ஸ்பெஷல் 1
Published:Updated:

ஹலோ, ஜாக்கிரதை !

ஹலோ, ஜாக்கிரதை !

வாசகிகள் பக்கம்

'மிஸ்டு கால்'களை மிதியுங்கள்!

ஹலோ, ஜாக்கிரதை !
##~##

நான், மும்பையில் வசிக்கும் நடுத்தர குடும்பத்துப் பெண். கல்லூரியில் சேர்த்தபோது செல்போன் வாங்கிக் கொடுத்தார் அப்பா. 'மிஸ்டு கால்'களிடம் பேசுவது, மெசேஜ் அனுப்புவது என்று ஜாலியாக பொழுதுபோக்கிக் கொண்டிருந்தேன். மிஸ்டு கால் ஆண் நபருடன் நட்பு ஏற்பட, நேரில் சந்தித்து, போட்டோவெல்லாம் கூட எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு, தன் கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்த அந்த நபர், 'இன்டர் நெட்டில் உன் போன் நம்பர், படம் எல்லாவற்றையும் போடுவேன்' என்று மிரட்டி, தன் வலையில் என்னை விழ வைக்க முயற்சித்தார். நான் பணியாததால், போட்டோ மற்றும் போன் நம்பரை 'ஆர்குட்' இணைய தளத்தில் வலம் வரச் செய்துவிட்டார். அவமானம் தாங்காமல் குடும்பமே தற்போது வேறு ஊருக்கு வண்டியேறிவிட, தனி மரமாக ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறேன்.

தோழிகளே... மிஸ்டுகால், அறிமுகமில்லாத நபரின் எஸ்.எம்.எஸ். போன்றவற்றை அலட்சியம் செய்யுங்கள். அக்கறை காட்டினால்... அருமையான குடும்பத்தை மிஸ் பண்ண வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!

- டீன் ஏஜ் அபலைப் பெண்

வயிற்றில் அடிக்கும் சீட்டு கம்பெனி!

மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான், பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் சீட்டில் சேர்ந்து, மாதம்

ஹலோ, ஜாக்கிரதை !

2,500 வீதம் கட்டி வந்தேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, பொருளாதார நெருக்கடி காரணமாக கட்ட முடியவில்லை. சீட்டிலிருந்து விலக நினைத்தபோது, 'ஐந்தாயிரம் கழித்துக் கொண்டுதான் கொடுப்போம்' என்றார்கள். கட்டிய

ஹலோ, ஜாக்கிரதை !

12,500-ல் 5,000 போனால்,

ஹலோ, ஜாக்கிரதை !

7,500 ரூபாய்தான் கிடைக்கும். ''எப்படியும் என் சீட்டில் இன்னொருவர் தொடரப் போகிறார். பிறகு ஏன் இந்த அளவுக்கு அபராதம்?'' என்றால், ''அதுதான் எங்க விதிமுறை!'' என்றார்கள். மாதா மாதம் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேமித்த பணத்தை இழந்தது, அத்தனை வேதனையாக இருந்தது.

சின்னச் சின்ன சீட்டு கம்பெனிகள் ஒரேயடியாக மோசடி செய்கிறார்கள் என்றால், பிரபல நிதி நிறுவனங்களும் இப்படியா கொள்ளையடிப்பது?

- பணத்தை இழந்த பரிதாப ஜீவன்

இப்படி உங்களுக்கும் ஏதாவது அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதை எல்லாம் இங்கே இறக்கி வையுங்கள். அது, உங்கள் மனபாரத்தை இறக்கி வைப்பதோடு, மற்ற தோழிகளுக்கு எச்சரிக்கையாகவும்

அமையப்போகிறது.! உங்கள் அடையாளங்கள் எதையுமே நீங்கள் தரத் தேவையில்லை. ரகசியத்துக்கு நாங்கள் 100% கியாரன்டி! உடனே, உங்கள் செல்போனிலிருந்து  04442890003 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள். நினைவிருக்கட்டும்... இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.

 வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.