைச் செம்மைப்படுத்தும் செயல்பாடுகள்!

கல்வி இணைச் செயல்பாடுகளில் நன்னலம், யோகா மற்றும் முழு உடற்பயிற்சி ஆகியவை மாணவர்களை எல்லா விதங்களிலும் மேம்படுத்தக் கூடியன ஆகும்.

முந்தைய வருடங்களில் விளையாட்டுப் பாடவேளையில் மாணவர்கள் வெளிப்படுத்தி வந்த விளையாட்டுத் திறன்களே இதிலும் வருகின்றன. ஒரு விளையாட்டுப் போட்டியில் பெறும் வெற்றி, தோல்வி மட்டும் அல்லாது, அந்தப் போட்டியில் கலந்துகொள்வதில் தொடங்கி முடியும் வரை ஒரு மாணவர் வெளிப்படுத்தும் ஆர்வமும் திறமைகளும் ஆசிரியர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

எனவே, ஒரு குறிப்பிட்ட போட்டியில் மாணவர் தோல்வி அடைந்து இருந்தாலும்கூட, அதே மாணவர் தனது சீரான செயல்பாடுகளால் நல்ல கிரேடுகளைப் பெற முடியும்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

தினசரி தேவையான உடற்பயிற்சி, வெள்ளிதோறும் பள்ளியில் நடைபெறும் அனைத்து மாணவர்களுக்குமான கூட்டு உடற்பயிற்சி மற்றும் யோகாவில் பங்கேற்பது, ஒரு குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டி குறித்த அனைத்துத் தகவல்களையும் அறிந்து வைத்திருப்பது, பள்ளி சார்பில் வெளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது ஆகியனவற்றைக் கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் மதிப்பீடு வழங்கலாம்.

இறுதியாக வருவது, பாட இணைச் செயல்பாடுகள். பள்ளி வளாகத்தில் நடைபெறும் பல மன்ற அமைப்புச் செயல்பாடுகளில் மாணவர்கள் முறைப்படி பங்கேற்பதன் மூலம் திறமைகளை வெளிப்படுத்தலாம்.

உதாரணத்துக்கு, கரகம், தப்பாட்டம், கும்மி, கோலாட்டம், கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைகளை அறிந்து இருத்தல் மற்றும் அவற்றில் பங்கேற்பதைச் சொல்லலாம். இதேபோல், மரபு விளையாட்டுகளான கபடி, கோகோ போன்றவை குறித்த அறிவு மற்றும் பங்கேற்றல் ஆகியவையும் அடங்கும்.

இலக்கிய மன்றச் செயல்பாடுகள், அறிவியல் மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், சாரண - சாரணியர் இயக்கம், தேசிய பசுமைப் படை, செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப் பணித் திட்டம் போன்றவற்றில் பங்கேற்று இருப்பதும் நல்லது.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

தனித்திறமைக்கு இடம்கொடுக்கும் வகையில் பொம்மைகள் செய்தல், இசைக் கருவிகளை அறிந்து இருத்தல் மற்றும் வாசித்தல், மூலிகைகள் பற்றி அறிதல் மற்றும் வளர்ப்பு, உபயோகம் போன்றவையும் இந்தத் தலைப்பின் கீழ் கிரேடுகளை அள்ளித் தரும்.

இத்தகைய பாட இணைச் செயல்பாடுகளைத் தரும்போது, நம் பள்ளி அமைந்து இருக்கும் பகுதிகளில் எவ்விதச் செலவும் இன்றிக் கிடைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டே படைப்புகளை உருவாக்க மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம்.

                                  - எஸ்.ஜானவிகா

உடல் நலன் பேணுவோம் !

'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ எனும் முதுமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிறந்த வகையில் கல்வி கற்க விரும்பும் சுட்டிகள் ஒவ்வொருவரும் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? இதனைச் சுட்டிகளிடம் வளர்க்கும் கல்வி இணைச் செயல்பாடுகளில் ஒன்றுதான் 'நன்னலம், யோகா மற்றும் முழு உடற்பயிற்சி’ எனும் பகுதி.

