துனித் துளியாய்...
##~## |
அஞ்சலகத்தில் பணம் சேமிக்கும் முறைகள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதையடுத்து, சுட்டிகள் சேமிப்பதற்குச் சிறந்த இடம் வங்கிகள்தான். இப்போதைய சூழலில், வங்கிகளில் சுட்டிகள் சேமிப்புக் கணக்கு தொடங்குவது மிகவும் எளிது.

உங்கள் பெற்றோரின் வங்கியிலேயே நீங்களும் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கலாம். உங்கள் புகைப்படம், பள்ளி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் புகைப்படம் போன்ற ஆவணங்கள் கேட்பார்கள். இவை வங்கிக்கு வங்கி மாறுபடும்.
வங்கியில் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்தால், உங்களுக்கென்று சொந்தமாக பாஸ்புக், செக்புக், ஏ.டி.எம். கார்டு எல்லாமே தருவார்கள். உண்டியலில் சேர்த்துவைத்த காசை எடுத்துச்சென்று, வங்கியில் நீங்களே படிவத்தை நிரப்பி, வரிசையில் நின்று கட்டலாம். உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் வங்கி ஊழியர்கள் பொறுப்புடன் பதில் சொல்வார்கள். அவர்களிடம் நீங்கள் இயல்பாகப் பேசத் தொடங்குவீர்கள். அங்கே நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் புரிய ஆரம்பிக்கும். உங்கள் ஆளுமையும் மேம்படும்.
சுட்டிகளின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் சிறப்பு மாதாந்திரத் திட்டங்கள் குறித்து அந்த வங்கியின் பொது மேலாளர் எஸ்.செல்வன் ராஜதுரை விரிவாகப் பேசினார்.
''தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 'கிட்ஸ் ஆர்.டி.' என்ற சுட்டிகளுக்கான மாதாந்திரச் சேமிப்புத் திட்டத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையைத் தேர்வுசெய்து, ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை மாதத் தவணையாகச் செலுத்தி, முதிர்வுத் தொகையைப் பெறலாம். சுட்டிகள் மாதந்தோறும் சேமிக்கும் தொகைக்கு ஏற்ப, தங்களது திட்டத்தைத் தேர்வுசெய்துகொள்ளலாம். அதற்கான அட்டவணை இதோ...
இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தவணைத் தொகையை, அதன் மடங்குகளிலும் செலுத்தி, அதற்கேற்ற முதிர்வுத் தொகையைத் தேர்வுசெய்து, அதற்கான மாதத் தவணையைக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்கும் தொகை, மேற்படிப்புக்கு உதவியாக இருக்கும். உதாரணமாக, ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சுட்டி, மாதத் தவணையாக

855 செலுத்தும் 7 ஆண்டுகள் திட்டத்தில் சேரலாம். அதன்மூலம், அந்தச் சுட்டி ப்ளஸ் டூ முடிக்கும்போது,

1 லட்சம் முதிர்வுத் தொகை கிடைக்கும்.

சுட்டிகள் மற்றும் பெற்றோர் பெயரிலேயே தொடங்கப்படும் இந்தத் திட்டங்களில் சேருபவர்களுக்கு, வருமானவரி பிடித்தம் கிடையாது. வாரிசு நியமன வசதி, கணக்கை இடையில் முறித்துக்கொள்ளும் வசதி மற்றும் கடன் வசதி உண்டு. தவணைத் தொகையை மற்ற கிளைகளிலும் செலுத்தும் வசதியும் உள்ளது.

இவை மட்டுமின்றி,

10 ஆயிரம் செலுத்தினால், 5 ஆண்டுகளில்

15,797 கிடைக்கும் 'முத்துக் குவியல் டெபாசிட் திட்டம்’, உங்கள் சேமிப்பு 93 மாதம் 14 நாட்களில் இரட்டிப்பாகும் 'டி.எம்.பி. டபுள் திட்டம்’, மாணவர்களுக்கான சிறப்பு சேமிப்புத் திட்டம், 'நவரத்தின மாலா’ என்ற மாதத் தவணை மற்றும் நீண்டகால வைப்புத் திட்டம் முதலானவையும் உள்ளன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற, வங்கியின் இலவசத் தகவல் மையத்தின் 18004250426 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். அல்லது ஷ்ஷ்ஷ்.tனீதீ.வீஸீ என்ற வலைத்தளத்தை நாடலாம்'' என்றார் செல்வன் ராஜதுரை.