ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

சச்சினின் முழு உருவ கேக் ஒன்றைச் செய்து கண்காட்சியாக வைத்துள்ளது, சேலம் சரவணாஸ் பேக்கரி. 100 கிலோ சர்க்கரை, 200 முட்டைகளைப் பயன்படுத்திச் செய்துள்ள இந்த கேக்கின் எடை, 600 கிலோ. சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் சாதனைகளைப் பாராட்டியும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைச் சிறப்பிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட இந்த கேக்கை, செல்போனில் படம் எடுத்து ரசிக்க, சுட்டிகள் கூட்டம் அலை மோதுகிறதாம்.

 படம்: க.தனசேகரன்

பென் டிரைவ் !

பொழுதுபோக்குப் பூங்காக்களில் இருக்கும் ரோலர்கோஸ்டர், கனடாவைச் சேர்ந்த 'நிக் கோத்ரியா’ (Nick Cottreau) என்ற இளைஞரை மிகவும் ஈர்த்தது. அதன் காரணமாக, தனது படுக்கை அறையில் மினி ரோலர்கோஸ்டரை அமைத்திருக்கிறார்.  அதில் ஆட்களுக்குப் பதிலாக, பந்து மட்டுமே உருண்டோடிச் செல்லும்.  தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களால் இதை வடிவமைத்து இருக்கிறார். இதற்காக, சுமார்

பென் டிரைவ் !

2 லட்சம் செலவு செய்திருக்கிறார். ஒரு முனையில் பந்தை உருட்டிவிட்டால்... அது, 7 நிமிடங்கள் பயணம் செய்து மறுமுனையை அடையும்.

பென் டிரைவ் !

 உலகப் பிரசித்தி பெற்ற 'அமேசான்’ பதிப்பகம், ‘Fantasy, Horror and Science Fiction’ என்ற தலைப்பில் முதல் 100 புத்தகங்களுக்கான மதிப்பீட்டைச் சமீபத்தில் வெளியிட்டது. புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் வரிசையில், கேரளாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனின் புத்தகமும் இடம்பெற்றுள்ளது. 9-ம் வகுப்பு படிக்கும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தமிழரான வெங்கிடேஷ் விஜய் எழுதிய The Blakes -The Greek Mission’   என்கிற புத்தகம், 83-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர், ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் எழுதிய ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகம், முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 

பென் டிரைவ் !