மாணவர்கள் உடற்பயிற்சி, ஒய்வு, உடல் உறுப்புகள் பற்றிய அடிப்படைச் செய்திகள், உணவு வகைகள், தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், உணவுக் குறைபாட்டினால் ஏற்படும் நலக்கேடுகள் ஆகிவற்றைப் பற்றி விழிப்பு உணர்வு பெறவேண்டும். அத்துடன், அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகும். இதற்காக வகுப்புக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு பருவத்துக்கும் பாடங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்துகின்றனரா என்பதை ஆசிரியர்கள் தொடர்ந்து கவனித்து மதிப்பீடு செய்கின்றனர்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

உதாரணமாக, மூன்றாம் பருவத்தில் 6-ம் வகுப்புக்கு 'கை சுத்தம்’ என்ற தலைப்பில் கை கழுவுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிறு தொடர்களைக் கூறச்செய்தோ, எழுதிவரச் செய்தோ, மதிப்பீடு செய்வர். 7-ம் வகுப்புக்கு 'சுத்தமான கைகள்’ என்ற தலைப்பில் சரியாகக் கை கழுவும் எளிய நான்கு படிநிலைகளை ஆசிரியர், மாணவர்களுக்கு செயல் விளக்கமாக செய்து காட்டுவதுடன், அவர்கள் அதனைப் பள்ளியில் பின்பற்றுகிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து மதிப்பிட வேண்டும்.

யோகா மற்றும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை மாணவர்கள் நாள்தோறும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக எளியமுறை உடற்பயிற்சிகளான கைப் பயிற்சி, கால் பயிற்சி, கண் பயிற்சி போன்றவற்றுடன் மூச்சுப் பயிற்சியையும் செய்ய வேண்டும். எளிய யோகாப் பயிற்சி செய்ய உணவு உட்கொண்டு குறைந்தது நான்கு மணி நேரம் ஆகியிருக்க வேண்டும் என்பதால், பள்ளிகளில் இந்தப் பயிற்சியினை பிற்பகல் 12 மணி முதல் 12.20 வரை செய்யலாம். யோகா பயிற்சி செய்தவுடன் உணவு உண்ணுதல் கூடாது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

இவற்றை மதிப்பிட வகுப்பு ஆசிரியர் மற்ற பாட ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து கிரேடுகளை வழங்கலாம்.

- ந.குழந்தைவேலு,
உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,
பி அக்ரஹாரம், தருமபுரி மாவட்டம்.

கலைகளும் விளையாட்டுகளும் !

மாணவர்கள் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் மரபு விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நிகழ்த்துக் கலைகள், கைவினைக் கலைகள் என நாட்டுப்புறக் கலைகள் இரு வகைப்படும். அவரவர் விருப்பம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடலாம். நிகழ்த்துக் கலைகளில் கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், புலியாட்டம் என வட்டாரத்துக்கு ஏற்ப ஆட்டங்களை உரிய ஒப்பனையுடன் நிகழ்த்தச் செய்து மதிப்பீடு செய்யலாம்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

இது நிகழ்த்துபவருக்கு மட்டும் இன்றி ஆசிரியர், மாணவர் ஆகியோருக்கும் மகிழ்ச்சி அளிக்கும். நிகழ்த்துக் கலைகளில் ஈடுபட விரும்பாத மாணவர்களுக்கு நிகழ்த்துக் கலைகளில் உள்ள பாடல்களைச் சேகரிக்கும் பொறுப்பு ஒப்படைப்பு அல்லது நிகழ்த்துக் கலைகளைப் பற்றிய படங்கள், செய்திகளைத் தொகுத்து அளிக்கும் ஒப்படைப்பு வழங்கலாம். இவற்றைக் கட்டாயப்படுத்தாமல் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப  ஒப்படைப்புகளை வழங்கலாம்.

கைவினைக் கலைகள்: களிமண் பொம்மைகள் செய்தல், கூடைமுடைதல், ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வீசும் பொருள்களைக்கொண்டு கலைப் பொருள்கள் செய்தல் (தேநீர் கோப்பை, உறிஞ்சு குழல், மருந்துக் குப்பிகள், பற்பசைக் குழாய்கள் போன்றவை) கோரை, பிரம்பு, கம்மந்தட்டை, சோளத் தட்டை, இலைகள், பூக்கள், நாணல், தென்னை ஓலை போன்ற இயற்கைப் பொருள்களில் கைவினைப் பொருள்கள் செய்யும் கலை கிராமத்து மாணவர்களுக்குக் கை வந்தது.

