என்.மல்லிகார்ஜுனா
##~## |
இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் காட்சிகளைப் பார்த்ததும் இந்த இடங்களுக்கு நேரில் சென்று ரசிக்கத் தோன்றுகிறதா?

அது முடியாது. ஏனெனில், இவை எல்லாமே உணவுப் பொருட்களால் உருவாக்கப்பட்டவை. இப்படி தத்ரூபமாக உருவாக்கியவர், லண்டனைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர், கார்ல் வார்னர்.
ரொட்டித் துண்டுகளை மலைகள் போலவும், இலைகளோடு இருக்கும் முட்டைக்கோஸ்களைப் பெரிய மரங்களாகவும், வெள்ளரிக்காய்களை மரங்களின் கிளைகளாகவும் மேஜை மீது வைத்து, பின்னணியில் வானத்தின் புகைப்படம் ஒன்றை வைத்து கேமராவில் படம் பிடித்துள்ளார் வார்னர்.
இப்படி தாஜ்மகால், பிரமிடு, லண்டன் மாநகர், சீனப் பெருஞ்சுவர் என ஒவ்வொன்றுக்கும் ஏற்ற வகையில் உணவுப் பொருட்களைத் தேர்வுசெய்து, அதனை அழகாக செதுக்கி, இப்படி நம் கண்களுக்கு விருந்து படைக்கிறார் கார்ல் வார்னர்.
