Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சிறிய நெடுஞ்சாலை!

 பெயரில் நெடுஞ்சாலையை வைத்துக்கொண்டிருந்தாலும், இந்தியாவின் மிகச் சிறிய தேசிய நெடுஞ்சாலை,NH 47A.  இந்தச் சாலை, கொச்சியின் குண்டனூர் நகரில் ஆரம்பித்து, கொச்சித் துறைமுகம் வரை ஆறு கிலோமீட்டர் மட்டுமே இருக்கும். இந்தியாவின் மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலை, NH-7. இது, உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் ஆரம்பித்து, கன்னியாகுமரி வரை 2,369 கிலோமீட்டர் நீள்கிறது. பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர் ஆகிய நகரங்களின் வழியே இந்தச் சாலை செல்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

கொசுவும் கோடாவும்

ஆகஸ்ட் 20ம் தேதி, கொசு ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.  1897 ஆகஸ்ட் 20 அன்றுதான், 'மலேரியா நோய் பரவுவதற்குக் கொசுக்களே காரணம்’ என்ற உண்மை கண்டறியப்பட்டது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

'கோடா’ என்ற அரபுச் சொல்லுக்கு, 'குதிரை’ என்று அர்த்தம். சென்னைக் கோட்டையைப் பிடிக்க வந்த ஆற்காடு நவாபு, தன் குதிரைப் படையின் குதிரைகளை வைத்திருந்த இடம்தான், இப்போதைய கோடம்பாக்கம்.

வாலாட்டும் நாய்!

நாய் வாலாட்டினால், நன்றியை வெளிப்படுத்துகிறது என்பார்கள். அதிலும்  வித்தியாசம் இருக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. ஒரு நாய், தனது வாலை இடதுபுறமாக ஆட்டினால், அது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அர்த்தமாம். வலதுபுறமாக ஆட்டினால், கோபமாக இருப்பதாக அர்த்தமாம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

நாய்கள் வாலாட்டும் திசைக்கு ஏற்ப, அவைகளின் நோக்கம் மாறுபடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், வாலாட்டும் உங்கள் செல்ல நாயைக் கொஞ்சுவதற்கு முன், இதைக் கவனிங்க.

ஸ்வீட் சிறுவாணி!

தண்ணீரில் இருக்கும் தாது உப்புகள், இடத்துக்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன. தண்ணீரில் சோடியம் நைட்ரேட், சோடியம் கார்பனேட், பை கார்பனேட் போன்ற உப்புகள் பல்வேறு விதங்களில் கலந்து இருக்கும். இதனால், அந்த நீரின் சுவை வேறுபடும். மழைத் தண்ணீர், மூலிகைச் செடிகள்  நிறைந்த சமவெளியில் ஓடிவரும்போது, அதில் இயற்கையான குளோரைடு கலக்கும். பை கார்பனேட் மிகக் குறைவாக இருந்தால், அந்த நீர் சுவையாக இருக்கும். அந்த வகையில்... சிறுவாணித் தண்ணீர், மிகச் சுவையானது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஒரு மரம், 250 பழங்கள்!

ஜெர்மனியில், ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களைக் காய்க்கச் செய்து, சாதனை படைத்துள்ளார், ஜெர்மனியின் வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் உள்ள 'சித்ஹாம்’ என்ற இடத்தைச் சேர்ந்த 'பால் பார்னெட்’ (Paul Barnett).. இவரது தோட்டத்தில்தான் இந்த மரம் இருக்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

இதற்கு முன்பு, தக்காளியும் உருளைக்கிழங்கும் காய்க்கும் வினோதச் செடியை ஒருவர் வளர்த்தார். ஆனால், ஒரே மரத்தில் பல இன ஆப்பிள்களை வளர்த்து, கின்னஸ் சாதனை படைத்தவர், இவரே.

வியர்க்கும் நகக்கண்!

கோடைக்காலம் வந்தாச்சு. உடம்பில் ஓர் இடம் பாக்கி இல்லாமல், வியர்த்துக்கொட்டும். பார்ப்பதற்கு உலர்ந்த ஓடுபோலக் காணப்பட்டாலும், நமது கை மற்றும் கால் விரல்களில் இருக்கும் நகங்களிலும் 18 சதவிகிதம் ஈரப்பதம் இருக்கும். எனவே, அதுவும் வியர்வையை வெளியிடுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது மட்டுமா? நாக்கைப் போல நகங்களும் நோய் காட்டும் கண்ணாடி என்கிறார்கள். சிறுநீரகப் பிரச்னை, ஆஸ்துமா, வைட்டமின் குறைபாடுகள் ஆகியவற்றை ஒருவரின் நகத்தைப் பார்த்தே  கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்