ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !
##~##

அமெரிக்காவைச் சேர்ந்த 64 வயது நீச்சல் வீராங்கனை டயானா நியாட் (Diana Nyad)கியூபாவிலிருந்து அமெரிக்காவின் ஃப்ளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தைக் கடலில் நீந்திச் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் கியூபாவில் இருந்து அமெரிக்காவை நீந்திக் கடந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 53 மணி நேரம் தொடர் நீச்சலில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார் நியாட். கடலில் நீந்துகிறபோது, சுறா மற்றும் ஜெல்லி மீன்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, சிலிகான் முகக் கவசமும் கைகால்களுக்கு பாதுகாப்பு உறைகளும் அணிந்திருந்தார். இந்தச் சாதனைக்காக நீந்தும்போது, உணவு மற்றும் ஓய்வுக்காக 40 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டார். 1978-ம் ஆண்டு முதல் நான்கு முறை முயற்சித்து தோல்வியைத் தழுவிய டயானா நியாட்டை, இப்போது வெற்றி தேவதை தழுவிக்கொண்டாள்.

பென் டிரைவ் !

 இங்கிலாந்து நாட்டின் 'ப்ருன்வில்லி’ நகருக்கு அருகே உள்ள கடற்கரையில், சாக்லேட் கோட்டை ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். 90 ஆயிரம் சாக்லேட் துண்டுகள் மற்றும் 20 கிலோ ஐஸ் சர்க்கரை ஆகியவற்றை செங்கற்களைப் போல அடுக்கி, இந்த சாக்லேட் கோட்டையை வடிவமைத்திருக்கிறார்கள். இது 10 அடிகள் உயரம் கொண்டது. வார விடுமுறை தினத்தைக் கழிக்க வரும் பார்வையாளர்களை இது வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

பென் டிரைவ் !

தரையில் அதிவேகமாகச் செல்லக்கூடிய கார் தயாரிப்பில் இறங்கியுள்ளனர், 'ப்ளட்ஹவுண்ட்’  குழுவினர். ராக்கெட் வடிவில் தயாராகும் இந்த கார், 'உலகிலேயே தரையில் அதிவேகமாகச் செல்லும் கார்’ என்ற பெயரைப் பெறும் என்கிறார்கள். இதில் மற்றொரு சிறப்பு, இந்த கார் தயாரிப்பில் பெவர்லி சிங் என்கிற இளம் பெண் பொறியாளர் ஒருவரும் இடம்பெறப்போகிறார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான இவருக்கு வயது 29. பெவர்லி சிங், இன்னும் சில தினங்களில் இங்கிலாந்தில் உள்ள ப்ளட்ஹவுண்ட் கார் வடிவமைப்புக் குழுவில் இணைந்து செயல்பட உள்ளார்.

பென் டிரைவ் !