Published:Updated:

‘முடி முளைக்க வைக்கும், பீக்களா செடி!’

மாத்தி யோசிமண்புழு மன்னாருஓவியம்: ஹரன்

‘முடி முளைக்க வைக்கும், பீக்களா செடி!’

மாத்தி யோசிமண்புழு மன்னாருஓவியம்: ஹரன்

Published:Updated:

தென்னை மரம் வைச்சிருக்கிறவங்களுக்கு... ஒரு இனிப்பான செய்தி. ‘வெர்ஜின் அட்லான்டிக்’ (Virgin Atlantic) ங்கிற இங்கிலாந்து நாட்டு விமான நிறுவனம் தேங்காய் எண்ணெயில... விமானத்தை ஓட்டி சாதனை செய்திருக்கு. அதாவது, 20% தேங்காய் எண்ணெய், 80% மண்ணெண்ணெயை (சீமை எண்ணெய்தான்) கலந்து ஓட்டினாங்களாம். 2008-ம் வருஷத்துல இருந்து... அப்பப்ப தேங்காய் எண்ணெயில விமானத்தை ஓட்டுறதை இந்த நிறுவனம் வழக்கமா வைச்சிருக்கு. உலகத்திலேயே முதல்முறையா... தேங்காய் எண்ணெயில விமானம் ஓட்டுனது இந்த நிறுவனம்தான். எல்லா விமானங்கள்லயும் தேங்காய் எண்ணெய் கலந்து ஓட்டுனா சுற்றுச்சூழலும் கெடாது, விவசாயிகளுக்கும் நன்மைதானே..!

‘முடி முளைக்க வைக்கும், பீக்களா செடி!’


திருநெல்வேலினு சொன்னா சட்டுனு ‘அல்வா’ ஞாபகம்தான் வரும். குறிப்பா ‘இருட்டுக் கடை’  அல்வா சுவையே அலாதிதான். அந்த சுவைக்குப் பின்னாடி இருக்கிற நுட்பம் எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். நெல்லையப்பர் கோயில் பக்கத்துல இருக்கிற இந்த கடையில தினமும் புதுசாதான் அல்வா கிண்டுவாங்க. அல்வாவுக்குத் தேவையான கோதுமைமாவை... அந்தக் காலத்துல இருந்து, இப்பவரைக்கும் கையிலதான் அரைக்கிறாங்க. அதனாலதான் தினமும் குறிப்பிட்ட அளவுக்குத்தான் அல்வா கிண்ட முடியுது. மத்த கடை அல்வாவுக்கும், ‘இருட்டுக் கடை” அல்வாவுக்கும் உள்ள சுவை வித்தியாசத்தின் மூலக்காரணம் இதுதான். தினமும் தேவையான... கோதுமைமாவை... அன்னைக்கு காலையிலதான் அரைச்சு எடுக்குறாங்க. ஆனா, நாம அல்வா கிண்ட... இயந்திரத்துல கொட்டி, மாவு அரைக்கிறோம். அது கை பொறுக்க முடியாத சூட்டுல இருக்கும்.
இவ்வளவு சூட்டுல மாவு அரைக்கும் போது, அதுல இருக்கிற பாதி உயிர்ச்சத்துங்க காலி. மீதி உயிர்ச்சத்தை சேமிச்சு வைக்கிறோம்ங்கிற பேர்ல... மாசக்கணக்குல வைச்சிருந்து பயன்படுத்துறது. ‘அரைத்த மாவில்...உயிர்ச்சத்து மூன்று மாதம் வரைதான் இருக்கும்’னு ஊட்டச்சத்து நிபுணருங்க ஆலோசனை சொல்றாங்க. நமக்கு கோதுமை பண்டம்ங்கிறது புதுசு. அதை முறையா பயன்படுத்தத் தெரியுல... ஆனா, நான் வட நாட்டுல பார்த்த விஷயம் ஆச்சர்யமா இருந்துச்சு.
அந்த மக்கள் கோதுமையைப் பக்குவமா சாப்பிடறாங்க. அதாவது, சின்ன இயந்திரம் (மிக்ஸி மாதிரி இருக்கு. இதுல மாவு அதிகமா சூடாகாது) ஒண்ணுல... தினமும் தேவையான கோதுமையைக் கொட்டி மாவு அரைச்சு, சமைக்கிறாங்க. இதனால... சுவையும் கூடுது. சத்தும் சேதாரம் இல்லாம இருக்கு. நம்ம கம்பு, சோளம், கேழ்வரகு... சிறுதானியத்தையும் இதுமாதிரி தேவையானப்ப... மட்டும் மாவு அரைச்சு சாப்பிடலாமே...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘முடி முளைக்க வைக்கும், பீக்களா செடி!’

