Published:Updated:

கத்தி விவசாயிகளின் படமா?

விமர்சனம்த. ஜெயகுமார்படங்கள்: எல். ராஜேந்திரன், வீ. சிவக்குமார், பா. காளிமுத்து, தி. ஹரிஹரன் அ. பார்த்திபன், அ. நவின்ராஜ்

கத்தி விவசாயிகளின் படமா?

விமர்சனம்த. ஜெயகுமார்படங்கள்: எல். ராஜேந்திரன், வீ. சிவக்குமார், பா. காளிமுத்து, தி. ஹரிஹரன் அ. பார்த்திபன், அ. நவின்ராஜ்

Published:Updated:

'முழுக்க விவசாயிகளின் பிரச்னையை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்’ என்கிற முத்திரையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது தீபாவளிக்கு வெளியான 'கத்தி’. வருமானத்தை மட்டுமே குறியாகக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகில், விவசாயிகளின் பிரச்னைகளை வைத்து படங்கள் வருவதென்பது அத்திப்பூதான்! எப்போதாவது விவசாயம் சார்ந்த ஓரிரண்டு வசனங்களுடன் கைதட்டல்களை அள்ளும் படம் வருவதுண்டு. இதையும் தாண்டி, 'விவசாயிகளின் பிரச்னையை வைத்து படம் எடுத்திருக்கிறேன்’ என்றபடி வரும் படங்களில், அதை முழுமையாகத் தொட்டிருக்க மாட்டார்கள். இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் தண்ணீர் பிரச்னையை கையில் எடுத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது கத்தி.

கத்தி விவசாயிகளின் படமா?

'கமர்ஷியல் படம்’ என்கிற பிரிவில் வந்திருந்தாலும், விவசாயிகளின் நிலங்களை மிரட்டி கையகப்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இதுபோன்ற நிறுவனங்களுக்கு அடியாட்களாகச் செயல்படும் அரசுத் துறைகள், தண்ணீர் பிரச்னை, விவசாயிகள் தற்கொலை, விவசாயம் இல்லாததால் வெளியூர்களில், வெளிநாடுகளில் கூலி வேலை செய்யும் இளைஞர்கள் என பல பிரச்னைகளையும் 'கத்தி’ தொட்டிருப்பது, சிறப்பு. 'கதை, இசை என்று பலவும் சுடப் பட்டிருக்கின்றன’ என்பது உட்பட 'கத்தி’க்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவிக் கிடந்தாலும், இப்படியொரு முயற்சியை எடுத்ததற்காக பாராட்டுகளுக்கும் பஞ்சமில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரி, இந்தப் படத்தைப் பற்றி விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?

வையாபுரி (தலைவர், ஐக்கிய விவசாயிகள் சங்கம்):

'தண்ணீரின் அவசியத்தை, நகர மக்களுக்கு நல்லாவே புரிய வெச்சிருக்கு படம். கிராமங்களில் குடிக்கவும், விவசாயம் செய்யவும் தண்ணீர் இல்லாமல் எவ்வளவோ சிரமப்படுறோம். அந்த வகையில், நகர மக்கள தண்ணி இல்லாம சில நாள் தவிக்க வெச்சதில ஒரு விவசாயியா எனக்கு திருப்திதான். நகரத்துல குடிக்கிற பால்ல இருந்து, சாப்பிடுற சாப்பாடு வரைக்கும் எங்களோட உழைப்பு இருக்கு. ஆனா, எங்களுக்கு ஒரு பிரச்னைனா யாரும் கண்டுக்கிறதில்ல. இப்போ எங்களோட பிரச்னைகளையும் அவங்கள உணர வெச்சிருக்கு இந்தப் படம். ஆனா, ஒரு நெருடல், நிலத்தடி நீரை எடுத்து விவசாயத்துக்குப் பயன்படுத்துறதுதான் படத்தோட முக்கியமான கருத்தா இருக்கு. இது ரொம்ப தப்பு. ஆறு, ஏரி, குளம், குட்டைனு மேல்மட்டத்துல இருக்கிற தண்ணியைத்தான் விவசாயம், குடிநீர்னு எல்லாத்துக்கும் பயன்படுத்தணும். இதுக்கு மழைநீரை அறுவடை செய்யற வகையில நீராதாரங்களைச் சீரமைக்கணும். இதையும் வலியுறுத்தியிருந்தா... படம் இன்னும் முழுமை அடைஞ்சிருக்கும்.

கத்தி விவசாயிகளின் படமா?

கு. செல்லமுத்து (தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம்):

'பல ஆண்டுகளாக குளிர்பான நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். இது படத்தில் வெளிப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. அதேசமயம், 'ஊடகங்கள் நடிகைகளின் நாய்களுக்கும், முறுக்குக்கம்பிகளின் விளம்பரத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விவசாயிகளின் பிரச்னைக்குக் கொடுப்பதில்லை’ என்று சொல்லி மீடியாக்களை ஒட்டுமொத்தமாக தாக்குவது தவறு. முன்பெல்லாம் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். ஆனால், 'பசுமை விகடன்’ வந்த பிறகு விவசாயிகளின்

கத்தி விவசாயிகளின் படமா?