நகரத்து மாணவர்களுக்கு, களிமண்ணுக்குப் பதில் கோதுமை மாவினால் பொம்மைகள் செய்யும்படிக் கூறலாம். மெழுகுவத்தியை உருக்கி வார்ப்பு உருவங்கள் செய்தல், ஒயர் கூடை, மணிகளால் செய்யும் கலைப் பொருள்கள் உருவாக்குதல் என மாணவர்களின் திறமை, ஆர்வம் ஆகியவற்றுக்கு ஏற்பச் செயல்களைச் செய்யச் சொல்லலாம். போட்டிகளின் போது இத்தகைய ஒப்படைப்புகளைக் கொடுத்து, போட்டியில் பங்கேற்க ஊக்கப்படுத்தலாம்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

மரபு விளையாட்டுகள்: மரபு விளையாட்டுகள் குழந்தைகளிடம் தோழமை உணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, அச்சமின்மை, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறன், சமயோசித அறிவு போன்ற நற்பண்புகளை வளர்க்க உதவுகின்றன. எனவே, வணிக நோக்குடைய நவீன விளையாட்டுகளின் மோகத்தில் இருந்து நம் குழந்தைகளை மீட்டு எடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.

மரபு விளையாட்டுகளில் அவரவர் விரும்பும் விளையாட்டுகளை விளையாட வைத்தும், விளையாட்டுப் பாடல்களைப் பாடச் செய்தும் மதிப்பிடலாம். இதில் மாணவர்களுக்கு சடுகுடு, கள்ளன் காவலன், பம்பரம் போன்றவற்றையும், மாணவிகளுக்கு ஏழாங்காய், ஒருகுடம் தண்ணி ஊற்றி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளையும் விளையாடச் செய்தோ, விளையாட்டுப் பாடல்களை பாடவைத்துக் கேட்டோ மதிப்பிடலாம்.

- இரத்தின.புகழேந்தி, ஆசிரியர்,
அ.ஊ.ந.பள்ளி, மன்னம்பாடி.

இலக்கியமும் அறிவியலும் !

இலக்கியப் புலமையையும் அறிவியல் திறன்களையும் மாணவர்களிடம் பள்ளிப் பருவத்திலேயே வளர்க்க வேண்டும். இதற்கு இலக்கிய மன்றங்களும், அறிவியல் மன்றங்களும் துணைபுரிகின்றன.

மாணவர்கள் பாடப்பொருளில் திறன் பெறுவதுடன் அவர்களின் ஆர்வம், திறமை, ஈடுபாடு, தனித்துவம், ஒழுங்கு, தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றல்திறனை வெளிப்படுத்தவும், வளர்த்துக்கொள்ளவும் இவை பாட இணைச் செயல்பாடுகளாகப் பள்ளிகளில் உள்ளன.

மாணவர்களிடம் தலைப்பை ஒட்டிப் பேசுதல், விவாத மேடை, பட்டிமன்றம், வழக்காடுமன்றம், கவியரங்கம், கவிதை ஒப்புவித்தல், கதை சொல்லுதல், பாடல் ஒப்புவித்தல் ஆகியன மூலம் பேச்சு ஆற்றலை மேம்படுத்தலாம். கவிதை புனைதல், கட்டுரை எழுதுதல் போன்றவற்றின் மூலம் எழுத்து ஆற்றலையும், வினாடி வினா, புத்தகம் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் மூலம் பொது அறிவினையும் வளர்க்கலாம்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

இது தவிர நாடகங்கள், பாத்திரமேற்று நடித்தல், நூலகப் பயன்பாடு, நூல் விமரிசனம், சுவரொட்டி, விழிப்பு உணர்வு வாசகங்கள் தயாரித்தல் போன்றவற்றுக்கு வாய்ப்புக் கொடுத்து, மாணவர்களின் பன்முகத் திறனை வளர்க்கலாம்.

அறிவியல் மன்றங்களில் செயல்திட்டம், களப் பயணம், அறிவியல் கண்காட்சி, அறிவியல் வினாடி வினா, அறிவியல் அறிஞர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுதல், அறிவியல் செய்திகள் மற்றும்  கண்டுபிடிப்புகளைப் பற்றி விவாதித்தல் போன்றவற்றின் மூலம் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையினை ஆசிரியர்கள் வளர்க்கலாம்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

ஒவ்வொரு பருவ முடிவிலும் வகுப்பு ஆசிரியர், அனைத்து பாட ஆசிரியர்களையும் கலந்து ஆலோசித்து, மாணவர்களுக்கு தரநிலை வழங்குதல் வேண்டும்.

- த.சிங்காரவேலன்,
தருமபுரி.

சேவைகளில் ஈடுபடுவோம்!

கல்வி இணைச் செயல்பாடுகளில் சாரண - சாரணியர், ஜூனியர் ரெட் கிராஸ் போன்ற சேவை  அமைப்புகளின் பணி மிக முக்கியமானது.

தற்போதைய கல்வித் திட்டத்தில் கல்வி இணைச் செயல்பாடுகளில் மாணவர்களின்  திறன்களை அறிந்து மதிப்பிட வேண்டும். அதற்கு, சாரண ஆசிரியர்கள், ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களின் கருத்துகளையும் செய்முறைப் பதிவேடுகளையும் சோதித்து, அவர்களுக்குத் தர  மதிப்பீடு வழங்க வேண்டும்.

சாரணியத்தில் சேரும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளில் முக்கியமானவை:

சாரணிய இயக்கம் பற்றி தெரிந்திருத்தல்; சாரண உறுதிமொழி, சாரணச் சட்டம், சாரணக்  குறிக்கோள், சாரண அடையாளம், சாரண வணக்கம், இடது கை குலுக்கல், சரியான சாரணச் சீருடை அணிதல், தேசியக் கொடி மற்றும் சாரணக் கொடி பற்றி  தெரிந்து இருத்தல்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

சாரண நடைப் பயிற்சி, ஒழுங்கான அசைவுப் பயிற்சி அறிந்து இருப்பதோடு, முதலுதவி அறிந்து இருத்தல், பேண்டேஜ் முக்கோணக்  கட்டு, எலும்பு முறிவு, கீறல், முதலுதவிப் பயிற்சி தெரிந்து இருத்தல்.

வீட்டுக்குப் பயன்படக்கூடிய ஒரு முகாம் கருவி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், பூங்கா, வகுப்பு அறை, நீர்நிலை, பேருந்து நிலையம், ஏதாவது ஒரு பொது இடம் ஆகியவற்றைக் கவனித்து சுத்தமாக வைத்து இருத்தல்; கொசு, ஈக்கள் உற்பத்தி ஆகும் இடத்தைக் கண்டுபிடித்து  சுத்தப்படுத்துதல்.

நைன்னடைத்தை உள்ளவன் என்பதை சாரண ஆசிரியர், தலைமை  ஆசிரியர் திருப்தி அளிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல்; சாரண ஆசிரியர் அல்லது வழிகாட்டி ஆசிரியர் அமைக்கும் அணியுடன் சாரணப் பயிற்சித் திறனைப்  பயன்படுத்தி ஒரு மாத கால சேவையில் ஈடுபடுதல்.

இளம் செஞ்சிலுவைச் சங்கம்: ஒரு மாணவர்  ஜே.ஆர்.சி. கொள்கையில் ஆழ்ந்து இருக்கும்போது, அவருடைய செய்தி வெளிப்பாட்டுத் திறன், துணிந்து உரைத்தல், மறுத்து உரைத்தல், பகுத்து அறியும் திறன், தன்னை அறிதல், குழுப் பணி முதலானவற்றில் மேம்பாடு அடைகின்றார். சமுதாயச் செயல்பாடுகளில் தானே ஒரு முன் உதாரணமாக நடந்து, பிறருக்கு  எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து, 'என் கடன் பணி செய்வதே’ என்ற லட்சியத்தோடு ஈடுபடும் மாணவர்களுக்கு, கல்வி இணைச் செய்லபாடுகளில் அவர்களது செயல்பாடுகளுக்குத் தகுந்த தர  மதிப்பீட்டை ஆசிரியர்கள் நிர்ணயிக்க வேண்டும்.

விழிப்பு உணர்வுப் படைகள்!

செஞ்சுருள் சங்கம் (ஸிமீபீ ஸிவீதீதீஷீஸீ சிறீuதீ): பள்ளி மாணவர்கள் மூலம் சமுதாயத்தில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தன்னம்பிக்கையும், பொதுமக்களிடம் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்துவது இந்தச் சங்கத்தின் தலையாய பணி.

எய்ட்ஸ் கல்வி மட்டும் அல்லாது, மனநலம், உடல் நலம் பற்றியும் இந்தச் சங்கத்தைச் சார்ந்த  மாணவர்கள் சக மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். எய்ட்ஸ் எப்படிப் பரவும், எப்படிப் பரவாது என்பது பற்றிய விழிப்பு உணர்வை இவர்கள் ஏற்படுத்துவார்கள். எய்ட்ஸ்  நோய் பற்றிய துண்டுப் பிரசுரங்கள், அறிக்கைகள், புத்தகங்கள் ஆகியவற்றை மாவட்டச் சங்கத்திடம் பெற்றுப் பொது மக்களிடம் விநியோகித்து, விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை இவர்களது முக்கியப் பணிகளாகும்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

இத்தகைய செயல்பாடுகளைப் பதிவேட்டில் பதிவு செய்து, ஒருங்கிணைப்பாளரிடம் கையப்பம் பெற்று வகுப்பு ஆசிரியரிடம் சமர்ப்பித்து, கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு உண்டான தர மதிப்பீட்டை மாணவர்கள் பெற வேண்டும்.

தேசிய பசுமைப் படை: மத்திய, மாநில அரசுகளால் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பாக  செயல்படுத்தப்படுவது, தேசிய பசுமைப் படை அமைப்பு. இந்தத் திட்டத்தின் வாயிலாக அனைத்துப் பள்ளிகளிலும் சுற்றுச் சூழல், இயற்கை வளத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை  உயர்த்திடவும் வழிவகை செய்கிறது.

தேசிய பசுமைப் படை அமைப்பானது அனைத்துப் பொறுப்புகளையும் சீரான கண்காணிப்புடன்  மாணவர்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த அமைப்பின் கீழ் மாணவர்கள் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள்:

பைள்ளி வளாகத்தைப் பசுமைப் பூங்காவாக மாற்றுவதற்கு உதவுதல், பிற மாணவர்கள் மனதில் பசுமை எண்ணத்தை உருவாக்குதல்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

தைங்களது வகுப்பு அறை சுற்றுச்சூழல் மேம்படுவதற்கும் பள்ளி முழுமையும் செழுமை அடைவதற்கும் மரம், செடி கொடிகள், மரங்கள் ஆகியவற்றை வளர்த்தல்.

பைள்ளி வளாகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேவையற்ற குப்பைகளையும் களைச்செடிகளையும் களைந்து, பசுமைப் போர்வை உருவாக்குதல்.

தெருக்கள் மற்றும் சாலைகளில் மரங்களை நட்டுப் பராமரித்தல்

மாணவரிடையே சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்பு உணர்வுப் போட்டிகளை நடத்த உதவுதல்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் அதனால் விளையும் நன்மைகளைச் சமூகத்தின்  பல்வேறு அமைப்புகள் மற்றும் அங்கத்தினர் களுக்கு விளக்குதல்.

தினமும் காலை மாலை இரு வேளையும் தாவரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுதல், தாவரங்களைத் தொடர்ச்சியாகப் பராமரித்தல்.

இந்தச் செயல்பாடுகளை உற்று நோக்கி, பசுமைப் படை ஒருங்கிணைப்பாளரிடம் கலந்து  ஆலோசித்து, மாணவர்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டபின் அவர்களுக்கு உண்டான தர  மதிப்பீட்டை வகுப்பு ஆசியர்கள் வழங்க வேண்டும்.

- ஆ.நந்திவர்மன்,
ஆசிரியர்,
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழநி.

தனித்திறமை வளர்ப்போம்!

பாட இணைச் செயல்பாடுகளின் வழியாக மதிப்பிடப்படுவதில் குறிப்பிடத்தக்க விஷயம்,   மாணவர்களின் தனித்திறமை.

குறிப்பாக, பாடப்பொருளை ஒட்டி கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதை எடுத்துக்கொள்ளலாம். இது மாணவர்களின் படைப்பாற்றலை  மேம்படுத்த வழிவகுக்கிறது.

மாணவர்களின் வயது, வகுப்பு, திறமைக்கு ஏற்பக் காய்கறிகளின் அச்சுக்கள்கொண்டு உருவம்  செய்தல், ஓவியம் வரைதல், காகிதப் பூச்சாடி செய்தல், களிமண் உருவங்கள் செய்தல், பென்சில் துருவல் மற்றும் கம்பளி நூல் உருவங்கள் அமைத்தல், இலைகளில் பல்வேறு உருவங்கள் செய்தல், செய்தித்தாள்களை உருட்டி பொம்மைகள் செய்தல், நூல் இழுத்து அச்சிடல், முட்டை ஓடுகள், ஐஸ் குச்சிகள், காகிதக் கோப்பைகள், ஸ்பாஞ்ச் உருவம் அமைத்தல், கிழிந்த துணிகளில் தலையணை உறை, தலையணை, டஸ்டர் செய்தல், கதை  கூறல், நடித்தல் போன்ற செயல்பாடுகள் கொடுக்கலாம்.

கலக்கலாகச் செய்வோம்...கல்வி இணைச் செயல்பாடுகள் !

எங்கள் பள்ளியில் மாணவர்கள் தாங்கள் செய்த படைப்புகளைக்   கொண்டு, பருவ இறுதியில் அவரவர் வகுப்பு அறைகளில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வார்கள். அவற்றைப் பிற வகுப்பு மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். பின்பு 'ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட்’ என்ற கண்காட்சி பள்ளி அளவில்  ஏற்பாடு செய்யப்பட்டு, பிற பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பார்வையிட  அனுமதிக்கப்படுவர். இதன் மூலம், கண்காட்சியில் பங்குகொண்ட மாணவர்களின் படைப்புகள்  பாராட்டப்பட்டு, அவர்களின் தனித் திறமைக்கும் ஊக்கம் கிடைக்கிறது.

மாணவர்களிடம் உள்ள கலைத் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை வளர்ப்பதற்கும் ஆசிரியர்கள் துணைபுரிதல் வேண்டும். ஆடுதல், பாடுதல், நடித்தல்,  ஓவியம் வரைதல், கதை எழுதுதல் முதலானவற்றை  ஊக்குவிக்க வேண்டும்.

மாணவர்களின் தனித் திறமையை வளர்ப்பதற்கான செயல்பாடுகளை வழங்கும் போது, உள்ளூரிலும் வீட்டிலும் கிடைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டே படைப்புகளை உருவாக்க வழிகாட்டுதல்களை வழங்கவேண்டியது அவசியம்.

- க.சரவணன், தலைமை ஆசிரியர்,
டாக்டர். டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.

தொகுப்பு: சரா
படங்கள்: க.ரமேஷ்  ஓவியங்கள்: சூர்யா  
மாடல்கள்: கிரேஸ் ஸ்கூல் சுட்டிகள், பவானி.

வணக்கம்.

தமிழகப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள சி.சி.இ. முறைக்கு, எஃப்.ஏ. பக்கங்கள் மூலம் சுட்டி விகடன் தொடர்ந்து உறுதுணையாக இருப்பதை அறிவீர்கள்.

'இந்த மதிப்பீட்டு முறையில், ஒவ்வொரு மாணவரின் திறமைக்கும் தனித்தன்மைக்கும் வகை செய்யும் 'கல்வி இணைச் செயல்பாடுகள்’ குறித்து விரிவாக மாணவர்கள் அறியவும், ஆசிரியர்களின் புரிதல்களை மேலும் செம்மையாக்கவும் ஏதாவது செய்யலாமே’ என்று ஆசிரியர்கள் சிலர் கேட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, அக்கறையும் அர்ப்பணிப்பும் மிக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இந்தக் குட்டிப் புத்தகம் உருவாகி இருக்கிறது.

இங்கு ஒரு விஷயத்தை மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எஃப்.ஏ, எஸ்.ஏ. பகுதியை உள்ளடக்கிய கல்வி சார் செயல்பாடுகளில் ஒரு மாணவர் பெறும் கிரேடுக்கும், கல்வி இணைச் செயல்பாடுகளில் அந்த மாணவர் பெறும் கிரேடுக்கும் சம்பந்தம் இல்லை. அதாவது, ஒரு மாணவர் வழக்கமான தேர்வுகளில் அசத்த முடியாமல் போனாலும்கூட, கல்வி இணைச் செயல்பாடுகளில் 'ஏ’ கிரேடு பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்த முடியும்.

கல்வி இணைச் செயல்பாடுகளை மாணவர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், ஆசிரியர்கள் கூடுதல் 'டிப்ஸ்’ பெறவும் இந்தப் புத்தகவும் உதவும்.

வாழ்த்துகள்!
அன்புடன்,
ஆசிரியர்