நம்மளோட நட்பா இருந்து... நமக்கு கெடுதல் செய்துட்டா... அவரை ‘கருங்காலி’னு சொல்றதுண்டு. கருங்காலின்னா.... கருப்பு நிறத்துல கால் உள்ளவங்களா?னு கூட சிலருக்கு சந்தேகம் வரும். இந்த பேருக்குப் பின்னாடி மிகப் பெரிய விஷயம் இருக்கு. அதாவது, கருங்காலி ஒரு வகை மரம் இருக்கு. இதுக்கு ஈட்டி, தோதகத்தினு இன்னும் பல பேரு இருக்கு. இந்த மரத்துல செய்த ஈட்டியை வைச்சுத்தான்... சண்டைப் போடுவாங்களாம். மரம் இரும்பு கணக்கா இறுகி இருக்கும். இந்த கருங்காலி மரத்துலதான் கோடாரி செய்வாங்க. இந்த கோடாரியை வைச்சுத்தான் கருங்காலி மரத்தை வெட்டுவாங்க. தன்னோட இன மரத்தை... தானே அழிக்க, கருங்காலி மரம் உதவுது. அதனாலத்தான் கெடுதல் வேலை செய்யறவங்களுக்கு ‘கருங்காலி’னு பேரு வைச்சிருக்காங்க.

‘இந்த மூலிகை அமேசான் காடுகளில் இருந்து, கொண்டுவரப்பட்டது. இதைத் தடவினால்... ஒரு முடி கூட இல்லாத வழுக்கைத் தலையில் கூட கரு, கரு... என்று முடி வரும். அதற்கு இன்றே எர்வாமேட்டின் ஆர்டர்... செய்ய மிஸ்டு கால் கொடுங்க’னு சொல்லி ஆயிரக்கணக்குல பணத்தைப் புடுங்கிற விளம்பரத்தைப் பார்த்திருப்போம். அவன் கூவுற, கூவைப் பார்த்தா அமேசான் காடு இதுவரைக்கும் பாதி அழிஞ்சிருக்கும். ஆனா, உண்மையில அந்த எர்வாமேட்டினோட மூலப் பொருள் நம்ம ஊர் ‘பீக்களா செடி’தான்.
இந்தச் செடியோட இலை... அருமையான கிருமிநாசினி. இதோட சாறை, தலையில தடவினா... கிருமிகளை அழிச்சு... முடி வளரத்தூண்டும். இதைத் தவிர இன்னும் பல விதமான பயன்பாட்டுக்கும்... இந்தப் பீக்களா செடி பயன்படுது. இதுல முக்கியமா சொல்ல வேண்டிய விஷயம்... அதோட பேருக்கு ஏத்தமாதிரி கடுமையான நாத்தம் அடிக்கும். அதை பொறுத்துக்கிட்டா... பலன் நிச்சயம். இந்தச் செடியை கர்நாடக மாநிலத்துல ஆயிரக் கணக்கான ஏக்கர்ல சாகுபடி பண்ணி... வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யுறாங்க. இதுதான், எர்வாமேட்டின்... எருமை மேட்டின்ங்கிற பேர்ல திரும்ப வருது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism