ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

சென்னையில் செவ்வாய் விஞ்ஞானி!

க.பிரபாகரன் த.ரூபேந்தர்

##~##

''இயற்கையைக் காப்பாற்ற முடிந்தால், பூமியில் வாழ்வோம். இல்லையேல், பூமியைவிட்டு வேறு கிரகத்துக்குச் சென்றுவிடுவோம். நாம் இல்லாமல் பூமியாவது நிம்மதியாக இருக்கும்'' என்று சுற்றுச்சூழல் பற்றி அக்கறையுடன் பேசும் ரட்சன் ரவிச்சந்திரன், 'தமிழ்நாடு இளம் விஞ்ஞானி’ விருதைப் பெற்றிருக்கிறார்.

சென்னை, பம்மலில் உள்ள ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார் ரட்சன். 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு, தமிழ்நாட்டின் 350 பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்திய, 'Young Scientist Tamilnadu- 2013' என்ற போட்டியில் வெற்றிபெற்று அமெரிக்காவுக்குச் சென்று வந்திருக்கிறார்.

சென்னையில்  செவ்வாய் விஞ்ஞானி!

''மருத்துவம், வானவியல், சுற்றுச்சூழலியல், ரோபாட்டிக்ஸ் என்று நடந்த நான்கு பிரிவுகளில் நான் வானவியலைத் தேர்ந்தெடுத்தேன். செவ்வாயில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனால், அங்கே வாழ்வதற்குத் தேவையான வெளிச்சம் இல்லை. அதற்கான விடைதான், 'செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியும்’ என்ற என்னுடைய ஆய்வுக் கட்டுரை'' என்கிறார்.

சென்னையில்  செவ்வாய் விஞ்ஞானி!

அமெரிக்க அறிஞர்கள், மரத்தின் ஜீன் மற்றும் மின்மினிப் பூச்சியின் ஜீனை உயிரித் தொழில்நுட்பம் என்ற முறையில், ரீகாம்பினன்ட் டி.என்.ஏ. உருவாக்கி, அதன் மூலம் ஹைட்ரோ போனிக்ஸ் என்ற விவசாய முறையில் உருவாக்கும் விதையைச் செவ்வாயில் பயிரிடலாம் என்று கண்டறிந்துள்ளனர். அதையே முன்னுதாரணமாகக் கொண்டு, 'எலெக்ட்ரிக் ஈல்' என்ற மீனின் ஜீன் மற்றும் மரத்தின் ஜீனை இணைப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்திசெய்யலாம்.'' என்கிறார் இவர்.

'இயற்கையின் பிரமாண்டத்துக்கு முன்பு நாம் சிறு புள்ளிதான்' என்ற ரட்சன், அமெரிக்காவில் பயோடெக்னாலஜி படிக்க வேண்டும் என்ற லட்சிய  முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்.