Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா

'தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முருங்கை!

மதுரை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில், நவம்பர் 13ம் தேதி  உள்நாட்டு நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு; 14ம் தேதி இயற்கை வழி பூச்சி மேலாண்மை; 18ம் தேதி செடிமுருங்கை மற்றும் பல்லாண்டுகால முருங்கை சாகுபடித் தொழில்நுட்பங்கள்; 19ம் தேதி மானாவாரி நிலங்களில் மரம் வளர்ப்பு; 21ம் தேதி ஒருங்கிணைந்த களைகள் கட்டுப்பாடு குறித்த பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2422955

காடை!

தருமபுரி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 12ம் தேதி காடை வளர்ப்பு; 20ம் தேதி இறைச்சிக்கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04342-288420

காளான்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 26ம் தேதி காளான் வளர்ப்பு; 28ம் தேதி இயற்கைப் பண்ணையம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626

நெல்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 14ம் தேதி கார்த்திகைப் பட்டத்துக்கேற்ற நெல் சாகுபடி முறைகள்; 20ம் தேதி மதிப்புக்கூட்டிய சோயா பொருட்கள் தயாரித்தல்; 21ம் தேதி காய்கறிப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை; 21ம் தேதி தீவனப் பயிர்கள் மற்றும் தீவன விதை சாகுபடிக் குறிப்புகள்; 25 மற்றும் 26ம் தேதிகளில் கறவைமாடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371

நாட்டுக்கோழி!

திருப்பூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 18ம் தேதி கறவைமாடு வளர்ப்பு; 19ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு; 20ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

தொலைபேசி: 0421-2248524

பஞ்சகவ்யா!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத் தில் நவம்பர் 18ம் தேதி மீன் வளர்ப்பு; 20ம் தேதி பஞ்சகவ்யா, மண்புழு உரம் தயாரிப்பு; 25ம் தேதி வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு,

செல்போன்: 9941647893, 9488575716

 பல்பொருள் வார சந்தை!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வேளாண் தொழில்நுட்ப மைய வளாகத்தில் (சிவானந்தா குருகுலம் அருகில்) நவம்பர் 15ம் தேதி 'பல்பொருள் வார சந்தை’ தொடக்க விழா நடைபெற உள்ளது. சந்தையில் சிறுதானியங்கள், மசாலாப் பொடிகள், காய்கறி கள் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் மற்றும் கால்நடைகள் விவசாயிகளின் மூலம் நேரடியாக விற்கப்படவுள்ளது. இதில் முன்னோடி விவசாயிகள், வேளாண் மற்றும் கால்நடைப் பேராசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஏற்பாடு: வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்.

தொடர்புக்கு, செல்போன்: 8939963163, 9840690222

ஆந்திராவில் நடக்கும் அறிவியல் மாநாடு!

ஆந்திர மாநிலம், குண்டூர், ஆச்சார்யா நாகர்ஜூனா பல்கலைக்கழகத்தில் நவம்பர் 28 முதல் 30ம் தேதி வரை 6வது இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் அறிவியல் சம்பந்தப்பட்ட பிரபல விஞ்ஞானிகள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கிறார்கள். மாணவர்கள், இளம் விவசாயிகள், இளம் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு மாநாட்டில் கலந்துகொள்ள முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம், தரமணி, சென்னை.

தொலைபேசி: 04465282342

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 04466802927 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்பு கொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism