FA பக்கங்கள்
Published:Updated:

விண்ணைத் தொடும் வண்ண ஓவியங்கள் !

விண்ணைத் தொடும் வண்ண ஓவியங்கள் !

விண்ணைத் தொடும் வண்ண ஓவியங்கள் !
##~##

நாசா விண்வெளி மையம் நடத்திய ஓவியப் போட்டியில் சாதனை படைத்திருக்கிறார்கள் சென்னை சுட்டிகள்.

நாசா விண்வெளி மையம் வருகிற நவம்பர்-18 அன்று 'மாவென்’ எனும் விண்கலத்தை செவ்வாய் கோளுக்கு அனுப்பப்போகிறது. மாவென் விண்கலத்துக்கான லோகோ வரையும் வாய்ப்பை உலகம் முழுவதும் இருக்கும் சுட்டிகளுக்குத் தரும் விதமாக ஓவியப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில், ‘I am going to mars with maven’ என்பதை அடிப்படையாகவைத்து வரைய வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்தச் செய்தி பலருக்குத் தெரியாதபோதும், ஈஷோன் இந்தியா எனும் கம்பெனி பல பள்ளிகளை ஒருங்கிணைத்து, சுட்டிகளை இந்தப் போட்டியில் கலந்துகொள்ளச் செய்தது. ''பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டது எங்களுக்கு உத்வேகத்தை அளித்தது'' என்கிறார் 'ஈஷோன் இந்தியா’ ஹஃபிஸ் கான்.

உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஓவியங்களில்... 377 ஓவியங்களை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் வாக்கெடுப்புக்கு விட்டதில், 8,651 வாக்குகள் பெற்று உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது, சென்னை ஆழ்வார் திருநகர் லா-சாட் லைன் ஜூனியர் காலேஜில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மோகன பூரணி.

விண்ணைத் தொடும் வண்ண ஓவியங்கள் !

''மாடலாக ஒன்றைப் பார்த்து வரைவதைவிட நானாக யோசித்து வரைவதுதான் எனக்கு ஈஸியாக இருக்கு'' என்கிறார் மோகன பூரணி.

பள்ளிகளுக்கான சிறப்பு விருதைப் பெற்றிருக்கும் ராகவன், சென்னை ராமாபுரம் அசிசி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். இந்திய நாட்டுக் கொடியோடு விண்வெளிப் பயணி, நிலா, நட்சத்திரங்கள் என வண்ணமயமாக வரைந்திருக்கும் ராகவன், ''விடுமுறை நாட்களில் நடக்கும் ஓவிய வகுப்புக்குத் தான் சென்றிருக்கிறேன். இந்த ஓவியப் போட்டி பற்றித் தெரிந்ததும் அன்று இரவே வரைந்து முடித்த பின்புதான் தூக்கமே வந்தது'' என்கிறார்.

மாவென் பிரின்சிபல் இன்வெஸ்டி கேட்டர்ஸ் சாய்ஸ்(MAVEN Principal Investigator’s Choice)   விருது சென்னை, மாடம்பாக்கம் சீயோன் மெட்ரி குலேஷனில் 9-வது படிக்கும் நித்யஸ்ரீக்கு கிடைத்திருக்கிறது. இவரது ஓவியம் ‘I am going to mars with maven’ எனும் வாக்கியத்தைவைத்து அந்த எழுத்துகள் மூலம் ஒரு கதை சொல்வதைப்போல் வரைந்திருந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார், போட்டியின் ஒருங்கிணைப் பாளர் சுலைமான்.

விண்ணைத் தொடும் வண்ண ஓவியங்கள் !

''கூகுள் இணையதளத்தில் பெயர் டிசைனை அடிக்கடி மாற்றுவதைப் பார்த்துதான் எனக்கு இந்த ஐடியா வந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் காட்சியாகவும் பொருள் தர வேண்டும் என்பதற்காக விண்வெளி தொடர்பாக நிறையப் படித்தேன். ’ என்கிறார் நித்யஸ்ரீ.

இவர்களின் ஓவியத் திறமை வருங்காலத்தில் விண்ணைத் தாண்டியும் புகழ்பெற வாழ்த்துவோம்!