FA பக்கங்கள்
Published:Updated:

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

அதிசய பட்டாம்பூச்சிகள்!

##~##

வரிக்குதிரையையும் ஆந்தையையும்  அனைவருக்கும் தெரியும். ஆனால், பட்டாம்பூச்சிகளில் வரிக்குதிரைப் பட்டாம்பூச்சி, ஆந்தைப் பட்டாம்பூச்சி என இருப்பது தெரியுமா?

ஆந்தைப் பட்டாம்பூச்சியின் சிறகுகளில் ஆந்தையின் கண் போன்ற வடிவம் இருக்கும்.  இவை செடியில் அமர்ந்திருந்தால், ஆந்தை என நினைத்துக்கொண்டு மற்ற பறவைகள் பயந்து நெருங்காது. வரிக்குதிரைப் பட்டாம்பூச்சியின் உடலில் வரிக்குதிரையைப் போலவே கோடுகள் இருக்கும்.

சுட்டி நியூஸ்

சுருளும் சூப்பர் மொபைல்!

நாம் காலையில் எழுந்ததும் படுத்திருந்த பாயைச் சுருட்டுவோம். இனி, இரவில் படுக்கும் முன் போனையும் சுருட்டிவைக்கலாம்.

சுட்டி நியூஸ்

சாம்சங் நிறுவனம் புதிதாக தயாரித்திருக்கும் யோம் (ஹ்ஷீuனீ) என்ற செல்போனில்தான் இந்த வசதி. 7.5 செ.மீ. நீளம்கொண்ட இந்த போனை சமீபத்தில் கலிஃபோர்னியாவில் அறிமுகப்படுத்தினார்கள்.

 கடல் விமானம்!

தண்ணீரிலும் வானத்திலும் இயங்கும்  விமானத்துக்கு ஸீபிளேன் என்று பெயர்.கப்பலில் உள்ள பயணிகளை விமானம் மூலம் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்ல இது பயன்படும். வெளிநாடுகளில் புகழ்பெற்ற இந்த விமானம், இந்தியாவில் முதல்முறையாக கேரள மாநில சுற்றுலாத் துறை சார்பில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஸ்தமுடி ஏரியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சுட்டி நியூஸ்

மேரி பிஸ்கட்!

தேநீர் என்றதும் அதனுடன் பலருக்கும் நினைவுக்குவருவது மேரி பிஸ்கட். இந்தியாவில் மட்டுமல்ல... பல நாடுகளிலும் மேரி வகை பிஸ்கெட் பிரபலம். இதன் வரலாறைத் தெரிந்துகொள்வோமா?

சுட்டி நியூஸ்

மேரி பிஸ்கட், லண்டன் பேக்கரியில் 1874-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ரஷ்யாவில் வசித்த மரியா அலெக்ஸாண்டியோவ்னா என்பவரின் திருமணத்தில் கேக்குக்குப் பதிலாக பரிமாறப்பட்டது. ஐரோப்பாவின் பொருளாதார நிலை சரிந்திருந்தபோது, அங்கே அதிகம் உற்பத்தியான பயிர் கோதுமை. அப்போது கோதுமையால் செய்யப்பட்ட  பிஸ்கட்தான் இந்த மேரி. இந்த பிஸ்கட்டால்  பொருளாதாரம் உயர்ந்தது.

பவழத் தீவு!

சுட்டி நியூஸ்

தண்ணீரால் சூழப்பட்ட ஒரு பகுதியைத் தீவு என்போம். சில தீவுகள் விசித்திரமான சில விலங்குகளால் உருவாக்கப்படுகின்றன. சுத்தமான மற்றும் ஆழமற்ற உப்புத் தண்ணீரில், மிதமான வெப்பநிலை உள்ள இடங்களில் வாழும் விலங்குகளுக்கு தலையும் காலும் இருக்காது. அவற்றை 'பாலிப்ஸ்’ என்பார்கள். இவை சேர்த்துவைக்கும் கால்சியம், பவழப் பாறைகளுடன் கலந்துவிடும். இந்த முறை தொடர்ந்து நடைபெறும்போது, ஒரு புதிய தீவு உண்டாகும். நிலநடுக்கோட்டின் இரு பக்கங்களிலும் உள்ள வெப்ப மண்டலக் கடலில், இந்தப் பவழத் தீவுகள் காணப்படும். ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில், இந்தத் தீவுகள் அதிகம். பெர்முடாஸ் மற்றும் பேகம்ஸ் என்ற இரண்டு பவழத் தீவுகள் மிக அழகானவை. இவற்றைக் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் பவழத் தீவுகளுக்கு விரும்பிச் செல்கிறார்கள்.

கண்ணாடிப் பாம்பு!

கண்ணாடியைப் போல பளபளப்பான உடலைக்கொண்ட பாம்பு இனம் ஆசியா,  இந்தோனேஷியா, அமெரிக்காவில் உள்ளன. அதை அடித்தால், இரு துண்டுகளாக உடைந்துவிடும். அப்படி உடைவதனால் பாம்பு இறந்து விடுவதில்லை. மாறாக, உடைந்த பகுதி மீண்டும் வளர்ந்துவிடும்.

சுட்டி நியூஸ்

பூபி என்னும் பறவையின் இரை, மீன்தான். ஆனால், அது மீனைத் தின்பதை யாரும் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால், அது நீருக்குள் மூழ்கி, நீருக்குள்ளேயே மீனை விழுங்கி விடும்.