FA பக்கங்கள்
Published:Updated:

கிருமிகளுக்கு டிஷ்ஷூம் டிஷ்ஷூம்!

அ.பார்வதி படஙகள் :எஸ்.கேசவ சுதன்,தமிழ்,

##~##

''பொதுவாகவே, நம் நாட்டில் கழிப்பறை சுத்தம் பற்றிய விழிப்பு உணர்வு ரொம்பக் குறைவு. அதைப் பற்றி பேசுறதுகூட ஏதோ வேண்டாத விஷயமா நினைக்கிறாங்க. ஆனா, உணவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு கழிப்பறை சுத்தத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும். அதுக்காக, நான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சிருக்கேன்'' என்கிறார் த்ரவிதா.

சென்னை, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார் த்ரவிதா. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறையில் கிருமிகள் பரவாமல் தூய்மையாக இருக்க, மிக எளிமையான வழிமுறை ஒன்றை இவர் உருவாக்கியிருக்கிறார்.

'அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் ஓன்றை எடுத்துக்கங்க. கீழே இருந்து இரண்டு இன்ச் உயரத்தில் சின்னத் துளை ஒன்றைப் போடுங்க. அந்தப் பாட்டிலில் 'ஃபினாயில்’  நிரப்பி, டாய்லெட் ஃப்ளஷ் டாங்க் உள்ளே வைங்க. ஒவ்வொரு முறையும் டாங்க் ஃப்ளஷ் ஆகும்போது, ஃபினாயில் பாட்டிலிலிருந்து டாங்க் உள்ளே கொஞ்சம் கொஞ்சமா விழும். பாட்டிலில் ஓட்டை போட்ட இடம்வரை டாங்க் நீர் நிரம்பினதும் பாட்டிலிலிருந்து ஃபினாயில் வெளியே வர்றது நின்னுடும்.

கிருமிகளுக்கு டிஷ்ஷூம் டிஷ்ஷூம்!

அதே நேரம், ஒவ்வொரு முறையும் ஃப்ளஷ் பண்ணும்போதும் கொஞ்சமாக ஃபினாயில் கலந்த தண்ணீர் டாய்லெட்டில் வரும். எப்பவும் டாய்லெட் ஃபினாயில் வாசத்தோட இருக்கும்; கிருமிகள் சேராது. அது மட்டுமா? இந்த அரை லிட்டர் பாட்டிலால், ஒவ்வொரு ஃப்ளஷ்ஷ§க்கும் அரை லிட்டர் தண்ணி மிச்சமாகும். எப்படின்னா... அரை லிட்டர் தண்ணி இருக்க வேண்டிய இடத்தை, ஃபினாயில் பாட்டில் ஆக்கிரமிச்சுக்குதே'' என்கிறார்.

கிருமிகளுக்கு டிஷ்ஷூம் டிஷ்ஷூம்!

த்ரவிதா இப்படி ஒரு யோசனையைச் சொன்னதும், பாராட்டி ஊக்குவித்த அப்பா, அதை உடனடியாக வீட்டில் செயல்படுத்தியிருக்கிறார்.

''அதோடு, என்னோட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடமும் இதைச் சொன்னேன். அவங்களும் வீட்டில் செய்துபார்த்து பாராட்டினாங்க. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்துபாருங்க. கிருமிகளை 'டிஷ்ஷூம் டிஷ்ஷூம்’ பண்ணுங்க'' என்று விளம்பர பாணியில் சொல்லிச் சிரிக்கிறார் த்ரவிதா.

நாமும் 'டிஷ்ஷூம் டிஷ்ஷூம்’ பண்ணலாமா?