FA பக்கங்கள்
Published:Updated:

மொழியும் குரங்கிலிருந்தே தோன்றியது !

மொழியும் குரங்கிலிருந்தே தோன்றியது !

மொழியும் குரங்கிலிருந்தே தோன்றியது !

##~##

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற கருத்து நம் எல்லோருக்கும் தெரியும். 'மனிதன் மட்டுமல்ல... அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தது’ என்கிறது ஒரு புதிய ஆய்வு.

எத்தியோப்பிய காடுகளில் வசிக்கும் பபூன் வகை குரங்குகளில் ஒரு பிரிவு, கெலாடா குரங்குகள். குரங்குகளிலேயே மிகவும் சிக்கலானதாகக் கருதப்படும் கெலடா குரங்கின் ஒலிகள், மனிதர்களின் பேச்சு ஒலிகளின் அம்சங்களுக்கு மிகவும் நெருங்கிவருகிறது.

கிப்பன்ஸ், சிம்பன்சி உள்ளிட்ட பெரும்பான்மைக் குரங்குகள் வெறும் அடிப்படை ஒலிகளை மட்டுமே எழுப்பவல்லவை. ஆனால், கெலெடா குரங்குகளின் வித்தியாசமான ஒலிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, மனிதர்களின் வாய்மொழி ஒலிகளின் பொதுவான ஒலி வடிவங்களோடு மிகவும் நெருங்கி இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். மனிதர்கள் பேசும்போது தாடையும், உதடும், நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து இயங்குவதைப் போலவே, இந்த கெலடா குரங்குகள் ஒலி எழுப்பும்போது அவற்றின் தாடைகள், உதடுகள் மற்றும் நாக்கு ஆகியவை ஒரே நேரத்தில் சேர்ந்து இயங்குகிறதாம்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் முனைவர் தோர் பெர்கம், ''மனிதர்களின் பேச்சு வடிவத்தின் ஆரம்பக் கட்ட ஒலிகள், இந்தக் கெலடா குரங்குகளின் ஒலிகளுடன் நெருக்கமாக உள்ளது'' என்கிறார். அவர் தங்களின் ஆய்வின் அடுத்தக் கட்டமாக, கெலடா குரங்குகளின் ஒலிகளுக்குக் குறிப்பாக அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்பதை ஆராய இருக்கிறார்.

மொழியும் குரங்கிலிருந்தே தோன்றியது !

மனிதர்கள் குழுக்களாக வாழும்போது, ஒருவர் மற்றவருடன் நெருக்கமாவதற்கு தங்களின் பேச்சைப் பயன்படுத்துவதைப் போலவே, பெருங்கூட்டமாக வாழும் இந்தக் கெலடா குரங்குகளும் தங்களுக்குள் ஒன்றோடொன்று நெருக்கமாவதற்கு வாயலிகளைப் பயன்படுத்துவதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ஆக, நமக்குப் பேசக் கற்றுத்தந்ததும் நம்ம குரங்கு நண்பர்கள்தான்!

 - ராகுல் இளங்கோ (XI).
தொன் போஸ்கோ பள்ளி, தஞ்சாவூர்.

புதிர்களை விடுவிக்கும் சிம்பன்சிகள் !

மனிதர்களுக்கும் சிம்பன்சி குரங்குகளும் பல ஒற்றுமைகள் இருப்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில், மனிதர்களைப் போலவே சிம்பன்சிகளும் புதிர்களை விடுவிக்க ஆசைப்படுகின்றன. அதில் மனநிறைவும் அடைகின்றன என்று தெரியவந்திருக்கிறது.

இங்கிலாந்தின் விப்ஸ்னேட் விலங்குகள் காட்சியகத்தில் உள்ள 6 சிம்பன்சிகளிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் குரங்குகளுக்கு ஒரு புதிர் அளிக்கப்பட்டது. நிறையக் குழாய் வழிகள் இணைந்த அந்தப் புதிரில், சரியான பாதையில் தாயக்கட்டையை நகர்த்திச்சென்று, இறுதியில் வெளியேறும் இடத்தை அடைய வேண்டும். குச்சிகளால் தாயக்கட்டையைச் சரியான வழியில் தட்டித்தட்டிச் சென்றால்தான் இதில் வெல்ல முடியும்.

சிம்பன்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட புதிர் அமைப்பில் தாயக்கட்டைகளுக்குப் பதில், சுவையான கொட்டை வகை பருப்புகள் கொடுக்கப்பட்டன. அந்தப் பருப்புகளை சிம்பன்சிகள் சரியான இடத்துக்குக் கொண்டுசென்றுவிட்டால், அவற்றுக்கு அதுவே பரிசு. ஆனால், பருப்புகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் புதிரைத் தீர்ப்பதில் சிம்பன்சிகள் மிகவும் ஆர்வம் காட்டின.

மொழியும் குரங்கிலிருந்தே தோன்றியது !

''மனிதர்கள், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டை ஒரு மனநிறைவுக்காக ஆடுவதைப் போலவே, சிம்பன்சிகளும் செய்கின்றன'' என்கிறார் ஆய்வாளர் பே கிளார்க்.

ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட சிம்பன்சிகளில் நான்கு ஆண் குரங்குகள், இரண்டு பெண் குரங்குகள் இருந்தன. அவை அப்பா, அம்மா, மகன் எனக் குடும்பப் பின்னணியைக் கொண்டவை. எனவே, ஒன்றை ஒன்று அறிந்திருந்தால், அவற்றால் இயல்பாக ஒன்றிணைந்து புதிரைத் தீர்க்க முடிந்தது. முக்கியமான விஷயம், இந்தப் புதிருக்கு எப்படித் தீர்வு காண்பது என்று இந்த சிம்பன்சிகளுக்கு எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை!

மொழியும் குரங்கிலிருந்தே தோன்றியது !