பிரச்னைகளுக்கு அனைத்து மீடியாக்களும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. மரபணு மாற்றப்பட்ட விதைப் பிரச்னையில் எங்களின் போராட்டத்துக்கு இன்றுவரையிலும் உறுதுணையாக இருப்பது விகடன்தான். விதர்பா விவசாயிகள் தற்கொலை பிரச்னை என்று பல பிரச்னைகள் வெளியில் வந்ததும் மீடியாக்களின் மூலமாகத்தான். சொல்லப் போனால், இந்தப் படத்தின் கதைக் கருவே மீடியாக்கள் மூலமாகத்தானே கிடைத்திருக்கும். பிரச்னைகளுக்கு காரணமே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எடுக்கும் தவறான முடிவுகள்தான். இதையெல்லாம் இன்னும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். எது எப்படியோ, விவசாயிகளுக்காக படம் எடுத்த இயக்குநருக்கும், நடிகருக்கும் வாழ்த்துக்கள்.''

மருதமுத்து (இயற்கை விவசாயி, தவசிமடை, திண்டுக்கல் மாவட்டம்):

'இன்றைக்கு விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுக்கு விற்கிறார்கள் என்றால், அது தண்ணீர் பற்றாக்குறையால் மட்டும் இல்லை. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லை என்பதாலும்தான். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தடையில்லா 24 மணி நேர மின்சாரம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு 8 மணிநேர மின்சாரம்தான் கிடைக்கிறது. அதுவும் எப்போது வரும் என்று தெரியாது. எந்த ஆட்சி வந்தாலும் இதே கதைதான். ஒரு கார்ப்பரேட் மோட்டார் கம்பெனிக்கு ஒரு நாளைக்கு 3 லட்சம் யூனிட் மின்சாரம் வரை வழங்கப்படுகிறது. ஒரு விவசாயியின் 5 ஹெச்.பி. மோட்டாருக்கு 32 யூனிட் மின்சாரம்தான் (ஒரு நாளைக்கு 8 மணி நேரம்) தேவைப்படுகிறது. ஒரு கம்பெனிக்கு கொடுக்கிற மின்சாரத்தை வைத்து, பத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைய முடியும். இதையெல்லாம் கருத்தில் கொண்டிருக்கலாம். என்றாலும், இப்படியொரு படத்தை எடுத்ததற்காகவே பாராட்டலாம்.'

சுப்பு, இயற்கை விவசாயி, மதுராந்தகம்:

'மற்ற துறைகளில் ஒரு பிரச்னை என்றால், எல்லோரும் ஒன்றாகச் சேருகிறார்கள். ஆனால், விவசாயிகள் ஒன்று சேருவதில்லை என்பதை இந்தப் படத்தின் மூலமாக வெளிச்சமிட்டிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். இனியாவது விவசாயிகளும் மக்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.'

கத்தி விவசாயிகளின் படமா?

இளங்கீரன் (தலைவர், வீராணம் பாசன விவசாயிகள் சங்கம்): 'பூசணிக்காய் செடியில காய்க்குதா, மரத்துல காய்க்குதா’னு தெரியாத வர்க்கத்துக்கு, விவசாயிகளோட பிரச்னைகளை தலையில குட்டிச் சொல்லியிருக்கார் இயக்குநர். அதேசமயம், விவசாயிகளோட பிரச்னைகளை மீடியாக்கள் கையாள்வதில்லைனு சொல்றது தவறு. இதுமாதிரியான காட்சிகள் கதைக்காக வைக்கப்பட்டிருக்கலாம். நிஜத்தில், மீடியாக்கள்தான் எங்களின் ஒரே ஆபத்பாந்தவன். 'வீராணம் ஏரித் தண்ணீரை விவசாயத்துக்கு முக்கியமாக பயன்படுத்த வேண்டும். சென்னையின் குடிநீருக்காக கொண்டு போகக்கூடாது’னு நாங்க போராடினப்போ 'பசுமை விகடன்’தான் விவசாயிகள் பக்கம் நின்னுச்சு. அதேபோல, தமிழக விவசாய வரலாற்றுல மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினவர் நம்மாழ்வார் ஐயா. அவரோட கருத்துக்கள் எல்லாம் படத்துல இருக்கு. அவரைப் பத்தியும் நாலுவரி சொல்லி இருந்தா சந்தோஷமா இருந்திருக்கும்.''

கணேஷ்ராஜா (இயற்கை விவசாயி, திருநெல்வேலி):

'படத்தில் விவசாயிகள் தற்கொலையைப் பெரிதாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை குறைவு. இதுமாதிரி காட்டினால், விவசாயத்துக்கு வர நினைப்பவர்கள்கூட பயந்துவிடுவார்கள். இயற்கை விவசாயம், முறையான தண்ணீர் சேமிப்பு, அளவான வருமானம் என்று தன்னிறைவோட வாழும் விவசாயிகளும் இங்கே இருக்கிறார்கள். அவர்களையும் காட்டியிருந்தால், விவசாயத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் படம் இருந்திருக்கும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism